Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

Tomorrow Rasi Palan in Tamil: இந்த 3 ராசிக்காரர்கள் எதை பேசுவதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசிச்சிதான் பேசணும்.. இல்லைனா அனத்தம் உங்களுக்குதான்.. ஆகஸ்ட் 04.2022 ராசிபலன்..!!

Nandhinipriya Ganeshan August 03, 2022 & 15:30 [IST]
Tomorrow Rasi Palan in Tamil: இந்த 3 ராசிக்காரர்கள் எதை பேசுவதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசிச்சிதான் பேசணும்.. இல்லைனா அனத்தம் உங்களுக்குதான்.. ஆகஸ்ட் 04.2022 ராசிபலன்..!!Representative Image.

நல்ல நேரம்:

காலை: 10.45 – 11.45 வரை

மாலை: இல்லை

கௌரி நல்ல நேரம்:

காலை: 12.15 – 01.15 வரை

மாலை: 06.30 – 07.30 வரை

Tomorrow Rasi Palan in Tamil: மங்களகரமான சுபகிருது வருடம் ஆடி மாதம் 19 ஆம் நாள் வியாழக்கிழமை (2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 ஆம் திகதி) நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம் முதல் கன்னி வரை உள்ள முதல் 6 ராசியினருடைய தினசரி ராசிபலன் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

துலாம் | Thulam tomorrow rasi palan

அதிக கோபத்தை தவிர்த்து சகஜமாகவும், நகைச்சுவை போக்கும் மேற்கொண்டால் பல பிரச்சனைகளை சமாளிக்கலாம். உங்க துணையுடன் காமெடி கிண்டலாக பேசுகிறேன் என்று, கண்டதையும் பேசிவிடாதீர்கள். அப்பறம் அனத்தம் உங்களுக்கே.  காதலர்களுக்கு இன்னைக்கு அதிர்ஷ்டமான நாள். உங்களுடைய நீண்ட நாள் ஆசையை இன்னைக்கு உங்க காதலர் நிறைவேற்றுவார். அஜாக்கிரதையால் பணத்தை தொலைக்க வாய்ப்புள்ளது. கண், பல் சம்பந்தமான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். நிதானம்!

விருச்சிகம் | Viruchigam tomorrow rasi palan

எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் பல நாட்களாக இருந்த வந்த பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு. இன்னைக்கு உங்க வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. குறைந்த முயற்சியில் பெரிய வெற்றியை அடைவீர்கள். இன்னைக்கு வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பேச்சு சகபணியாளர்களுக்கு மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். வெற்றி!

தனுசு | Dhanushu tomorrow rasi palan

புது முயற்சிகள் பெரிய வெற்றிகளை அள்ளிக் கொடுக்கும். நாளின் ஆரம்பம் கொஞ்சம் சுமாராக இருந்தாலும், போகபோக எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். யாராவது ஒருவர் மூலம் இன்னைக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. உடனிருப்பவர்களின் உதவியுடன் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடிகள் சற்று குறையும். விட்டுக் கொடுத்து போவதால் நம் பயந்தவர் என்று அர்த்தம் இல்லை. தேவையற்ற பிரச்சனைகள் வேண்டாம் என்று விலகி செல்கிறோம். அப்படி, இன்னைக்கு யாராவது உங்களிடம் வம்பிற்கு வரும்போது விட்டுக் கொடுத்து போவதால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். அனுகூலம்!

மகரம் | Magaram tomorrow rasi palan

தூரத்து சொந்தக்காரர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். இன்னைக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணிச்சுமை அதிகரித்துக் காணப்படும். இது எரிச்சலை ஏற்படத்தலாம். பொறுமையாக வேலையை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். எந்த விஷயத்தை பேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசியுங்கள். இதனால், வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும் நாள். லாபம்!

கும்பம் | Kumbam tomorrow rasi palan

திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளால் நல்ல லாபம் கிடைக்கும். வரவும் செலவும் இணைந்து காணப்படும். உங்கள் உறவில் இது வரை இருந்து வந்த சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் தீரும் அருமையான நாள் இது. அலுவலகத்தில் இதுவரை நீங்கள் யாருடன் பேச வேண்டுமென முயற்சி செய்தீர்களோ அவரிடம் பேசும் நல்ல வாய்ப்பு இன்று கிடைக்கும். அற்ப விஷயத்திற்கு கோபப்பட்டு உறவில் குழப்பம் ஏற்படலாம். எனவே, அனுசரித்து போவதால் நல்லது. பொறுமை!

மீனம் | Meenam tomorrow rasi palan

சில விஷயங்கள் உங்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத வாய்ப்புகள் தேடி வரும். முக்கிய முடிவுகளை எடுக்க இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். சிலருக்கு திறமைக்கு கேற்ற பரிசு காத்திருக்கிறது. உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஆக மொத்தத்தில் அதிர்ஷ்டமான நாள் என்றே சொல்லலாம். அதிர்ஷ்டம்!  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்