Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இவரின் சுறுசுறுப்பு மற்ற ராசிக்கும் குஷி அளிக்கும்.... 19.12.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan: இவரின் சுறுசுறுப்பு மற்ற ராசிக்கும் குஷி அளிக்கும்.... 19.12.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி  4  ஆம் நாள் திங்கட்கிழமை (19.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்-  பயணம்

விருச்சிகம்- போட்டி

தனுசு- பொறுமை

மகரம்- தடங்கல்

கும்பம்- பாராட்டு

மீனம்- வரவு

நல்ல நேரம்

காலை:  9:15- 10:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Part 1:  மேஷம்- கன்னி ராசிபலன் (19.12.2022, திங்கள்)

Nalaya Rasi Palan: இவரின் சுறுசுறுப்பு மற்ற ராசிக்கும் குஷி அளிக்கும்.... 19.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் புதுமையான மாற்றங்கள் உண்டாகும். தொழிலில் உண்டாகும் மாற்றத்தை ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் இருக்கும். குடும்பத்தினர் மூலம் நல்ல அனுபவம் கிடைக்கும். மனதிற்கு விருப்பமானவர் உடன் அதிக நேரத்தை செயல்பட முடியும். வெளியூர் பயணம் ஏற்படும். ஆரோக்கியமாக உணர முடியும். பயணம்! 

அதிர்ஷ்ட நிறம்: அரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்:  6

Nalaya Rasi Palan: இவரின் சுறுசுறுப்பு மற்ற ராசிக்கும் குஷி அளிக்கும்.... 19.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்கள் கலகலப்பான மனநிலை இன்று போட்டியாக இருக்கும். மனதில் நினைத்த இலக்கை அடைய கடுமையான போராட்டம் இருக்கும். காதல் வாழ்வில் அன்பு அதிகரிக்கும். உங்கள் வேலையை முடிக்க உதவியை எதிர்பார்ப்பீர். இல்லற வாழ்வில் பொறுமை தேவை. உணவு பழக்கம் வயிறு வலி, செரிமான பிரச்சனை போன்ற பிரச்சனை அளிக்கும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் 

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இவரின் சுறுசுறுப்பு மற்ற ராசிக்கும் குஷி அளிக்கும்.... 19.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

நீங்கள் இன்று வழக்கத்தை விட அதிகமாக நிதானம் காட்டுவீர். உங்கள் துறையின் மீது ஒரு நம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் இன்று காட்டும் பொறுமை புதிய வாய்ப்பை உருவாக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் மீது புரிதல் ஏற்படும்.  குடும்ப உறுப்பினரின் ஆசையை நிறைவேற்ற முடியும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. பொறுமை! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: இவரின் சுறுசுறுப்பு மற்ற ராசிக்கும் குஷி அளிக்கும்.... 19.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் ஏற்பட்ட சிக்கலை சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். வியாபாரத்தில் பெரியளவு லாபம் இருக்காது. உங்கள் நேர்மையான நடத்தை புதிய மனிதர்கள் நட்பை உருவாக்கிவிடும். வீட்டில் அதிக நேரம் செலவிட முடியும்.  மருத்துவர் ஆலோசனை ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தடங்கல்! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: இவரின் சுறுசுறுப்பு மற்ற ராசிக்கும் குஷி அளிக்கும்.... 19.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய  தினம் போராட்டமாக இருக்கும். எதிர்பார்த்த நிலையை அடைய மீண்டும் முயற்சியும் நிலை உண்டாகும். வழக்கமான காரியத்தை கூட அதிக நேரம் செய்யும் நிலை ஏற்படும். ஆனால் உங்கள் வேலையின் முடிவு புகழை கூட்டும். குடும்ப உறுப்பினர் ஆதரவு தேவைப்படும். உடல்நலத்தில் சோர்வு ஏற்படும். பாராட்டு! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: இவரின் சுறுசுறுப்பு மற்ற ராசிக்கும் குஷி அளிக்கும்.... 19.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று லாபகரமான நாளாக இருக்கும். செலவுக்கு தேவையான பணம் கையில் இருக்கும். தொழில் ஸ்தானம் நிலையாக மாறும். சொத்து மதிப்பு கூடும். குடும்ப வாழ்வில் ஆனந்தம் அதிகமாகும். மனதை அமைதிப்படுத்த யோகா மீது ஆர்வம் பிறக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஒரு தெளிவு வரும். உடல் புத்துணர்ச்சியாக செயல்படும். வரவு! 

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்