Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

12 Signs of Tamil Horoscope 2022: என்னது இந்த ராசிக்காரர் ரொம்ப  உஷாரா இருக்கனுமா! ஆனால் இந்த ராசிக்காரருக்கு பணப் புழக்கம் அதிகமாக இருக்கும்! ஜூன் 13, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 12, 2022 & 15:15 [IST]
12 Signs of Tamil Horoscope 2022: என்னது இந்த ராசிக்காரர் ரொம்ப  உஷாரா இருக்கனுமா! ஆனால் இந்த ராசிக்காரருக்கு பணப் புழக்கம் அதிகமாக இருக்கும்! ஜூன் 13, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                                 Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 06:30-  07:30 வரை

மாலை: 04:30- 05:30 வரை

12 Signs of Tamil Horoscope 2022

மேஷம் (Aries 2022 Horoscope)

எளிதில் அனைவரிடமும் பழகும் தன்மை கொண்ட மேஷ இராசிக்காரரே இன்று சந்தோஷமாக இருக்கக் கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருக்கும். தொழிலில் பொறுமையாக இருப்பது நல்ல பலன் அளிக்கும், அலுவலகத்தில் நீங்கள் செய்யும் வேலையில் இன்று தவறுகள் நடக்கும்  வாய்ப்பு அதிகமாக உள்ளது. உணவுக் கட்டுப்பாடு வேண்டும், ஆரோக்கியம் சுமார்தான். குடும்பத் தேவைகளில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். செல்வ நிலை ஓரளவு நன்றாக உள்ளது, நிதி நிலையில் செலவு இருக்கும். அனுசரணையாக இருக்கவும்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

சாமத்திய உழைப்பாளியான உங்களுக்கு இன்றைய நாள் நன்றாக இருக்கும். சமூகப்பணி செய்ய ஆர்வம் தோன்றும், சிலர் ஆன்மீகத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள். செலவுகள் சமாளிக்கும் அளவு இருக்கும் . குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் இருக்காது, அன்பான வார்த்தையால் அனைவரையும் ஆனந்தப்படுத்துவீர்கள். அலுவலகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும், உங்கள் மதிப்பு கூடும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.  உடல்நலம் மேம்படும். ஆரோக்கியம்!  

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம் (Gemini 2022 Horoscope)

கடினமான சூழ்நிலையிலும் நியாயமாக இருக்கும் உங்களுக்கு இன்று ஓய்வு எடுக்க அதிக நேரம் இருக்காது, கொஞ்சம் பதட்டமாகக் காணப்படுவீர்கள். கடந்த கால நினைவுகள் உங்களை நிம்மதி அடையச் செய்யும்.அலுவலகத்தில் சீக்கிரமாக பணியை முடித்து பிறரால் பாராட்டப்படுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செல்வ நிலை திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

கடகம் (Cancer 2022 Horoscope)

மனதில் பிரகாசமான எண்ணங்களைக் கொண்ட கடக இராசிக்காரரே இன்று முழுவதும்  மகிழ்ச்சியாக இருப்பீர்கள், இன்று பொறுமையாக இருந்தால் உங்கள் மகிழ்ச்சிக்கு இடையூறு இருக்காது. நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். இன்று தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை வரும். செலவுகள் அதிகமாகும், பணப் பற்றாக்குறை ஏற்படும். இன்று செலவுகள் சுமாராக இருந்தாலும், உணவு உண்ணும்போது கவனமாக இருப்பது எதிர்கால உடல் உபாயத்தைத் தடுக்கும். உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக உள்ளது. திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.   மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம் (Leo 2022 Horoscope)

விடா முயற்சியும் போராடும் குணமும் கொண்ட உங்களுக்கு வெற்றிகள் தேடி வரும், உங்கள் தைரியமான முடிவுகள் தொழிலில் நல்ல முன்னேற்றமாக இருக்கும். கட்டுப்பாடு இல்லாத உணவுப் பழக்கத்தால்  பிரச்சனைகள் வரும், எனவே உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். கல்வியில் புதிய ஞானம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் அன்யோனியம் அதிகமாகும், குடும்பத்தினரின் கருத்து மதிப்பு அளிப்பீர்கள். இன்று பண வரவு உண்டு, செல்வ நிலையில் பாதிப்பில்லை கையில் போதுமான அளவு பண ம் இருக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்காது.  புரிதல்!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம் 

அதிர்ஷ்ட எண்: 7

கன்னி (Virgo 2022 Horoscope)

சந்தோஷமான வாழ்வு வேறு எங்கும் இல்லை நம் செயலின் வெளிப்பாடு தான் இன்பமான வாழ்வு என்பதை அறிந்த உங்களுக்கு வேலைச் சுமை குறைவாக இருக்கும், ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும் அந்த நேரத்திலும் சில முக்கிய பணிகளைச் செய்து முடிப்பீர்கள். இன்று பணம் வழக்கத்தை விட அதிகமாக வரும், சேமிப்பு இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு திடீர் முடிவெடுக்காதீர் அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை அதிகமாக இருக்கும். சிறப்பான ஆரோக்கியம் இருக்கும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6


Representative Image. மேலும் படிக்க: துலாம் முதல் மீனம் வரை அடுத்த 6 ராசியின் ஜூன் 13, 2022 தினசரி ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்