Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

August Month Mithuna Rasi Palan 2022: சுக்கிரனின் பெயர்ச்சி மிதுன ராசிக்கு நன்மை அளிக்குமா….!

Manoj Krishnamoorthi July 24, 2022 & 16:05 [IST]
August Month Mithuna Rasi Palan 2022: சுக்கிரனின் பெயர்ச்சி மிதுன ராசிக்கு நன்மை அளிக்குமா….!Representative Image.

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022  ( மேஷம்- மீனம்)


மிதுனம் (August Month Mithuna Rasi Palan 2022)

பேச்சாற்றலால் திறமையாகத் தலைமை அமைக்கும் மிதுன ராசிக்காரரே இந்த 2022 ஆகஸ்ட் மாதம் (August Month Mithuna Rasi Palan 2022) சாதகமாக உள்ளதா நற்பலன் அளிக்குமா...? இல்லை ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா... என்பதை பற்றி எங்கள் பதிவு தெளிவுபடுத்தும். 

பொது பலன்: 

உங்கள் ராசியில் சுக்கிரன் இருப்பதால் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும் அதன்பிறகு கடகத்தில் சுக்கிரன் அமர்வதும் புதன் உச்சம் பெறுவதும் உங்களுக்கு பெரியளவு பாதிப்பு இல்லை. புதன் சிம்மத்தில் இருப்பது மன உறுதியை அதிகப்படுத்தும். 

குடும்ப வாழ்க்கை:

உங்கள் ராசியில் 12 ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பது திருமண வாழ்க்கை ஓரளவு நன்றாக நகரும், உங்கள் ராசியில் சாதகமாக அமைந்திருக்கும் கேதுவின் நிலை உங்களுக்கு  காதல் வாழ்வில் அழுத்தமான தருணங்களாக மாற்றும். திருமணமாகாத மிதுன ராசிக்காரருக்கு செவ்வாயின் நிலை  12 இருப்பது திருமணத்தில் கால தாமதம் ஏற்படுத்தும்.  குடும்ப நபர்களால் சில மன வருத்தம் ஏற்படும். 

தொழில்:

உங்கள் தொழில் ஸ்தானம் இந்த மாத தொடக்கத்தில் அருமையாக இருக்கும், புதன் சாதகமாக இருப்பதால் தொழிலில் பல தைரியமான காரியங்கள் எடுப்பீர்கள். சனி பகவான் மகரத்தில் வக்கிரமாக இருப்பது தொழில் ஸ்தானத்தில் மாற்றங்களை நிகழ்த்தும்.  உங்கள் ராசியில் அமர்ந்திருக்கும் சுக்கிரன் மற்றும் சூரியன் சேர்க்கை வருமானத்தை உயர்த்தும். நிதி நிலை சாதகமாக இருக்கும். கல்வி ஸ்தானத்தில் பிரச்சனை இல்லை, இயல்பாக இருக்கும்.

உடல்நலம்:

உங்கள் உடல்நலத்தில் சிறிய தொல்லைகள் இருக்கும், அதுவும் படிப்படியாக நிவர்த்தி அடையும். குடும்பத்தினருக்கு மருத்துவ செலவு செய்ய வேண்டிய தருணம் உருவாகும் வாய்ப்பு உள்ளது. 

பரிகாரம்: 

வாரந்தோறும் புதன்கிழமை அன்று விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமை தினத்தில் பால் தானமாக வழங்குவது நற்பலனை அளிக்கும்.

ரிஷப ராசியின் ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

TAG: August Month Mithuna Rasi Palan 2022 | August Month  mithunam Rasi Palan 2022 |  mithuna Rasi Palan August 2022 In Tamil |  mithunam Rasi Palan August Month 2022 |  mithunam Rasi Palan August Month 2022 | August Matha  mithuna Rasi Palan 2022 In Tamil | August Matha  mithunam Rasi Palan 2022 | August Matha  mithunam Rasi Palan 2022 In Tamil | August Month  mithuna Rasipalan 2022 |  mithunam August Matha Rasi Palan 2022 |  mithunam Monthly Rasi Palan | Tamil  mithunam August Month Rasi Palan 2022  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்