Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: திடீரென வரும் பணத்தால் திக்குமுக்கு என நிலை ஆடிப்போகும்.... அதிர்ஷ்ட ராசிக்காரர் நீங்களா......ஜூலை 4, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 03, 2022 & 13:00 [IST]
Nalaya Rasipalan: திடீரென வரும் பணத்தால் திக்குமுக்கு என நிலை ஆடிப்போகும்.... அதிர்ஷ்ட ராசிக்காரர் நீங்களா......ஜூலை 4, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 6:15- 07:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Nalaya Rasipalan

மேஷம் (Aries 2022 Horoscope)

மனதில் இதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கினாலும் இன்று பதட்டமான சூழ்நிலையே நிலவும், அலுவலகத்தில் திட்டமிட்டு  வேலை செய்வது உங்கள் உழைப்பை எளியதாக்கும். மனம் அவ்வப்போது வருத்தமடையும், மன நிலை மாற்ற வெளியில் செல்வீர்கள். உங்கள் பணத்தைக் கவனமாகச் செலவு செய்ய வேண்டும், இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாகும். ஆரோக்கிய செலவு இருக்கும், தாயின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். திட்டம்!   

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

 நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த வாய்ப்பு இன்று கிடைக்கும், தொழிலில் கடுமையான உழைப்புக்கு நல்ல முன்னேற்றம் காண முடியும், மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். இன்று பண வரவு இருக்கும், செல்வ நிலை சிறப்பாக உள்ளது.இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய தருணம் உருவாகும், கலந்துரையாடி முடிவெடுப்பது நல்லதாகும். குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.  உடல் கொஞ்சம் சோர்வாக இருக்கும். ஓய்வு!    

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் (Gemini 2022 Horoscope)

இதுவரை கடின வாழ்க்கை பகுதியைப் பார்த்த உங்களுக்கு இன்றைய தினம் சாதகமாக இருக்கும். உங்கள் லட்சியத்தை அடைய அதிகமாக உழைக்க வேண்டும், தொழிலில் முன்னேற்றம் இருக்கும் புதிய வேலைகள் வரும். நிதி நிலை உயரும். குடும்ப வாழ்க்கை மிகவும் நன்றக் உள்ளது, கணவன் மனைவி உறவில் புரிதல் உருவாகும், மனம் திறந்து பேசி பல பிரச்சனைக்குத் தீர்வு காண்பீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏதுமில்லை என்றாலும் அதிகமான ஓய்வு தேவைப்படும். இன்று இன்பமான சூழ்நிலை அதிகமாக இருக்கும். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

கடகம் (Cancer 2022 Horoscope)

அயராது உழைக்கும் உங்கள் குணத்துக்கு இன்றைய நாள் உற்சாகமாக இருக்கும், நிம்மதியான மன நிலைக் கிடைக்கும். தொழில் இடத்தில் அதிக பணிகள் இருந்தாலும் மன உற்சாகமாக இருக்கும். அலுவலகத்தில் குறித்த நேரத்தில் வேலையை முடிக்கக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.  செல்வ நிலையில் தேவையில்லாத செலவுகள் இருக்கும். குடும்ப வாழ்க்கை ஓரளவு நன்றாக உள்ளது, வீட்டில் கோபமடையாமல்  அமைதியாக இருப்பதால் நட்பான அணுகுமுறை கிடைக்கும். கல்வியில் நல்ல கவனம் பிறக்கும். ஆரோக்கியத்தில் திடீர் குறை ஏற்படும், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்துவது உடல்நலக் குறையைத் தடுக்கும். வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

சிம்மம் (Leo 2022 Horoscope)

உங்கள் கருணை குணத்தால் அனைவரையும் அரவணைக்கும் உங்களுக்கு இன்று அமைதியான  நாளாக அமையும்.  உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். அதிக பணிகள் இருப்பதால் சற்று இறுக்கமாக இருப்பீர்கள், ஓய்வு எடுக்க நேரம் இருக்காது. இன்று எந்தவொரு முக்கிய முடிவுகளும் எடுக்காதீர்.தேவையில்லாமல் பேசுவதைத் தடுக்க வேண்டும். குடும்பத்தினருடன் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கும். உடலில் சிறுசிறு வலிகள் இருக்கும். நிதானம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி (Virgo 2022 Horoscope)

மற்றவர்களை சந்தோஷப்படுத்த எப்போதும் முகத்தில் சந்தோஷத்தைக் கொண்டு இருக்கும் உங்களுக்கு இன்று எடுக்கும் புதிய முயற்சிகள் சாதகமாக இருக்காது,அலுவலகத்தில் சக பணியாளருடன் சகஜமாக பணியாற்றுவீர்கள். மனநிலை அமைதியான சூழல் ஏற்பட்டு தெளிவான முடிவுகள் எடுக்க முடியும். உங்கள் குடும்பத்தில் இன்று நெருக்கம் அதிகமாகும். இன்று மனதிற்கு நெருக்கமானவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அமையும். நட்பு வட்டாரம் அதிகரிக்கும். சீரான செல்வ நிலை இருக்கும். உடல்நிலை மிகவும் நன்றாக உள்ளது. கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 3


துலாம்- மீனம் வரை அடுத்த 6 ராசியின் தினசரி ராRepresentative Image. சிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்