Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசியினர் எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டால் பெரிய பிரச்சனையில இருந்து தப்பிக்கலாம்.. ஆகஸ்ட் 04.2022 ராசிபலன்…!!

Nandhinipriya Ganeshan August 03, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan: இந்த ராசியினர் எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டால் பெரிய பிரச்சனையில இருந்து தப்பிக்கலாம்.. ஆகஸ்ட் 04.2022 ராசிபலன்…!!Representative Image.

நல்ல நேரம்:

காலை: 10.45 – 11.45 வரை

மாலை: இல்லை

கௌரி நல்ல நேரம்:

காலை: 12.15 – 01.15 வரை

மாலை: 06.30 – 07.30 வரை

Nalaya Rasi Palan: மங்களகரமான சுபகிருது வருடம் ஆடி மாதம் 19 ஆம் நாள் வியாழக்கிழமை (2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 ஆம் திகதி) நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம் | Mesham tomorrow rasi palan

உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. இவ்வளவு நாட்களாக இழுபறியாக இருந்த கடன் அனைத்தும் வசூலாகும். அனைத்து செயல்களிலும் வெற்றி காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் யுக்தியை கையாண்டு மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். கணவன்-மனைவி உறவுக்குள் புரிதல் உணர்வு குறைந்து காணப்படும். எனவே, எதையும் யோசித்து பேசுவது நல்லது. பாராட்டு!

ரிஷபம் | Rishabam tomorrow rasi palan

எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து, நம்பிக்கையுடன் செயல்பட்டால் அதிகம் சாதிக்கலாம். வேலை செய்யும் இடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு பலனில்லாமல் போய்விடும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும் நாள். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தேவையில்லாத சிந்தனைகளை மனதில் இருந்து விரட்டுவது, நல்ல முறையில் செயல்பட உதவும். பணவரவு சுமாராக இருக்கும். எனவே, அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. ஜாக்கிரதை!

மிதுனம் | Midhunam tomorrow rasi palan

உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பணப்பிரச்சனை குறையும். புதிய முயற்சிகளில் இறங்குவதற்கு இன்றைய நாள் சிறப்பானதாக இல்லை. எனவே, தள்ளிப்போடுவது நல்லது. குடும்ப பிரச்சனை காரணமாக உங்க துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். எனவே, வார்த்தைகளில் கவனம் தேவை. வரவு, செலவு இரண்டும் இணைந்து காணப்படும். கவனம்!

கடகம் | Kadagam tomorrow rasi palan

பிள்ளைகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பாராத நல்ல செய்தி ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சியை தரும். விருப்பங்கள் நிறைவேறும் அதிர்ஷ்டமான நாள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உற்சாகத்தையும் புது தெம்பையும் தரும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். கணவன் – மனைவி இடையே பாசம், அன்பு அதிகரிக்கும். சிறப்பு!

சிம்மம் | Simmam tomorrow rasi palan

தனவரவு தாராளமாக இருக்கும். பெற்றோர்களின் ஆதரவையும் அன்பையும் பெறுவீர்கள். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் காணப்படும். உங்க துணையுடன் வீண்விவாதங்கள் ஏற்படும். எனவே, எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வது நன்மை அளிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு போக வாய்ப்புள்ளது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிரமம்!

கன்னி | Kanni tomorrow rasi palan

புதிய முயற்சிகளில் கடினமாக உழைத்தால் மட்டுமே பலனை பெற முடியும். அதிர்ஷ்டத்தை நம்பாமல், தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டிய நாள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்க பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சிலருக்கு உறவினர் வீட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அரசு துறையில் இருப்பவர்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். வேலை செய்யும் இடத்தில் இருக்கும் கோபத்தை வீட்டில் காட்டுவீர்கள். உங்களுடைய இந்த முன்கோபத்தினால் குடும்பத்தில் சின்ன சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சுமை!

துலாம் முதல் மீனம் வரை உள்ள அடுத்த 6 ராசியினருடைய தினசரி ராசிபலன் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்