செப்டம்பர் 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதத்தில் மேஷ ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் சூரியன் மற்றும் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்பம் ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சூரிய பகவான் செப்டம்பர் 17 ஆம் தேதி சிம்மத்திலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், செப்டம்பர் 04 ஆம் தேதி குரு பகவான் வக்கிர நிலைக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் செப்டம்பர் மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
வேலை இடமாற்றம், பதவி உயர்வு, வேலை சுமை குறையுமா இது போன்ற எண்ணங்கள் இருந்தால் அதனை அடியோடு மறந்துவிடவும். இந்த செப்டம்பர் மாதம் வேலை தொடர்பாக எந்த இன்னல் வந்தாலும் அதனை பொறுமையுடன் கடந்து வாருங்கள். தேவையில்லாத அலைச்சல்கள், மன அழுத்தம் உண்டாகும். எனவே, குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். பொருளாதாரம் எப்பையும் போல இருக்கும். ஆரோக்கியத்தில் பெரிதாக பாதிப்பு எதுவும் இல்லை. மாணவர்கள் தெளிவுடன் செயல்படுவார்கள். தம்பதிகளுக்கு அருமையான மாதமாக இருக்கும்.
மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறி மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மாதமாக இருக்கும். வேலை அல்லது இடமாற்றம் போன்ற விஷயங்கள் சாதகமாகும். வியாபாரத்தில் எந்த ஒரு புது விஷயத்தையும் செய்ய முயற்சிக்க வேண்டாம். மாணவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்த சிந்தனையில் தெளிவுடன் இருப்பார்கள். மனதிற்கு பிடித்தவர்களை திருமணம் செய்யும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சீராக இருக்கும். சுபச் செலவுகள் மாறி மாறி வரும். இல்லத்தரசிகள் மன நிறைவுடன் இருப்பார்கள்.
எதிர்பாராத விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். சுப விஷயங்களுக்கு ஏற்ற மாதம் இது. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வாழ்த்துவார்கள். கணவன் - மனைவி இடையே புரிதல் ஏற்படும். உறவுகளுக்கு மத்தியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மாணவர்கள் எந்த குழப்பமுமின்றி தங்களின் படிப்பு மீது கவனம் செலுத்துவார்கள். உடம்பில் காயத்தை ஏற்படுத்தும் பொருட்கள் மீது கவனம். பொன் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான மாதமாக இருக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…