Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிர்ஷ்டம் தான்... இருந்தாலும் இந்த விஷயத்துல எச்சரிக்கை வேண்டும்.. | Viruchigam April Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
அதிர்ஷ்டம் தான்... இருந்தாலும் இந்த விஷயத்துல எச்சரிக்கை வேண்டும்.. | Viruchigam April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

ஏப்ரல் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷ ராசியில் புதன், ராகு பகவான்; ரிஷப ராசியில் சுக்கிர பகவான்; மிதுன ராசியில் செவ்வாய்; துலாம் ராசியில் கேது பகவான்; கும்ப ராசியில் சனி பகவான்; மீன ராசியில் குரு, சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி மீன ராசியில் சஞ்சாரம் செய்த சூரிய பகவான் மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேப்போல், 21 ஆம் தேதி புதன் வக்கிரமாகிறார். இதனால், ஏப்ரல் மாதத்தில் விருச்சிக ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

அதிர்ஷ்டம் தான்... இருந்தாலும் இந்த விஷயத்துல எச்சரிக்கை வேண்டும்.. | Viruchigam April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

உங்க ராசிக்கு 5ஆம் இடமான பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சூரியன், குருவால் இந்த மாதம் பல ஏற்றத்தை கொடுக்கும் மாதமாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். சிலருக்கு நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீட்டுக்கு குடியேறும் யோகம் உண்டு. மாணவர்களுக்கு வெளிநாடுகளில் படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டம் தான்... இருந்தாலும் இந்த விஷயத்துல எச்சரிக்கை வேண்டும்.. | Viruchigam April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆனால், ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு 6 ஆம் இடமான சத்ரு ஸ்தானத்தில் 4 கிரகங்களின் சேர்க்கை இன்னும் சிறப்பு. பார்த்தவர்களெல்லாம் எதிரிகளாக மாறுவார்கள். ஆனால், வெற்றி உங்களுக்கு தான். எந்த காரியத்திலும் துணிச்சலோடு இறங்குவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்கள் சாதகமான பலன் கிடைக்கும். பணம், பொருளாதாரம் அமோகமாக இருக்கும். இருப்பினும், விட்டுக்கொடுத்து நடந்துக்கொள்வது நல்லது. ஒரு சிலருக்கு இந்த காலக்கட்டத்தில் உடல் உஷ்ண பிரச்சனைகள் வரலாம். பணியிடத்தில் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

வணங்க வேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்