Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: நிம்மதியாக இருக்க போகும் ராசிக்காரர் இவரா..! முக்கியமாக இன்று  கும்ப ராசிக்காரரின் நிலை இப்படி உள்ளதே! ஜூன் 13, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 12, 2022 & 15:30 [IST]
Nalaya Rasi Palan: நிம்மதியாக இருக்க போகும் ராசிக்காரர் இவரா..! முக்கியமாக இன்று  கும்ப ராசிக்காரரின் நிலை இப்படி உள்ளதே! ஜூன் 13, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 06:30-  07:30 வரை

மாலை: 04:30- 05:30 வரை

Nalaya Rasi Palan


Representative Image. Also Read: மேஷம் முதல் கன்னி வரை முதல் 6 ராசியின் ஜூன் 13, 2022 தினசரி ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

நன்மையும் தீமையும் நம் செயலின் வெளிபாடு எனபதை அறிந்த உங்களுக்கு இன்றைய தினம் திட்டமிட்டபடி இருக்கும். தொழிலில் அமைதியான சூழ்நிலை நிலவும். செல்வ நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும், ஆனால் சேமிப்பு இருக்கும். இன்று உடல்நலத்தில் சிறிய குறை இருக்கும். பேச்சால் சிக்கல் தோன்றும், வெளியே செல்லும்போது அமைதியாக இருக்க வேண்டும். கல்வியில் ஆர்வம் வரும், புதிய ஞானம் தோன்றும்.  இன்று குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். திட்டம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

சாமத்தியமாகக் காரியங்களைச் சாதிக்கும் உங்களுக்கு இன்று  எதிர்பாராத செல்வ வரவு இருந்தாலும் செலவு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும், செலவு செய்வது மனதுக்கு கொஞ்சம் கசக்கத் தான் செய்யும். தொழிலில் வேகமாக வேலையைச் செய்து முடிப்பீர்கள். இன்று உங்கள் பேச்சால் சிக்கல் இருக்கும், உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக இருக்கவும். குடும்பத்தில் சண்டைகள் உருவாகும், பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். உடல்நலம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் தேவை. விரைய செலவு!       

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு (Sagittarius 2022 Horoscope)

கண்ணில் காதலை வெளிப்படுத்தும் தனுசு ராசிக்காரரே இன்று உங்களுக்கு ஒரு சுமுகமான நாளாகும், செய்யும் வேலையில் வெற்றி காண முடியும். மனம் கொஞ்சம் எதிர்மறை எண்ணத்தால் குழம்பி நிற்கும். அலுவலகத்தில் உங்களுக்கு வகுத்த இலக்கை எளிதில் முடிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கும், ஆனால் முடித்துகாட்டி மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி சுழலும். இல்லற வாழ்வு சிறப்பாக அமையும். பண வரவு சுமாராக இருக்கும். உடல்நலத்தில் கொஞ்சம் கோளாறு இருக்கும். மன உறுதி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 8

மகரம் (Capricorn 2022 Horoscope)

அன்பான குணத்தைக் கொண்ட மகர ராசிக்காரரே இன்று  மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை அறிவீர்கள், மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நேரத்தைத் திட்டமிடுவதால் பணியிடத்தில் வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் கொண்டாட்டம் அதிகமாகும், திருமண வாழ்க்கையில் நல்லுறவு இருக்கும். செலவு பெரியதாக இருக்காது, திருப்திகரமான பண வரவு இருக்கும். மனம் நிறைவாக இருக்கும். சிறப்பான ஆரோக்கியம் இருக்கும். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 4

கும்பம் (Aquarius 2022 Horoscope)

கலை ஞானம் அதிகம் கொண்ட உங்களுக்கு இன்று ஓய்வு எடுக்க அதிக நேரம் இருப்பதாலும், முடிக்காத வேலைகளைச் செய்ய வேண்டிய நிலை உருவாகும், மனம் தைரியமான முடிவெடுக்கும். மனதில் உருவாகும் எண்ணங்களால் நம்பிக்கை துளிர்விடும்.  குடும்பத்தில் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். சிறப்பான பண வரவு இருக்கும். ஆரோக்கியம் சரியாக இருந்தாலும் கவனமாக இருப்பது நன்மையாகும். தன்னம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1

மீனம்(Pisces 2022 Horoscope)

இன்பமான வாழ்க்கை எதிர்பார்த்த உங்களுக்கு இன்று உத்தியோகத்தில் இன்பமான மன நிலை இருக்கும், மருத்துவ துறையில் இருப்பவருக்கு சாதகமான நாளாக இருக்கும். வேலைகளை விரைவாக முடிக்க முயற்சி செய்வீர்கள். சக பணியாளரின் நட்பான அணுகுமுறை பனியில் பல புதிய முயற்சிகள் எடுக்க உதவும். வீட்டில் உங்கள் வெளிப்படையான பேச்சு மதிக்கப்படும். கையில் பணம் திருப்திகரமாக இருக்கும், சில கடன் பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியமான மனநிலை இன்று உடல்நலத்தையும் ஆரோக்கியமாக வைக்கும். சிறப்பு!  

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்