Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குடும்ப உறுப்பினர்களால் இந்த ராசியினருக்கு அவஸ்தை ஏற்படும்..! | August Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
குடும்ப உறுப்பினர்களால் இந்த ராசியினருக்கு அவஸ்தை ஏற்படும்..! | August Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

ஆகஸ்ட் 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ஆகஸ்ட் மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரன், சிம்மம் ராசியில் செவ்வாய் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சூரிய பகவான் ஆகஸ்ட் 17 ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஆகஸ்ட் 07 ஆம் தேதி மிதுன ராசியில் உள்ள சுக்கிர பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதுமட்டுமல்லாமல், ஆகஸ்ட் 18 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்த செவ்வாய் பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆகஸ்ட் மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

குடும்ப உறுப்பினர்களால் இந்த ராசியினருக்கு அவஸ்தை ஏற்படும்..! | August Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2023 துலாம்:

ஆகஸ்ட் மாதம் துலாம் ராசியினருக்கு நினைத்தது நிறைவேறும் காலமாக அமையும். தொழில், வியாபாரம், வேலை ஆகிய அனைத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். திருமண முயற்சிகள் சாதகமாகும். காதல் வெற்றியடைய ஏற்ற மாதமாக இருக்கும். கல்வி சார்ந்த விஷயங்கள் நினைத்தவாறு நடைபெறும். மாணவர்கள் தெளிவுடன் தங்களின் எதிர்காலத்தை தீர்மானித்து செயல் படுவார்கள். குடும்பத்தை தனியாளாக நிர்வகித்த கர்வம் பெண்களுக்கு இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சுக்கிரன் வக்கிரமடையும் காலகட்டத்தில் ஒரு விதமான கவலை, குழப்பம் இருக்கும். அதனை பொருட்படுத்தாமல் உங்களின் அன்றாட வேலையை சரியாக பார்த்தால் எல்லாம் சரியாகும். 

குடும்ப உறுப்பினர்களால் இந்த ராசியினருக்கு அவஸ்தை ஏற்படும்..! | August Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2023 விருச்சிகம்:

விருச்சிக ராசியினர் எதுவாக இருந்தாலும் பல போராட்டத்திற்கு பிறகு தான் கிடைக்கும். இந்த ஆகஸ்ட் மாதம் வேலை, தொழில் எல்லாம் நன்றாக இருக்கும். பொருளாதாரத்தை பொறுத்த வரையில் பணவரவு இருக்கும் ஆனால் உடனே செலவாகி விடும். வேலை மாற்றம் செய்வதற்கான வாய்ப்பு அமையும். சனியின் ஆதிக்கத்தால் அலைச்சல், மன உளைச்சல் இருக்கும். குடும்ப சூழலை பார்க்கையில் எதுவுமே சரியாக இல்லை போன்ற எண்ணம் வந்து போகும். கல்வி சார்ந்த விஷயங்கள் நன்றாக இருக்கும். உங்களுக்கு பிடித்த படிப்பை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இல்லத்தரசிகளுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறாத ஏக்கம் இருக்கும். தேவைகள் அதிகமாக இருக்கும், ஆனால் அதற்கான வரவு சரியாக இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் எந்த தொந்தரவும் இருக்காது. 

குடும்ப உறுப்பினர்களால் இந்த ராசியினருக்கு அவஸ்தை ஏற்படும்..! | August Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2023 தனுசு:

உங்களுடைய வாழ்க்கை வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. முதலீடு தொடர்பான முயற்சி எடுப்பதாக இருந்தால் யோசித்து செயல்படவும். திருமணம் கைகூடி வரும் சூழல் அமையும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கல்வி சார்ந்த முடிவுகளை தீர்க்கமாக எடுக்கலாம். ஏனெனில், நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை அளிக்கும். வீட்டு பெண்கள் தங்களின் மகிழ்ச்சிக்காக சில விஷயங்களை செய்து கொள்ளும் சூழல் ஏற்படும். ஆக மொத்தத்தில் ஆகஸ்ட் மாதம் தனுஷ் ராசியினருக்கு சுப செலவுகள் இருக்கும், திருமணம் சாதகமாகும், மகிழ்ச்சியான சூழல், தேவைகளை பூர்த்தி செய்வது போன்று அனைத்தும் நன்மையாக இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்