Sat ,Jun 22, 2024

சென்செக்ஸ் 77,209.90
-269.03sensex(-0.35%)
நிஃப்டி23,501.10
-65.90sensex(-0.28%)
USD
81.57
Exclusive

Tomorrow Rasi Palan:  இன்று முழுவதும் கவனமாக வேண்டிய அந்த 5 ராசிக்காரர் நீங்களா! ஜூன்    27, 2022 ராசிபலன்...!

Manoj Krishnamoorthi June 26, 2022 & 13:45 [IST]
Tomorrow Rasi Palan:  இன்று முழுவதும் கவனமாக வேண்டிய அந்த 5 ராசிக்காரர் நீங்களா! ஜூன்    27, 2022 ராசிபலன்...!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 06:30- 07:30 

மாலை: 04:30- 05:30

Tomorrow Rasi Palan

மேஷம் (Aries 2022 Horoscope)

அழகான அகமே சிறந்த சொத்து என்பதை வெளிக்காட்டும் மேஷ ராசிக்காரரே இன்று  தொழில் ஸ்தானத்தில் எதிர்கால தேவைக்காக சில முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும், தொழில் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்வில் சிறிய கருத்து வேறுபாடு உதிக்கும், உங்கள் வார்த்தை வாழ்க்கை துணையின் மனதைக் காயப்படுத்தும். செல்வ நிலை சற்று மந்தமாக இருக்கும் இருப்பினும் போதுமான பண வரவு இருக்கும். உடலில் வலிகள் ஏற்படும், மருத்துவ பரிசோதனை ஏற்படும்.  மதிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

நட்பு குணம் அதிகம் கொண்ட உங்களுக்கு இன்று அதிகமான சங்கடங்கள் உருவாகும், சவால் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்த மன அமைதி சற்று குழப்பமாக மாறும். உத்தியோகத்தில் குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் கடமைகளை முடிக்க முடியாது, சக பணியாளரின் உதவி கிடைக்காது. இன்று குடும்பத்துடன் வெளியே செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நிதி நிலை நன்றாக உள்ளது, மிதமான பண வரவு உள்ளது. உடல்நலம் குறையும் வாய்ப்பு உள்ளது, கழுத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும், கவனமாக இருக்க வேண்டும். சிரமம்! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம் (Gemini 2022 Horoscope)

அனைவரையும் ஈர்க்கும் வசீகர குணம் கொண்ட மிதுன ராசிக்காரரே மௌனமாக இருப்பது உங்களுக்கு இன்று நன்மையாகும். இறை வழிபாட்டில் கலந்து கொள்ளுவீர்கள். அலுவலகத்தில் வேலைகள் மந்தமாக நடக்கும், உங்கள் சிந்தனை உங்கள் வாழ்வை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும். செல்வ நிலை சாதகமாக இல்லை, . குடும்பத்தில் சண்டைகள் இருக்கும், பொறுமையாக இருக்க வேண்டும். இன்றைய நாள் காதலுக்கு உகந்த நாள் இல்லை. ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். மௌனம்! 

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

கடகம் (Cancer 2022 Horoscope)

உங்கள் தன்மையான பேச்சால் பிறரின் மதிப்பை எளியதாக பெறும் உங்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமாக இருக்கும். உங்கள் அலுவலகப் பணியில் கவனமாக இருக்க வேண்டும், வழக்கமான பணிகள் கால தாமதம் ஏற்படலாம். உங்கள் மன நிலை கொஞ்சம் தடுமாறும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனையில்லை, அமைதியான சூழல் நிலவும். காதல் வாழ்க்கை மிகவும் இன்பமாக இருக்கும். தியானம் செய்ய முயலவும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 8

சிம்மம் (Leo 2022 Horoscope)

இருக்கும் இடத்தில் தன் முக்கியத்துவத்தை விரைவில் உணர்ந்து சிறப்பாக பணியாற்றும் உங்களுக்கு இன்று உருவாகும் செலவுகள் செல்வ நிலையைப் பாதிக்கும். தொழில் ஸ்தானம் இயல்பு நிலையில் இருக்கும். திருமண வாழ்க்கையில் நல்ல புரிதல் இருக்கும். வீட்டில் தந்தையுடன் சில மன வருத்தங்கள் நிகழும். உடல்நலம் சிறப்பாக உள்ளது, ஓய்வு இன்மை உடலைச் சோர்வாகக் காட்டும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி (Virgo 2022 Horoscope)

அமைதியான சுபாவத்துக்கு சொந்தக்காரரான உங்களுக்கு பணியில்  மற்றவர்கள் காட்டும் கவனக்குறைவு சினத்தைத் தரும். இன்று திடீர் பண வரவு இருக்கும், வரும் பணம் வந்த இடமே தெரியாததுபோல செலவு அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் சக பணியாளரிடம் பொறுமை நடந்து கொள்ளுங்கள். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. உங்கள் நேர்மையான பேச்சு வியாபாரத்தில் நல்ல லாபத்தை அளிக்கும். குடும்ப வாழ்க்கையில் உங்கள் நேர்மையான அணுகுமுறை இன்று நிம்மதி அளிக்கும். சினம்! 

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்:  2


Representative Image. துலாம்-மீனம் வரை அடுத்த 6  ராசியின் தினசரி ராசிபலன் (27.062022, திங்கட்கிழமை) பற்றி அறிய க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்