Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan:பணப் பற்றாக்குறையால் இன்று தடுமாறும் அந்த 2 ராசிக்காரர்கள் நீங்களா..... ஜூன் 26, 2022 ராசிபலன்....! 

Manoj Krishnamoorthi June 25, 2022 & 13:30 [IST]
Nalaya Rasipalan:பணப் பற்றாக்குறையால் இன்று தடுமாறும் அந்த 2 ராசிக்காரர்கள் நீங்களா..... ஜூன் 26, 2022 ராசிபலன்....! Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 07:30- 08:30 வரை

மாலை: 03:30- 04:30 வரை

Nalaya Rasipalan


Representative Image. மேஷம்- கன்னி வரை முதல் 6 ராசியின் தினசரி  ராசிபலன் (26.06.22, ஞாயிறு) பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.  


துலாம் (Libra 2022 Horoscope)

உங்கள் நீதி தவறாது குணம் நியாயமாக நடக்கும் துலாம் ராசிக்காரரே இன்றைய தினம் உங்களுக்கு தடங்கல் நிறைந்த நாளாக இருக்கும். எனவே, இன்று திட்டமிட்டு செயல்படுவது உங்கள் நேரத்தை சரியாக செயல்படுத்த முடியும்.  பணம் அதிகமாக செலவாகும், சமாளிக்கும் வகையில் செல்வ வரவு உள்ளது. வீட்டில் பொறுமையாக இருப்பது அவசியமாகும். மாணவர்களுக்கு  கல்வியில் ஆர்வம் குறையும். ஆரோக்கியத்தில் கை கால் போன்ற பிரச்சனைகள் வரும். உடல்நலக் குறை மன வருத்தம் அளிக்கும். உறுதி!  

அதிர்ஷ்ட நிறம்:  இள மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 9

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

மற்றவர்களின் கருத்துக்கு கொஞ்சம் செவி சாய்த்து அவர்களின்  கருத்தை மதிக்கும் நீங்கள்  இன்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும். உங்கள் அலுவலக வேலைகளை எளியதாக முடித்து ஓய்வு பெறுவீர்கள்.  உங்களின் தொடர் முயற்சி மனதில் படிந்த கவலைகள் அழித்து எதிர்காலத்தை பற்றிய எண்ணங்களை துளிர்விடுவீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும், சேமிப்பு அதிகமாகும். வீட்டில் அன்புடன் நடந்து கொள்வீர்கள். சிறப்பான ஆரோக்கியம் இன்று கிடைக்கும். நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு (Sagittarius 2022 Horoscope)

தியாக எண்ணம் அதிகம் கொண்ட தனுசு ராசிக்காரரே இன்று உங்கள் ராசியில் இன்று கிரக நிலை சுமாரான பலனை அளிக்கும். தொழில் ஸ்தானம் சலிப்பு தரும், வேகமாக செய்யும் பணிகளைக் கூட மெதுவாக தான் செய்வீர்கள். வேறு வேலை செய்யலாமா என்ற எண்ணங்கள் தோன்றும் அதனால் நீங்கள் எந்தவொரு முக்கிய முடிவும் எடுக்காதீர். குடும்ப வாழ்க்கையில் பொறுமையான அணுகுமுறை வேண்டும். பண வரவு குறையும் ஆனால் சமாளிக்கும் வண்ணம் கையில் பணப் புழக்கம் இருக்கும். ஆரோக்கியத்தில் சிறிய தொந்தரவு வரும். மருத்துவ செலவுகள் வரும். கல்வி நிலையில் பிரச்சனையில்லை. குடும்பத்தாரின் மனதைக் காயப்படுத்துவீர்கள். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 1

மகரம் (Capricorn 2022 Horoscope)

இன்று பலரின் அறிமுகம் கிடைக்கும், தொழிலில்  பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும், நீண்ட நாட்களாக வேலைத் தேடும் உங்களுக்கு இன்று தற்காலிக வேலைக் கிடைக்கும்.  இன்று எந்த முக்கிய முடிவுகளும் எடுக்க வேண்டாம். செல்வ நிலை நன்றாக உள்ளது, ஆனால் நீங்கள் எதிர்பார்த்த நிதி வளர்ச்சி இருக்காது. திருமண வாழ்க்கை மிகவும் அமைதியாக இருக்கும், மனம் நிம்மதி அடையும். குடும்பத்துடன் வெளியே செல்லும்போது பழைய நண்பர்களைக் காண முடியும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும்.  வருங்கால முதலீட்டில் அக்கறை பிறக்கும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். உடலில் சிறிய குறைகள் இருக்கும்.  அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் (Aquarius 2022 Horoscope)

உங்களின் புத்திக் கூர்மை இன்று உங்கள் மகிழ்ச்சியை மேம்படுத்தாது, அலுவலகத்தில் திட்டமிட்டு செயல்படுவது வேலையை எந்தவொரு பாதிப்புமில்லாமல் செயல்பட உதவும். இன்று செலவுகள் மிகவும் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் நல்லுறவு இருக்கும், பொறுமையை அதிகமாக கடைப்பிடிக்க வேண்டும். நிதி நிலையில் செலவு தான் உயர்ந்து இருக்கும்.  ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும், அதிகமான ஓய்வு வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 5

மீனம்(Pisces 2022 Horoscope)

நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட மீன ராசிக்காரரே இன்று உங்களுக்கு மனம் ஆனந்தமாக இருக்கும். வருங்காலத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு  குழப்பமான மனநிலையைத் தரும். தொழிலில் சிறிய மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது, இயல்பு நிலையைத் திரும்பப் பெற அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கும். வீட்டின் பிரச்சனைகளைத் தீர்க்க வழி கிடைக்கும். பிறரிடம் உரையாடும்போது கவனமாக இருங்கள். இன்று செல்வ நிலை சரியான நிலையில் இருக்காது, பணத்தை செலவிடும்போது கட்டுப்பாடு அவசியமாகும். மன பதட்டத்தின் காரணமாக உடல்நலக் குறை ஏற்படும். குழப்பம்! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 2 

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்