Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Today Rasi Palan 2022 in Tamil: இன்னிக்கு உங்க ராசிக்கு எப்படி இருக்குமுனு பாருங்க! இந்த ராசிக்கு நல்ல பண வரவு தான்.... ஜூலை 4, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 03, 2022 & 13:30 [IST]
Today Rasi Palan 2022 in Tamil: இன்னிக்கு உங்க ராசிக்கு எப்படி இருக்குமுனு பாருங்க! இந்த ராசிக்கு நல்ல பண வரவு தான்.... ஜூலை 4, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 6:15- 07:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை


Representative Image. மேஷம்- கன்னி வரை முதல் 6 ராசியின் தினசரி ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


Today Rasi Palan 2022 in Tamil

துலாம் (Libra 2022 Horoscope)

உங்கள் பேச்சு திறமையின் மூலம்  இன்றைய தினத்தை மகிழ்ச்சியான நாளாக மாற்றும், பாசிட்வான மனத்தைரியத்தை உருவாக்கும். எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் நீங்கள் உழைப்பதால் உங்களுக்கு நல்ல மதிப்பு உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், உங்கள் நேர்மையான பேச்சுக்கு மதிப்பு இருக்கும். இன்று வருமானம் அதிகமாகும், மேலும் சேமிப்பு நிலை உயரும். இன்று  எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 4

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

உங்கள் பொறுமையான குணத்துக்கு இன்று சுமுகமான பலன் கிடைக்கும், மனதில் தெளிவான சிந்தனைகள் பல தோன்றும், பணியில் கவனமாக செயல்பட்டு குறித்த நேரத்தில் பணியை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சில முக்கியப் பொறுப்புகள் வரும்.  குடும்ப வாழ்க்கை திருப்தியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் இடைவெளி குறைந்து நல்ல புரிதல் இருக்கும். சீரான பணப்புழக்கம் இருக்கும், நல்ல பண வரவு உண்டு. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. வளர்ச்சி!  

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு (Sagittarius 2022 Horoscope)

வாழ்க்கையைப் பாடமாகப் பார்த்து செய்யும் தவறை திரும்ப செய்யாமல் தவிர்க்கும் குணம் கொண்ட  நீங்கள் நடக்கும் விஷயங்களை லேசாக எடுத்து கொள்ளுவதன் மூலம் சிறப்பான மாற்றங்கள் பலவற்றை உணரலாம். தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும், மேலும் வளர்ச்சி காண மும்புரமாக பணியாற்றுவீர்கள்.   வீட்டில் சிறிய சண்டைகள் நடக்கும், கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்துப் போவது அவசியமாகும். நண்பர்களின் உதவி மிகப்பெரிய துணையாக இருக்கும். நிதி நிலை ஓரளவு நன்றாக இருக்கிறது, பெரிய செலவு எதுவும் வைத்து கொள்ள வேண்டும். தூக்கமின்மை ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும், அதனால் நல்ல ஓய்வு வேண்டும். களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Capricorn 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களுக்கு சற்று கடினமான நாளாக இருக்கும், நம்பிக்கையைத் தளரவிடாமல் இருக்க வேண்டும். அலுவலகப் பணியைச் சிறப்பாக முடிக்க நல்ல திட்டம் தேவைப்படும், பணி நேரத்தில் சில இடையூறு வரலாம். குழப்பமான மனநிலை இருப்பதால் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்காதீர். வாழ்க்கைத் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.  நிதி நிலையில் பிரச்சனை இல்லை, செலவு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏதும் பெரியதாக இல்லை. கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

கும்பம் (Aquarius 2022 Horoscope)

மனதில் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்த உங்களுக்கு இன்று மகிழ்ச்சியான சூழல் இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமையை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும், உங்கள் தனித்திறமை பாராட்டு பெற்று தரும். குடும்பத்தில் நல்ல புரிதல் இருக்கும். நிதிநிலை மிகவும் நன்றாக உள்ளது, திருப்திகரமான பண வரவு இருக்கும். மனம் அமைதியாக இருக்கும். திறமை! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

மீனம்(Pisces 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களுக்கு விரும்பிய பலன் கிடைக்கும், திடமான மனம் இலக்கை எளியதாக  அடையும்.  அலுவலகத்தில் பிறரிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பேச்சி முன்னேற்றத்தில் தடையாக மாறும். உங்கள் குடும்ப வாழ்வில் இன்றைய தினம் சிறப்பான நாளாக அமையும். சீரான பண வரவு உண்டு. உடல்நலம் நன்றாக உள்ளது. வரவு! 

அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்