Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொட்டதுக்கெல்லாம் செலவு வரும்.. கவனம் தேவை.. | Chithirai Month Rasi Palan 2023 Mesham in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
தொட்டதுக்கெல்லாம் செலவு வரும்.. கவனம் தேவை.. | Chithirai Month Rasi Palan 2023 Mesham in TamilRepresentative Image.

சித்திரை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: சித்திரை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, சூரியன் மற்றும் புதன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், குரு பகவான் சித்திரை மாதம் 08 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், சித்திரை 19 ஆம் தேதி சுக்கிர பகவான் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கும், சித்திரை 27 ஆம் தேதி செவ்வாய் பகவான் மிதுனத்திலிருந்து கடகத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் சித்திரை மாதத்தில் மேஷ ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

தொட்டதுக்கெல்லாம் செலவு வரும்.. கவனம் தேவை.. | Chithirai Month Rasi Palan 2023 Mesham in TamilRepresentative Image

12 ஆம் இடத்தில் இருக்கும் குருபகவானால் பெரிய பிரச்சனை இருக்காது. நிறைய கோவில்களுக்கு தானம், தர்மம் செய்வீர்கள். திடீர் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். 22ஆம் தேதிக்கு பிறகு குருபகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாவதால், உடல் சார்ந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு சிறிய விஷயமாக இருந்தாலும் மற்றவரை நம்பி அவர்களிடம் சொல்வதை தவிர்க்கவும். முடிந்த ரகசியமாக வைத்துக் கொள்வது சிறந்தது. 

செலவுகள் அதிகரிக்கும் மாதமாக இருக்கும். எனவே, முடிந்த வரை அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. ஒரு சிலருக்கு அனைத்தும் இருந்தும் திருப்தியற்ற மனநிலை நிலவும். வெளிநாடுகளில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மனக்குழப்பங்கள் நிறைந்து காணப்படும். இந்த பிரச்சனைகளில் தப்பிக்க வேண்டுமென்றால் விநாயகர் பெருமானை தினமும் வழிபாடு செய்யுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்