Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : அமைதியான நாள் நிம்மதியான வாழ்க்கை தான்.. 10.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 09, 2022 & 13:05 [IST]
Nalaya Rasi Palan : அமைதியான நாள் நிம்மதியான வாழ்க்கை தான்.. 10.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 23 ஆம் நாள் திங்கட்கிழமை (10.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 06:00- 07:00 வரை

மாலை: 04:45- 05:45 வரை

ராசிபலன் 

துலாம்- புகழ்

விருச்சிகம்- அச்சம்

தனுசு- நிம்மதி

மகரம்- அனுகூலம்

கும்பம்- விவேகம்

மீனம்- ஆர்வம்

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (10.10.2022, திங்கள்)

Nalaya Rasi Palan : அமைதியான நாள் நிம்மதியான வாழ்க்கை தான்.. 10.10.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களுக்கு சுற்றத்தார் மூலம் பாராட்டு கிடைக்கும். மன,ம் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போகும். அலுவலகத்தில் வேலைகள் சிறப்பாக நடக்கும், திறமையான யுக்தி நற்பலன் அளிக்கும். வியாபாரத்தில் நல்ல பெயர் சம்பாதிக்க முடியும். செல்வ நிலை ஓரளவு நன்றாக உள்ளது. 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். காதல் வாழ்வில் மறக்க முடியாத நாளாக இருக்கும். நண்பர்கள் மூலம் நிதி உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் உடல்வலி போன்ற பிரச்சனை இருக்கும்.  புகழ்!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : அமைதியான நாள் நிம்மதியான வாழ்க்கை தான்.. 10.10.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று உங்களுக்கு தொழில் ஏற்படும் குழப்பம் மனதில் பயமாக மாறும். வேலையில் தவறுகள் நடக்க ஆரம்பிக்கும். சிலருக்கு  அலுவலகத்தில் வேலை மாற்றம் ஏற்படலாம். சுய தொழில் செய்பவர்கள் இன்று புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லதாகும்.  நிதி நிலை நன்றாக உள்ளது. 

குடும்பத்தினரின் கனிவான பேச்சு மனதில் தைரியம் அளிக்கும். வீட்டில் நிம்மதி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறையும். நண்பர்களுடன் சேர்ந்து இலக்கை அடைய முயலுவீர். ஆரோக்கியத்தில் பெரிய தொந்தரவு இருக்காது. அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:  3

Nalaya Rasi Palan : அமைதியான நாள் நிம்மதியான வாழ்க்கை தான்.. 10.10.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று தொழில்  அமோகமான வளர்ச்சியைத் தரும், அதனால் உங்கள் வருமானம் திடீரென உயரும். நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும். கல்வியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும், மாணவர்கள் ஆர்வமாக கவனம் செலுத்துவர். 

உங்கள் மனதுக்கு நெருக்கமான நபரைச் சந்தோஷப்படுத்துவீர்கள். குடும்ப வாழ்க்கை சுமுகமாக செல்லும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை என்றாலும்  கவனமாக இருத்தல் உடல்நலத்தை மேம்படுத்தும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: இள சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : அமைதியான நாள் நிம்மதியான வாழ்க்கை தான்.. 10.10.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்களுக்கு அலுவலகத்தில் கிடைக்கும் உதவி வேலையை விரைவாக முடிக்க வழி செய்யும். புதிய திட்டங்கள் பல வேலையில் எளிய வழி அறிய வைக்கும். மாணவர்களுக்கு எதிர்பாராத உதவி கிடைக்கும். செல்வ நிலை ஓரளவு நன்றாக இருக்கிறது.  

திருமண வாழ்க்கையில்  கருத்து வேறுபாடு வரும் வாய்ப்பு உள்ளது.  ஆனால் மாலை நேரம் ஆனந்தமாக செல்லும் .  காதல் வாழ்க்கை இனிமையாக நகரும். உணவில் கவனம் தேவை, வயிறு சார்ந்த தொல்லைகள் ஏற்படும்.  அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்:  7

Nalaya Rasi Palan : அமைதியான நாள் நிம்மதியான வாழ்க்கை தான்.. 10.10.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்கள் சாதுரியமான நடத்தை பணியில் நற்பலனை உருவாக்கி கொள்ளும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய ஆர்டர்கள் கிடைக்கும். செலவு அதிகமாகும் ஆனால் செலவை சமாளிக்கும் பணப்புழக்கம் இருக்கும். 

குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும், வீட்டில் அனைவரின் கருத்தை ஏற்று நடப்பீர். நண்பர்களுடன் பொழுதை அதிகமாகசெலவிடுவீர். உடலுக்கு ஓய்வு தேவைப்படும். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : அமைதியான நாள் நிம்மதியான வாழ்க்கை தான்.. 10.10.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

அலுவலகத்தில் திட்டம்  வகுத்தபடி  உங்கள் காரியம் நடக்காமல் தடையாகும்.  ஆனால் வேலை தொடர்ந்து செய்ய உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி பெற வேண்டுமென்ற ஆசை அதிகமாக இருக்கும். கல்வியில் பல புதிய நுட்பத்தை அறிந்து கொள்ளுவீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

 வீட்டில் பல குழப்பங்கள் நீங்கி அமைதியான சூழல் கிடைக்கும்.  கணவன் மனைவி உறவு நிம்மதியாக செல்லும்.  பொழுதுபோக்கு காரியத்தில் நேரத்தை  செலவிட விரும்பீர். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 3


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்