Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த வருட மகர சங்கராந்தி பிரவேசத்தால் யாருக்கு ராஜயோகம், யாருக்கு ஆபத்து..? | Makar Sankranti Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த வருட மகர சங்கராந்தி பிரவேசத்தால் யாருக்கு ராஜயோகம், யாருக்கு ஆபத்து..? | Makar Sankranti Rasi Palan 2023 in TamilRepresentative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி  மாதம் 30 ஆம் தேதி (ஜனவரி 14) சனிக்கிழமை கிருஷ்ணபட்சம், அஷ்டமி திதி சித்திரை நட்சத்திரம், சுகர்ம நாமயோகம் பாலவ கரணத்தில் இரவு 8.45 மணிக்கு சூரிய உதயாதி 35.17 நாழிகை அளவில் சிம்ம லக்னம் மிது நவாம்சையில் சங்கராந்தி பகவான் மகர ராசியில் பிரவேசிக்க உள்ளார். இதனால், அடுத்த வருடம் ஜனவரி 14 ஆம் தேதி வரை எந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜ யோகம் என்பது பற்றி பார்ப்போம். 

வருடந்தோறும் தை மாதம் முதல் ஆணி மாதம் வரை உத்தராயணம் என்றும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயணம் என்றும் கூறப்படும். அதாவது, ஆடி மாதத்தில் இருந்து தெற்கு திசையில் பயணித்துவந்த சூரிய பகவான், தை மாதத்தில் இருந்து வடக்கு திசையில் பயணிக்க தொடங்குவார். இதை தான் நாம் "தைப் பொங்கல்" என்று கொண்டாடுகிறோம். இதுவே ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இதை "மகர சங்கராந்தி" என்று கொண்டாடுவார்கள். 

இந்த வருட மகர சங்கராந்தி பிரவேசத்தால் யாருக்கு ராஜயோகம், யாருக்கு ஆபத்து..? | Makar Sankranti Rasi Palan 2023 in TamilRepresentative Image

பொதுவாக, ஒவ்வொரு வருடமும் மகர சங்கராந்தி தேவதையின் தோற்றம், பெயர், வாகனம், உடை, உணவு, ஆபரணம், மலர் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு அந்த வருடத்தில் என்ன நன்மை தீமைகள் நடக்கும் என்று சொல்வார்கள். அதன்படி, இந்த வருடம் சங்கராந்தி தேவதை எந்த வாகனத்தில் வருகிறார், அதன் பலன்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம். 

இந்த வருட மகர சங்கராந்தி பிரவேசத்தால் யாருக்கு ராஜயோகம், யாருக்கு ஆபத்து..? | Makar Sankranti Rasi Palan 2023 in TamilRepresentative Image

மகர சங்கராந்தி பலன் 2023:

மகர சங்கராந்தி பிரவேசத்தினால் சுவாதி, சித்திரை, அஸ்தம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தன நாசமும், விசாகம், அனுசம், கேட்டை, மூலம், உத்திராடம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான லாபமும் ஏற்படும். 

அதுவே, அவிட்டம், திருவோணம், சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான நாசமும், உத்திரட்டாதி, பூரட்டாதி, ரேவதி, பரணி, அசுவினி, கிருத்திகை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான லாபமும் ஏற்படும்.

அதேபோல், திருவாதிரை, மிருகஷீரிடம், ரோகிணி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜயோகமும், பூசம், ஆயில்யம், புனர்பூசம், பூரம், உத்திரம், மகம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜ வெகுமானமும் கிடைக்கும். 

இந்த வருட மகர சங்கராந்தி பிரவேசத்தால் யாருக்கு ராஜயோகம், யாருக்கு ஆபத்து..? | Makar Sankranti Rasi Palan 2023 in TamilRepresentative Image

மகர சங்கராந்தி பிரவேசம் பஞ்சாங்க குறிப்பு:

மகர சங்கராந்தி தேவதையின் பெயர்: ராக்ஷஸீ - யுத்தம்

வஸ்திரம்: சிகப்பு - பயம் கணக்கர்களுக்கு பீடை

வாகனம்: புலி - மிருக பயம் இருக்கும்

அபிஷேகம்: கங்கா தீர்த்தம் - ஆறுகளில் வெள்ளம்

ஆபரணம்: வைடூரியம் - கலகம், ரோக பயம்

கந்தம்: குங்குமம் - சௌபாக்கியம், பிராமணர்களுக்கு பயம்

ஆயுதம்: கட்கம் - யுத்தம்

மலர்: சிறு செண்பகம் - பிராமணர்களுக்கு சௌக்கியம்

சாமரம் (விசிறி): நீலம் - பயிர் நாசம்

சத்திரம் (குடை): ரவுப்பியம் - இரும்பு விலை ஏற்றம்

பாத்திரம்: தாமிர்ஃஅம் - சுபிட்சம், விருஷ்டி

வாத்தியம்: மகாபேரி - யுத்தம்

போஜனம்: பாயாசம் - வியாதி, பீடை

ஜாதி: துவி ஜென்மம் - மிலேச்சர்களுக்கு பீடை

முகபலன்: குரோதமுகம் - தானிய விருத்தி

பட்சம்: கிருஷ்ணபட்சம் - வியாதி

திக்கு: தெற்கு - சத்ரியர்கள், பிராமணர்களுக்கு சௌபாக்கியம், வைசியர்கக்கு பீடை

வாரம்: சனிக்கிழமை - வியாதி பயம்

லக்னம்: ஸ்திர லக்னம் - தானிய குறைவு, சிம்ம லக்னம் - புழுக்கம், ஜெகத் சுகம்

காலம்: ராத்திரி காலம் - கோபாலர்களுக்கு பீடை

குறிப்பு: பஞ்சாங்கத்தில் சொன்னபடி, மகர சங்கராந்தியினால் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தவர்கள் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது பாதிப்புகளை குறைத்து, மேன்மையை கொடுக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்