Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கட்டாயம் வேலை கிடைக்கும்...அதுனால ஒழுங்கா முயற்சி பண்ணுங்க..!| Aani Matha Rasi Palan 2023 Meenam in Tamil

Priyanka Hochumin Updated:
கட்டாயம் வேலை கிடைக்கும்...அதுனால ஒழுங்கா முயற்சி பண்ணுங்க..!| Aani Matha Rasi Palan 2023 Meenam in TamilRepresentative Image.

ஆனி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: ஆனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, ரிஷபத்தில் புதன், மிதுனத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஜூன் மாதம் 16 ஆம் தேதி (ஆனி 01) ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஜூன் 27 ஆம் தேதி (ஆனி 12) கும்ப ராசி அவிட்ட நட்சத்திரத்தில் சனி பகவான் வக்கிர கதி ஆரம்பிக்கிறார். இதற்கிடையில், ஜூலை 02 ஆம் தேதி (ஆனி 17) கடகத்தில் இருக்கும்  செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 03 ஆம் தேதி (ஆனி 18) சுக்கிர பகவான் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கும், மீண்டும் ஜூலை 04 ஆம் தேதி (ஆனி 19) மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆனி மாதத்தில் மீன ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஆனி மாத ராசிபலன் 2023 மீனம்:

சில தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம், ஆனால் அவை படிப்படியாக குறையும். மகிழ்ச்சியான சூழல் அமையும். குழந்தைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அதற்கு உடனே தீர்வு காண வேண்டும். கம்யூனிகேஷன் துறையில் வேலை தேடுபவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல வேலை கிடைக்கும். பணி புரியும் இடத்தில் பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தாயாருக்கு தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருந்தால் அதனை சரி செய்ய வேண்டும். மருத்துவ உதவி கிடைத்தால் அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புள்ளது.

அரசு வேலைக்காக காத்திருக்கும் நண்பர்களுக்கு, அவர்கள் தகுதிக்கு ஏற்றார் போல் வேலை கிடைக்கும். தேவையற்ற இடத்தில் கோபத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதாக இருந்தால், பல முறை யோசித்து செயல் பட வேண்டும். மறைமுக எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து மீள்வதற்கான வாய்ப்பு அமையும். நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாமல் தவிக்கும் நபர்களுக்கு, கூடிய விரைவில் திருமணம் நடைபெறும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்