Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

August Month Rasi Palan 2022 In Tamil: சுக்கிரன் கடகத்தில் வருவதால் அதிர்ஷ்டம் காணும் ராசிக்காரர்கள்….!

Manoj Krishnamoorthi July 26, 2022 & 17:15 [IST]
August Month Rasi Palan 2022 In Tamil: சுக்கிரன் கடகத்தில் வருவதால் அதிர்ஷ்டம் காணும் ராசிக்காரர்கள்….!Representative Image.

கிரகங்களின் நிலை மாற்றம்  நம் ராசியில் பல மாற்றங்களை நிகழ்த்தும், அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் (August Month Rasi Palan 2022 In Tamil)  புதன், சுக்கிரன், சூரியன் பெயர்ச்சி அடைவதால் பல ராசியில் பல நிகழ்வுகள் நடக்கவிருக்கிறது. மேற்கண்ட கிரகங்களின் நிலைமற்றத்தால் சாதகமான பலன் அடையும் ராசி பற்றியும் கவனமாக இருக்க வேண்டிய ராசி பற்றியும் அறிய இந்த வாசகம் உங்களுக்கு தெளிவுபடுத்தும். 

மேஷம் (Mesha Rasi Palan August 2022 in Tamil)

மேஷ ராசிக்காரரே உங்கள் ராசியில் பத்தாம் வீட்டில் சனி அமைதியாக இருப்பது தொழில் ஸ்தானத்தில் சற்று தொய்வு ஏற்படுத்தும். மேலும் 12 வீட்டில் இருக்கும் புதன் சரியான நிலை இல்லாமல் இருப்பது மாணவர்களின் கல்வி ஸ்தானத்தில் பெரிய முன்னேற்றம் அளிக்காது, பெரிய பாதிப்பும் ஏற்படாது.  இருப்பினும் நான்காம் வீட்டில் சுக்கிரன் மற்றும் சூரியன் இருப்பது மகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கும்.  ஆரோக்கியத்தில் சிறிய தொல்லைகள் இருக்கும்.

மேலும் தெரிந்து கொள்ள……..

ரிஷபம் (August Month Rishaba Rasi Palan 2022)

ரிஷப ராசிக்காரரே இந்த வருடம் 2022 ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு சாதகமான மாதம் என்றே கூறலாம், பத்தாம் வீட்டின் அதிபதி சனி 9 இல் இருப்பது தொழில் ஸ்தானத்தை சிறப்பாக மாற்றும். புதனின் நிலையும் சாதகமாக இருப்பது மாணவர்களின் கல்வி நிலை முன்னேற்றமடைய செய்யும். குடும்பத்தில் உங்கள் சொல்லுக்கு நல்ல மதிப்பு இருக்கும். நிதி நிலையில் பிரச்சனை இல்லை. சிறப்பான மனநிலை இருந்தாலும் ஆரோக்கியத்தில் கவனமாக வேண்டும்.

மேலும் தெரிந்து கொள்ள……..

மிதுனம் (August Month Mithuna Rasi Palan 2022)

மிதுன ராசிக்காரரே உங்கள் ராசியில் சுக்கிரன் இருப்பதால் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும் அதன்பிறகு கடகத்தில் சுக்கிரன் அமர்வதும் புதன் உச்சம் பெறுவதும் உங்களுக்கு பெரியளவு பாதிப்பு இல்லை. புதன் சிம்மத்தில் இருப்பது மன உறுதியை அதிகப்படுத்தும். 

மேலும் தெரிந்து கொள்ள……..

கடகம் (August Month Kadagam Rasi Palan 2022)

கடக ராசிக்காரரே இந்த ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாகும், குறிப்பாகக் கல்வி ஸ்தானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் ராசியில் இராகு மற்றும் செவ்வாயின் சேர்க்கை மிகப்பெரிய யோகமாக மாறும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது.  இந்த மாதம் சந்திரனின் சேர்க்கை குருவில் ஆரம்பித்து சனி, செவ்வாய் எனப் பயணிப்பது கடக ராசிக்கு நல்ல தருணமாக அமையும்.

மேலும் தெரிந்து கொள்ள……..

சிம்மம் ( August Month  simmam Rasi Palan 2022)

சிம்ம ராசிக்காரரே இந்த மாதம் புதன் சிம்மத்தில் இருப்பதும் சுக்கிரன் ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிறகு கடகத்தில் வருவது தொழில் மாற்றத்தைப் பற்றிய எதிர்மறை சிந்தனைகளை அளிக்கும், எனவே அமைதியாக இருப்பது பிரச்சனை இல்லாமல் இருக்க வைக்கும். 12 ஆம் வீட்டில் இருக்கும் சுக்கிரன் ஆரோக்கிய கேடு அளிக்கும். கல்வி நிலையில் பிரச்சனை இல்லை.

முழுமையான தகவலை அறிய……

கன்னி (August Month  Kanni Rasi Palan 2022)

கன்னி ராசிக்காரே சுக்கிரன் 11 ஆம் வீட்டிலும் சனி 5ஆம் வீட்டிலும் இருப்பதும் குருவின் வக்கிரம் கன்னியின் மேல் வருவது நல்ல தருணமாக அமையும். சனியின் வக்கிரம் 5 இல் இருப்பது கல்வி ஸ்தானத்தில் நல்ல வளர்ச்சியாக இருக்கும். ஓரளவு நல்ல குடும்ப வாழ்க்கை உள்ளது. உடல்நலத்தில் பெரிய பிரச்சனைகள் வராது என்றாலும்,

மேலும் அறிய……

துலாம் (August Month  Thulam Rasi Palan 2022)

துலாம் ராசிக்காரரே இந்த மாதம் சுக்கிரனின் நிலை ஒன்பதாம் வீட்டில் இருந்து பத்தாம் வீட்டுக்கு செல்வது சாதகமான பலன் அளிக்கும், சுக்கிரனின் சாதகமான பார்வை உங்கள் கல்வி நிலையை உயர்த்தும்.  மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகமாகும்.  உடல்நலத்தில் சில தொல்லைகள் உருவாக்கக் கூடும்.

மேலும் அறிந்து கொள்ள……

விருச்சிகம் ( August Month Viruchigam Rasi Palan 2022)

விருச்சிக ராசிக்காரரே உங்கள் ராசிக்கு சனி 3 ஆம் வீட்டிலும் குரு 5 ஆம் வீட்டிலும் வக்கிரம் கொண்டு இருப்பது சாதகமாகும். முக்கியமாக செவ்வாயின் பார்வை உங்களுக்கு நன்மைகளை அளிக்கும். தெளிவான மனநிலை இருக்கும். ஆரோக்கிய சார்ந்த பிரச்சனைகளை சரி செய்யும் மாதமாக அமையும். 

மேலும் அறிந்து கொள்ள……

தனுசு (August Month Dhanusu Rasi Palan 2022)

தனுசு ராசிக்காரரே ஆகஸ்ட் மாதம் சனியின் பார்வையில் குரு இருப்பதால் புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் அமைதி காக்க வேண்டிய தருணமாக உள்ளது. உங்களின் 7 1/2 சனியின் தக்கம் சற்று குறையும். மேலும் 5 ஆம் வீட்டில் இருக்கும் இராகு மனதில் குழப்பத்தை விதைக்கும் மன உறுதியுடன் இருக்க வேண்டிய தருணமாகும். 

மேலும் அறிய…..

மகரம் (Magara Rasi Palan August 2022 in Tamil)

மகர ராசிக்காரரே சுக்கிரனின் பார்வை மகரத்தில் விழுவதும் புதன் உச்சம் அடைவதும்  சாதகமான பலன் அளிக்கும். முக்கியமாக சனி மகரத்தில் இருப்பது நல்ல தருணமாக அமையும், அமைதியாக வாழ்க்கை நகரும்.

மேலும் அறிய……

கும்பம் (Kumbam august month rasi palan 2022 in tamil)

கும்ப ராசிக்காரரே  12 இல் சனி இருப்பது சில விரைய செலவுகளை உருவாக்கும், பண விசயத்தில் சேமிப்பு என்பது இருக்காது. தொழில் ஸ்தானத்தில் புதிய மாற்றம் செய்ய வேண்டும். புதன் 8 ஆம் வீட்டில் உச்சம் கொள்வதால் குழப்பமான மனநிலை இருக்கும். 

மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்….

மீனம் (Meenam Rasi Palan August 2022 in Tamil)

மீன ராசிக்காரரே உங்களுக்கு இந்த ஏற்ற இறக்கமாக அமையும். சனி பகவான் 11 ஆம் வீட்டில் இருப்பது சிறப்பாக மையும், குருவின் வக்கிரம் தேவைகளைப் பூர்த்தி செய்ய வைக்கும். ஆனால் அதிகமான செலவை உருவாக்கும்.  ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய தருணமாகும்.

முழுவதும் அறிய…

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

Tag: August Month Rasi Palan 2022 In Tamil | August Matha Rasi Palan 2022 In Tamil | August Masam Rasi Palan | August Matha Rasi Palan 2022 | August Month Rasi Palan 2022 | August Month 2022 Tamil Rasipalan | ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்