Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Tamil Daily Rasi Palan:எதிர்பார்க்காத பல நன்மைகள்  நிகழும் அதிர்ஷ்ட ராசி உங்க ராசியா! ஜூன் 24, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi June 23, 2022 & 15:00 [IST]
Tamil Daily Rasi Palan:எதிர்பார்க்காத பல நன்மைகள்  நிகழும் அதிர்ஷ்ட ராசி உங்க ராசியா! ஜூன் 24, 2022 ராசிபலன்..!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 09:45- 10:30 வரை

மாலை: இல்லை

Tamil Daily Rasi Palan

மேஷம் (Aries 2022 Horoscope)

மன தைரியம் அதிகம் கொண்ட மேஷ இராசிக்காரரே இன்று பண வரவு குறைவாக இருந்தாலும் செலவுகள் பெரிதாக இருக்காது. முதிய வயது  மேஷ இராசிக்காரர்களுக்கு உடல்நலத்தில்  நல்ல முன்னேற்றம் காணப்படும், அதனால் ஆரோக்கியமாக இருப்பீர்கள். சிலருக்கு சரியான ஓய்வின்மை இடல் சோர்வைத் தரும். அலுவலகத்தில் நீங்கள் செய்யும் பணி மற்றவர்களுக்கு திருப்திகரமாக இருந்தாலும் உங்கள் மனம் ஏற்றுக் கொள்ளாது. மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் வரும், புதிய ஞானம் தோன்றும்.  இன்று குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள், வாழ்க்கை துணையுடன் அதிகமாக வாக்குவாதம் செய்வீர்கள். காதல் வாழ்க்கையில் வெறுப்பு ஏத்தும்படி நடந்து கொள்வீர்கள். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 9

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

லட்சியத்தை நோக்கி கடுமையாக ஓடும் நீங்கள் இன்று சந்திக்கும் புதிய நபரின் அறிவுரை முன்னேற்றத்தை ஏற்படுத்தும், வெளியில் சந்தோஷமாக இருந்தாலும்  மனம் உள்ளுக்குள் வருத்தமாக இருக்கும். தொழிலில் சில பெரிய தவறுகளை செய்து அதை சரிசெய்ய அதிகமாக சிரமப்படுவீர்கள். இன்று ஓய்வு நேரம் அதிகமாக இருக்கும், சமுக பணியின் மீது ஆர்வம் வந்து சமூகப் பணி செய்வீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை, உங்கள் கையில் இருக்கும் பணம் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். காதல் விவகாரம் சுமாராக உள்ளது. இன்று வீட்டில்  நடக்கும் நிகழ்வுகளை சாதாரணமாக எடுத்து கொண்டால் திருமண வாழ்வு  சிறப்பாக இருக்கும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் (Gemini 2022 Horoscope)

சாமத்தியமாகக்  கடினமான காரியங்களைக் கையாளும் நீங்கள்  இன்று அதிக உழைக்க வேண்டி இருக்கும், உங்கள் உழைப்பு பாராட்டை பெற்ரு தரும்.  சிறப்பான செல்வ நிலை இருக்கும். மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் வரும். அமைதி காப்பது நன்மை, வேலையில் முன்னேற்றம் தோன்றும். குடும்ப வாழ்க்கை மிகவும் சிறப்பாக உள்ளது அனைவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்:  இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

கடகம் (Cancer 2022 Horoscope)

கலை ஞானம் அதிகம் கொண்ட  உங்களுக்கு இன்றைய தினம் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் அதிகமாக இருக்கும். நிதி நிலைமையில் லாப ஸ்தானமாக இருக்கிறது, பண தேவைகள் பூர்த்தியாகும். இன்று உங்களுக்கு ஓய்வு எடுக்க அதிக நேரம் இருப்பதாலும்,  அயராது உழைக்க மனம்  உற்சாகப்படுத்தும். மனதில் உருவாகும் எண்ணங்களால் நம்பிக்கை துளிர்விடும்.  குடும்பத்தில் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள், அவ்வப்போது சிறிய ஊடல்களும் வரும். சிறப்பான உடல்நலம் இருக்கும். வளர்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

சிம்மம் (Leo 2022 Horoscope)

செய்யும் வேலை திறம்படச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகம் கொண்ட சிம்ம ராசிக்காரரே இன்று பணிகளைக் கையாளுவதில் சிரமப்படுவீர்கள், ஆனால் வெற்றிக்காக மிகவும் கடுமையாக உழைப்பீர்கள். உங்கள் கையில் பணப்புழக்கம் எதிர்பார்த்த அளவு  இருக்காது. மாணவருக்கு ஆசிரியரின் மூலம் பாராட்டு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருக்கும். வீட்டில் அமைதியாக இருந்தால்   பிரச்சனையில்லாத நாளாக இருக்கும். மேன்மை! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

கன்னி (Virgo 2022 Horoscope)

அசாதாரணமான செயல்களையும் சர்வ சாதாரணமாக  செய்யும் உங்களுக்கு இன்று உடல் நிலை சிறப்பாக உள்ளது, உங்கள் அலுவலக வேலை சிறப்பாகச் செயல்பட உடல்நலம் ஒத்துழைக்கும். இன்று நீங்கள் புரியும் காரியத்தின் விளைவு உங்களுக்கு புகழ் அளிக்கும். உங்களை முன்னுதாரணமாகச் செய்து பெருமைப்படுத்துவர். மனம் அமைதி பெறக் குழந்தைகளுடன் இருப்பது பலனளிக்கும்.  பண தேவைகள் இருக்கும், கையிருப்பு தேவையைப் பூர்த்தி செய்யாது. நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8


துRepresentative Image. லாம் - மீனம் அடுத்த 6 ராசியின் தினசரிபலன் (24.06.22) பற்றி இங்கு க்ளிக் செய்யும்.


இதுபோன்ற ஜோதிட  செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்