Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aani Matham Rasi Palan 2022: இந்த மாதம் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் அந்த ராசிக்காரர் இவரா...! 

Manoj Krishnamoorthi June 16, 2022 & 12:30 [IST]
Aani Matham Rasi Palan 2022: இந்த மாதம் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் அந்த ராசிக்காரர் இவரா...! Representative Image.

ஜோதிடத்தில் கிரகங்களின் நிலை மாற்றத்தால் நம் ராசியில் பல மாற்றங்கள் நிகழும், இவ்வாசகத்தில்  இறுதி 3 ராசிகளான மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆனி மாதம் பெறும் பலன்கள் பற்றி அறிவோம்.


Representative Image. இதையும் படிக்க:  துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசியின் ஆனி மாத ராசிபலன் பற்றி முழுமையாக அறிய இங்கு க்ளிக்  செய்யவும்.


மகரம்

பொது பலன்: உங்களுக்கு இந்த மாதம் பல எதிர்பார்க்க முடியாத பண வரவு அளிக்கும். தொழிலிலிருந்த பிரச்சனைகள் இருந்த இடமே   தெரியாமல் மறைந்து அமோகமான வளர்ச்சி  இருக்கும், உங்கள் தொழில் வளர்ச்சி மனதுக்கு நிம்மதியை அளிக்கும். மனம் தைரியமாக செயல்படுவீர்கள். பணப் புழக்கம் நன்றாக இருக்கும்.

குடும்ப வாழ்வில் பிரச்சனை ஏதுமில்லை. உறவினர் மூலம் சில மனக்கஷ்டம் உருவாகும். கல்வி நிலை நன்றாக உள்ளது, நல்ல மதிப்பெண் பெற்று புகழின் உச்சத்தில் திளைப்பர். ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், காலில் சில பிரச்சனைகள் தோன்றும். 

உத்திராடம்: உறவினர்களிடம் பேசும்போது அமைதியாக இருக்க வேண்டும்.

திருவோணம்: ஆரோக்கியத்தில் அதிக கவனமாக வேண்டும். தொழிலில் செய்யும் செயல்பாடு நல்ல முன்னேற்றம் அளிக்கும்.

அவிட்டம்: கணவன் மனைவி உறவில் சில வாக்குவாதங்கள் வரும், குடும்பத்தின் வீட்டில் இன்பமாக இருப்பீர்கள். ஆரோக்கியக் குறை ஏற்படும். 

வழிபட வேண்டிய தெய்வம்: அனுமன்

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தல் நன்மைகளை அதிகரித்து சீரான உடல்நலத்தை அளிக்கும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 3, 4, 5

கும்பம்

பொது பலன்:  உங்களுக்கு இந்த மாதம் பல சலுகைகள் கிடைக்கும் நல்ல மாதமாகத் தோன்றும், அலுவலகத்தில் மேலதிகாரியின் மூலம் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். செல்வ வரவு இருக்கும்.

செல்வ செழிப்புடன் வாழ இந்த மாதம் உதவிக்கரமாக இருக்கும், குடும்பத்த்கில் இருக்கும் சிறிய பிரச்சனைகளை வெளிப்படையாக சரி செய்வீர்கள். மாணவர்களின் கல்வி ஸ்தானத்தில் இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். நிலையான பண வரவு சுப செலவுகள் செய்ய வழிவகுக்கும். 

சதயம்: தொழில் வளர்ச்சி  திருப்திகரமாக இருக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அவிட்டம்: பண வரவு இருக்கும், உடல்நலக் கோளாறு ஏற்படும் சூழல் அதிகமாக உள்ளது.

பூரட்டாதி: உங்களின் சாமர்த்தியமான நடவடிக்கை நல்ல லாபம் தரும். தங்கம் போன்ற ஆடம்பர பொருட்கள் வாங்கும் சூழல் அதிகமாக உள்ளது.

வழிபட வேண்டிய தெய்வம்: அம்மன்

பரிகாரம்: வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று அருகிலுள்ள அம்மன் சன்னதி சென்று அம்மனுக்கு பூ சூடி அர்ச்சனை செய்ய வேண்டும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 6, 7

மீனம்

பொது பலன்:  உங்களை  விட்டு போன சொந்தங்கள் தேடிவரும், உங்கள் பழைய நண்பர்களை சந்திக்கும் சூழல் அதிகமாக இருக்கும், பழைய முதலீடுகள் தற்போது நல்ல பலன் அளிக்கும். தொழிலில்  நல்ல முன்னேற்றம் இருக்கும், சக பணியாளரிடம் நல்ல உறவு இருக்கும்.

குடும்ப வாழ்க்கை சிறப்பாக உள்ளது, உடல்நலம் நன்றாக உள்ளது. சுப நிகழ்ச்சி நடக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கல்வி நிலை அமோகமாக உள்ளது. நிலுவையிலிருந்த அரசு காரியங்கள் வேகமாக நடக்கும்.

பூரட்டாதி:  புதியதாக செய்யும் செயல் நற்பலனை அளிக்கும். 

உத்திரட்டாதி:  இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக உள்ளது, மனநிறைவாக இருப்பீர்கள்.

ரேவதி:  இந்த நல்ல தொழில் வளர்ச்சி இருக்கும், அருமையான மாதமாகத் திகழும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அனுமன்

பரிகாரம்:  பெருமாள் கோவிலில் பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 7, 8, 9


Representative Image. மேலும் படிக்க: மேஷம், ரிஷபம் மற்றும் மிதுன ராசியின் ஆனி மாத ராசிபலன் பற்றி இங்கு க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்