Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உங்களுக்கு ஜாக்பாட் அடிக்க போகுது...அதுனால கவலை வேண்டாம் | Aani Matha Rasi Palan 2023 Mithunam in Tamil

Priyanka Hochumin Updated:
உங்களுக்கு ஜாக்பாட் அடிக்க போகுது...அதுனால கவலை வேண்டாம் | Aani Matha Rasi Palan 2023 Mithunam in TamilRepresentative Image.

ஆனி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: ஆனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, ரிஷபத்தில் புதன், மிதுனத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஜூன் மாதம் 16 ஆம் தேதி (ஆனி 01) ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஜூன் 27 ஆம் தேதி (ஆனி 12) கும்ப ராசி அவிட்ட நட்சத்திரத்தில் சனி பகவான் வக்கிர கதி ஆரம்பிக்கிறார். இதற்கிடையில், ஜூலை 02 ஆம் தேதி (ஆனி 17) கடகத்தில் இருக்கும்  செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 03 ஆம் தேதி (ஆனி 18) சுக்கிர பகவான் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கும், மீண்டும் ஜூலை 04 ஆம் தேதி (ஆனி 19) மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆனி மாதத்தில் மிதுன ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஆனி மாத ராசிபலன் 2023 மிதுனம்:

மிதுன ராசியினருக்கு லாப ஸ்தானத்தில் ராகு - குரு இருவரும் இருப்பதால் எல்லாம் அமோகமாக இருக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு மந்தமாக இருந்த தனவரவு நல்ல முன்னேற்றத்துடன் காணப்படும். பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு அமையும். வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்பியவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த சகோதரர்/சகோதரிகளுடன் சொத்து சம்மந்தமான பிரச்சனைகள் இருந்தால் முடிவுக்கு வரும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் - மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு இயற்கை அல்லது செயற்கை முறையில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் பேசும் போது கவனத்துடன் பேச வேண்டும். அரசு வேலைக்காக தேர்வு எழுதி காத்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். மாணவர்கள் மந்தத்தன்மையில் இருந்து மீண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவார்கள். தந்தையிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகரிகளிடத்தில் அனுசரித்து செல்வது நல்லது. திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்