Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Horoscope Tamil: இன்று பொறுமையை இழப்பதால் பிரச்சனையை அனுபவிக்கும் ராசிக்காரர் நீங்களா..? ஜூன் 14, 2022 தினசரி ராசிபலன்..! 

Manoj Krishnamoorthi June 13, 2022 & 14:00 [IST]
Tomorrow Horoscope Tamil: இன்று பொறுமையை இழப்பதால் பிரச்சனையை அனுபவிக்கும் ராசிக்காரர் நீங்களா..? ஜூன் 14, 2022 தினசரி ராசிபலன்..! Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 7:30- 8:30 வரை

மாலை: 4:30- 5:30 வரை

Tomorrow Horoscope Tamil


Representative Image. மேலும் படிக்க: மேஷம்- கன்னி வரை முதல் 6 ராசியின் தினசரி பலன்(14.06.2022) பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.  


துலாம் (Libra 2022 Horoscope)

உங்களுக்கு இன்று உத்தியோகத்தில் இன்பமான மன நிலை இருக்கும், வேலைகளை விரைவாக முடிக்க முயற்சி செய்வீர்கள். சக பணியாளரின் நட்பான அணுகுமுறை பனியில் பல புதிய முயற்சிகள் எடுக்க உதவும். வீட்டில் உங்கள் வெளிப்படையான பேச்சு மதிக்கப்படும், வாழ்க்கைத் துணையுடன் இன்பமாக இருப்பீர்கள். கையில் பணம் திருப்திகரமாக இருந்தாலும் இன்றைய பணத் தேவைகளை சமாளிப்பது கடினமாகும். ஆரோக்கியமான மனநிலை இன்று உடல்நலத்தையும் ஆரோக்கியமாக வைக்கும். ஆனால் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும். சிறப்பு!  

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

உங்களுக்கு இன்று  இருக்கும் தெளிவான சிந்தனை சீரான இன்று குடும்பத்தில் இருக்கும் பொறுப்புகளைத் தெளிவாகக் கையாளத் தூண்டும். உங்கள் அலுவலக பணிகளை  விரைவில் முடிப்பதால் இன்று அதிகமான ஓய்வு நேரம் இருப்பது போலத் தோன்றும், ஆனால் நிலுவையில் இருக்கும் பணியை முடிப்பதுடன் அந்த நேரம் சரியாக முடிந்துவிடும். ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சனைகள் இருக்கும், உடல் சோர்வாக இருக்கும், தரமில்லாத உணவைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். வீட்டில் உங்கள் கோபம் மற்றவரின் மகிழ்ச்சியைப் பாதிக்கும், பொறுமையாக  இருப்பது குடும்பத்தினரின் மன மகிழ்ச்சியைக் கெடுக்காது. காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கல்வி ஸ்தானம் அமோகமாக உள்ளது. உறவினர் வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாகும். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

தனுசு (Sagittarius 2022 Horoscope)

இன்று உங்கள் முன்னேற்றப் பாதையில் பல தடைகள் உருவாகும்,  அதை சமாளிக்கும் வண்ணம் குடும்பத்தினரின் ஆலோசனை உற்சாகப்படுத்தும், தொழிலில் வேலைச் சுமை அதிகமாக இருக்கும். வேலையை முடிப்பதில் சலிப்பு தோன்றும்.  அலுவலகத்தில் தேவையில்லாத சஞ்சலங்கள் இருக்கும். காதல் வாழ்க்கையில் உங்கள் அன்பான சுபாவம் நல்லுறவை அழிக்கும். செல்வ நிலையில் இன்று அதிகமான செலவுகள் இருக்கும். இன்று ஆன்மீக ஸ்தலத்துக்கு செல்ல நினைப்பீர்கள். உடலில் சிறிய தொல்லைகள் இருக்கும், கண் அல்லது காது போன்ற இடத்தில் சிறு தொல்லைகள் இருக்கும். ஊக்கம்! 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Capricorn 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு  வாழ்க்கையை அடுத்த தரத்தில் உயர்த்தும், பணியிடத்தில் சந்தோஷமான சூழல் நிலவும். தொழிலில் நல்ல லாபம் கிடைத்து உங்கள் செல்வ நிலை மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும். உங்கள் அணுகுமுறை வியாபாரத்தில் நம்பிக்கையான வாடிக்கையாளரை உருவாக்கும். எதிர்கால சேமிப்பு அதிகமாகும். குடும்பத்தில் இன்று அனைவருடனும் இணக்கமாக இருப்பீர்கள். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், மன மகிழ்ச்சியுடன் இருக்கும். ஏற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

கும்பம் (Aquarius 2022 Horoscope)

எந்த நிலையிலும் தடுமாறாமல் தெளிவாக முடிவெடுக்கும் திறமை கொண்ட கும்ப ராசிக்காரரே இன்றைய தினம் உங்கள் மனம் அமைதி தேடி செல்லும், இக்கட்டான சூழ்நிலைகளை கடகும் மன உறுதி அதிகமாக இருக்கும். தொழிலில் சில சவாலான தருணங்கள் உதிக்கும். குடும்பத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும்.கையில் பணம் போதுமான அளவு இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

மீனம்(Pisces 2022 Horoscope)

இதுவரை இருந்த தொழில் போட்டிகள் குறையும் நாளாக இன்று இருக்கும், தொழில் முன்னேற்றத்தைப்  பற்றிய சிந்தனை இன்று அதிகமாக இருக்கும், முக்கியமாகக் சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினருடன் பேசும்போது மனம் நிம்மதியாக இருக்கும். நிதி நிலையில் அதிகமான செலவுகள் இன்று இருக்கும், அதை குறைக்க முயற்சி செய்யவும். மாணவர்களின் கல்வி ஸ்தானம் நன்றாக உள்ளது.  உணவு பழக்கத்தால் சில உடல் கோளாறு ஏற்படும். அதிர்ஷ்டம்!

அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்