Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Today Rasi Palan Astrology in Tamil: இன்று முழுவதும் கவனமாக வேண்டிய ராசிக்காரர் நீங்களா! ஆனால் இந்த ராசிக்காரர் இதில் விதிவிலக்கு...ஜூன் 26, 2022 ராசிபலன்! 

Manoj Krishnamoorthi June 25, 2022 & 13:00 [IST]
Today Rasi Palan Astrology in Tamil: இன்று முழுவதும் கவனமாக வேண்டிய ராசிக்காரர் நீங்களா! ஆனால் இந்த ராசிக்காரர் இதில் விதிவிலக்கு...ஜூன் 26, 2022 ராசிபலன்! Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 07:30- 08:30 வரை

மாலை: 03:30- 04:30 வரை

Today Rasi Palan Astrology in Tamil

மேஷம் (Aries 2022 Horoscope)

கடினமான சூழல் வந்தாலும் தைரியத்தைக் கைவிடாத மேஷ ராசிக்காரரே இன்று உங்களுக்கு திறமையை வெளிப்படுத்த உகந்த நாளாக இருக்கும்.பணிகளைப் பகிர்ந்து கொள்ளுவீர்கள், ஓய்வு நேரம் கிடைக்கும், அதனால் பொழுதுபோக்கு விசயத்தில் கவனம் செலுத்த முடியும். குடும்ப வாழ்க்கை சில கவலைகள் இருக்கும், கணவன் மனைவி உறவில் புரிதல் இருக்கும். நிதி நிலை நன்றாக உள்ளது, போதுமான அளவு பணம் கையில் இருக்கும்.கல்வியில் பிரச்சனை இல்லை, ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சனைகள் வரும், மன தைரியம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தைரியம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5 

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

இன்பமான வாழ்க்கை வாழும் உங்க ராசிக்கு இன்று  மிகவும் சௌகரியமான நாளாகும் பலவிதமான சாதனை படைப்பீர்கள், மனம் நிம்மதியாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல மாற்றம் இருக்கும். வீட்டில் உங்கள் மீது நம்பிக்கை பிறக்கும், திருமண வாழ்க்கையில் வாழ்க்கை துணையுடன் வெளிப்படையாக உரையாடுவீர்கள். தன லாபம் இருக்கும், கையில் பணப்புழக்கம் அதிகமாகும். எதிர்கால தேவைக்காக சேமிப்பீர்கள். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக உள்ளது.  மாணவர்கள் கொடுத்த வேலையைச் சரியான நேரத்தில்  முடிப்பதால் பாராட்டு கிடைக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை 

அதிர்ஷ்ட எண்: 2

மிதுனம் (Gemini 2022 Horoscope)

தெளிவான சிந்தனை கொண்ட உங்களுக்கு இன்று மனதில் அமைதி பிறக்கும். பணியிடத்தில் வேலைச் சுமை குறைவாக இருக்கும், ஆனால் முன்னேற்றத்துக்கு சில தடைகள் உருவாகும்.. உங்கள் வெளிப்படையான பேச்சு வீட்டில் உள்ளவர்களை  மகிழ்ச்சியாக்கும்,  காதல் வாழ்க்கையில்  உங்கள் நகைச்சுவை உணர்வு  நல்ல உறவு தரும்.  செல்வ நிலை நன்றாக உள்ளது, எதிர்பாராத லாபம் கிடைக்கும்.  நண்பர்களின் உதவி  தேவைப்படும். உடல்நலத்தில் அக்கறை காட்டிக் கொள்ளுங்கள், ஆரோக்கியத்துக்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். அமைதி! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 5

கடகம் (Cancer 2022 Horoscope)

எந்த சூழலிலும் தடுமாறாமல் நிதானமாக இருக்கும் கன்னி ராசிக்காரரே உங்களுக்கு இன்று மனம் பதட்டமாக இருக்கும், அலுவலகத்தில் உருவாகும் பொறுப்பு சலிப்பை உருவாக்கும். இன்றைய நாளை கடத்துவது சற்று சிரமமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் புரிதல் ஏற்படும். காதல் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்காதீர்கள். செல்வ நிலை கவனம் வேண்டும் தேவையில்லாத செலவை நிறுத்த வேண்டும், உங்கள் செல்வ நிலை இன்று மன பதட்டத்தை அளிக்கும். வியாபாரத்தில் இன்று அதிகமாக உழைக்க வேண்டும். உங்களுக்கு கழுத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம் (Leo 2022 Horoscope)

தலைமை ஸ்தானத்திலிருந்தாலும் கர்வமில்லாமல் இயல்பாகப் பழகும் சிம்ம ராசிக்காரரே இன்று முழுவதும் அமைதியாக இருக்க வேண்டும், உங்களின் பலமான தன்னம்பிக்கை குறைந்ததாக உணருவீர்கள். அலுவலகத்தில் வெற்றியைப் பெறக் கடுமையாக உழைக்க வேண்டும் குறித்த நேரத்தில் முடிக்க அதிக சிரமப்படுவீர்கள். மேலும் கவனமாக இருப்பது பணியில் வரும் தவறுகளைத் தடுக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும், முக்கியமாக மாலை பொழுது நன்றாக இருக்கும் ஆனால் அவ்வப்போது சிறு மோதல்கள் இருக்கும். உடல்நலத்தில் பிரச்சனையில்லை. பாசம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு  

அதிர்ஷ்ட எண்: 7

கன்னி (Virgo 2022 Horoscope)

இன்று பொறுமையாக இருப்பதால் தவறுகள் நடக்காமல் செயல்பட முடியும், வியாபாரத்தில் முழுமனதுடன் அர்ப்பணிப்புடன் உழைப்பீர்கள். உங்களின் தனித்தன்மை வேலையில் நல்ல ரிசல்ட தரும். வீட்டில் திருப்திகரமான சூழல் இன்று முழுவதும் இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையான தருணமாக இருக்கும். உங்கள் திருமண பந்தத்தில் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.  நிதி நிலை சீராக இருந்தாலும், பணம் அதிகமாக செலவாகும் அதை கட்டுபடடுத்த வேண்டும். உடல்நலம் நன்றாக உள்ளது. விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 3


Representative Image. துலாம்- மீனம் வரை அடுத்த 6 ராசியின் தினசரி  ராசிபலன் (26.06.22, ஞாயிறு) பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.  


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்