Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு திறமைக்கு ஏற்ற பரிசு காத்திருக்கு.. 26.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு திறமைக்கு ஏற்ற பரிசு காத்திருக்கு.. 26.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 11 ஆம் நாள் திங்கட்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி] நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்:

மேஷம் - அனுகூலம்

ரிஷபம் - ஜாக்கிரதை

மிதுனம் - மகிழ்ச்சி

கடகம் - கவனம்

சிம்மம் - சிறப்பு

கன்னி - சிந்தனை

நல்ல நேரம்:

காலை: 06.15 - 07.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு திறமைக்கு ஏற்ற பரிசு காத்திருக்கு.. 26.12.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் | Mesham Nalaya Rasi Palan

குடும்பத்தில் ஒற்றுமையான சூழல் உருவாகும். நாள் சற்று ஏற்ற இறக்கத்தோடு காணப்படும், புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நல்ல பலனை பெறலாம். உத்யோகத்தில் சிறந்த வாய்ப்புகள் தேடிவரும். பழைய பாக்கிகள் வசூலாகும். எலியும் பூனையுமாய் இருந்த கணவன் – மனைவிக்குள் நல்ல புரிதல்கள் ஏற்பட்டு அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். ஆன்மீக வழிபாடு மேற்கொள்வது அனுகூலப் பலன்களை பெற்று தரும். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு திறமைக்கு ஏற்ற பரிசு காத்திருக்கு.. 26.12.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் | Rishabam Nalaya Rasi Palan 

எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து, நம்பிக்கையுடன் செயல்பட்டால் அதிகம் சாதிக்கலாம். வேலை செய்யும் இடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு பலனில்லாமல் போய்விடும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும் நாள். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தேவையில்லாத சிந்தனைகளை மனதில் இருந்து விரட்டுவது, நல்ல முறையில் செயல்பட உதவும். பணவரவு சுமாராக இருக்கும். எனவே, அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. ஜாக்கிரதை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு திறமைக்கு ஏற்ற பரிசு காத்திருக்கு.. 26.12.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் | Mithunam Nalaya Rasi Palan

வேலை செய்யும் இடத்தில் நல்லபேர் கிடைக்கும். வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். எதிர்பாரா செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். எதையும் நம்பிக்கையோடு செய்தால் வெற்றி உங்கள் கையில். எந்த நிலையிலும் பொறுமையை மட்டும் இழந்துவிட கூடாது. இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பணவரவு உண்டு. சேமித்து வைக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத லாபங்கள் உங்கள் மனதை குளிர்விக்கலாம். தாயின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு திறமைக்கு ஏற்ற பரிசு காத்திருக்கு.. 26.12.2022 ராசிபலன்!Representative Image

கடகம் | Kadagam Nalaya Rasi Palan

எப்போதும் அதிர்ஷ்டத்தையே நம்பாமல் தன்னம்பிக்கையை நம்பினால் வெற்றி அடைய முடியும். உடன் வேலை செய்பவர்களே உங்களுக்கு வேட்டு வைத்திடுவார்கள். அவர்களிடம் எதையும் யோசித்து பேசுவது நல்லது. பெயர் தெரியாவர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு இத்தனை நாள் இருந்த வந்த போட்டி பொறாமைகள் குறையும். வேலைத் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு திறமைக்கு ஏற்ற பரிசு காத்திருக்கு.. 26.12.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் | Simmam Nalaya Rasi Palan

தனவரவு தாராளமாக இருக்கும். பெற்றோர்களின் ஆதரவையும் அன்பையும் பெறுவீர்கள். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் காணப்படும். உங்க துணையுடன் வீண்விவாதங்கள் ஏற்படும். எனவே, எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வது நன்மை அளிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு போக வாய்ப்புள்ளது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிறப்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு திறமைக்கு ஏற்ற பரிசு காத்திருக்கு.. 26.12.2022 ராசிபலன்!Representative Image

கன்னி | Kanni Nalaya Rasi Palan 

கடந்த காலத்தை பற்றி யோசிப்பது வேஸ்ட். அது உங்களுக்கு மனஉலச்சலை தான் ஏற்படுத்தும். வேலை செய்யும் இடத்தில் அதிக வேலைபளு இருக்கும். இதனால் டென்ஷனாகி வேலையில் தவறு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, திட்டமிட்டு பணியாற்றவது நல்லது. இதற்கிடையில் நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். மனைவியிடம் தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள். சிந்தனை!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [26.12.2022]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்