Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 73,898.31
-107.63sensex(-0.15%)
நிஃப்டி22,481.10
-20.90sensex(-0.09%)
USD
81.57
Exclusive

தனுஷ் ஜூலை மாத ராசிபலன் 2023 | July Month Rasi Palan 2023 Danush in Tamil

Priyanka Hochumin Updated:
தனுஷ் ஜூலை மாத ராசிபலன் 2023 | July Month Rasi Palan 2023 Danush in TamilRepresentative Image.

ஜூலை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ஜூலை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, மிதுன ராசியில் சூரியன், கடக ராசியில் புதன், சிம்ம ராசியில் சுக்கிரன் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூலை 06 ஆம் தேதி சுக்கிர பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 16 ஆம் தேதி சூரிய பகவான் கடக ராசிக்கும், புதன் பகவான் ஜூலை 08 ஆம் தேதி கடக ராசிக்கும் மற்றும் 24 ஆம் தேதி சிம்ம ராசிக்கும்  பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூலை மாதத்தில் தனுஷ் ராசி மற்றும் தனுஷ் லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஜூலை மாத ராசிபலன் 2023 தனுஷ்:

இந்த மாதம் தனுஷ் ராசியினருக்கு ஏற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். முக்கியமாக தாயாரின் உடல்நிலையில் அதிக கவனம் வேண்டும். தாய் வழி உறவினர்களுடன் ரொம்ப நெருக்கமாக இருப்பதை தவிர்க்கவும். தாத்தா பாட்டி சொத்துக்கள் வந்து சேரும். வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்பு அமையும். மாணவர்கள் திறமையாக செயல் படுவார்கள். திருமணம் யோகம் கைகூடி வரும். உங்களுக்கு வரனாக அமையும் வாழ்க்கைத் துணை ஆளுமை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குலதெய்வ கோவில்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்கள் நடக்கும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். இதுவரை கிடைக்காத அங்கீகாரம் அவர்களுக்கு கிடைக்கும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்