Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Inraiya Raasi Palan: ஜம்முனு வேறலெவலில் வாழும் அதிர்ஷ்ட ராசிக்காரர் இவரா! ஆனால்  தனுசு ராசிக்கு இப்படியொரு நிலையா? ஜூன் 4, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi June 03, 2022 & 13:30 [IST]
Inraiya Raasi Palan: ஜம்முனு வேறலெவலில் வாழும் அதிர்ஷ்ட ராசிக்காரர் இவரா! ஆனால்  தனுசு ராசிக்கு இப்படியொரு நிலையா? ஜூன் 4, 2022 ராசிபலன்..!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                      Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 10:30-  11:30 வரை

மாலை: 09:30- 10:30 வரை

Inraiya Raasi Palan

மேஷம் (Aries 2022 Horoscope)

இனிமையான மனதைக் கொண்ட  உங்களுக்கு வெளியிடங்களுக்கு செல்வதால் உற்சாகம் அதிகமாக இருக்கும், குடும்பத்தினர் உடன் அதிக நேரம் செலவழிக்கக் கூடும். திருமண வாழ்வில் விட்டு கொடுத்து வாழ்வது துணையின் மனதை நிம்மதியடையச் செய்யும். வாழ்க்கைத் துணையைப் பற்றிய புரிதல் அதிகமாகும்.  இன்று உங்கள் செல்வ நிலையில் செலவு அதிகமாகும், பொழுதுபோக்கு அம்சங்களில் ஆர்வம் தோன்றும்.தொழிலில்  கவனமாக இருக்க வேண்டும், சில தவறுகள் நடக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்ட வேண்டும். உடலில் கால் வலி போன்ற பிரச்சனைகள் தோன்றும். தொழில் மந்தம்!  

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7


மேலும் படிக்க: June Month Rasi Palan: குழப்பமான மன நிலையில் இருக்கும் அந்த ராசிக்காரர்  நீங்களா....!  ஜீன் மாத ராசிபலன் 2022 முதல் பாதியை அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


ரிஷபம் (Taurus 2022 Horoscope)

எதிர்கால சிந்தனை கொண்ட ரிஷப ராசிக்காரரே இன்று  நீங்கள் சில நிதி  சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். அலுவலகத்தில் சக பணியாளரிடம் ஒரு நல்ல உறவு இருக்கும். உங்கள் அலுவலக வேலையில் நன்மைகள் உருவாகும். இன்று பண வரவு இருக்கும், அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும். கல்வியில் கவனம் வேண்டும். திருமண வாழ்க்கையில் சிறிய கருத்து வேறுபாடு உருவாகும், ஆனால் விட்டு கொடுத்து போகுன் உங்கள் மனப்போக்கு குடும்ப வாழ்வை சீறாக்கும். காதல் வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். லாபம்! 

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை 

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் (Gemini 2022 Horoscope)

யதார்த்தமான நடத்தையால் அனைவரையும் கவரும் உங்களுக்கு இன்று முயற்சியில் ஒருசில தடங்கல் வந்தாலும் தொடர்ந்து போராடும் உறுதி  தேவைப்படும். வீட்டில் இன்று நிலைமை சரியாக இல்லை, திடீரென கோபம் வரும்.  குடும்பத்தினரின் வார்த்தையை எளியதாக எடுத்து கொள்ள வேண்டும். பண வரவு சற்று குறையும், இன்று நிதி நிலையில் எந்தவொரு முக்கிய முடிவும் எடுக்காமல் தவிர்க்க வேண்டும். உங்கள் நகைச்சுவை உணர்வு மனதை ஓரளவு நிம்மதி அடையச் செய்யும். குடும்பத்தினரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். பயம்!   

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 6

கடகம் (Cancer 2022 Horoscope)

கலை ஞானம் அதிகம் கொண்ட கடக ராசிக்காரரே இன்று உங்கள்  திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும் நாளாகும், தொழிலில் சில எதிர்ப்புகள் உருவாகும், கொஞ்சம் சிரமப்பட்டு போராட வேண்டியிருக்கும், செல்வ வரவு இருக்கும். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சொத்துகள் வாங்கும் எண்ணம் உதிக்கும். வீட்டில்  நிம்மதியாக இருப்பீர்கள், மனம் புத்துணர்ச்சியாக இருக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. கல்வி நிலை சிறப்பாக உள்ளது. அமைதி!  


அதிகமாக படிப்பவை: June Month Rasi Palan 2022 in Tamil: கடகம், சிம்மம், கன்னி ராசியின் ஜூன் மாத ராசிபலன்! பற்றி அறிய இங்குக்ளிக் செய்யவும்.   


அதிர்ஷ்ட நிறம்:  பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம் (Leo 2022 Horoscope)

நேர்மையான வாழ்க்கை நடத்தும்  சிம்ம ராசியாளரே இன்றைய தினம் உங்களுக்கு கலவையான பலனைத் தரும், கோபத்தைக் குறைத்துக் கொள்ளுவது உங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி அளிக்கும், செல்வ வரவு ஓரளவு நன்றாக இருக்கும். இல்லையென்றால் மன உளைச்சல் ஏற்படும். பணியிடத்தில் வேலைச் சுமை அதிகமாக இருக்கும், பதட்டமாக இருப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் நடத்தை மற்றவருக்கு வருத்தம் அளிக்கும், முன்கோபம் உறவில் விரிசலை உருவாக்கும். உடல் சோர்வாக இருக்கும், ஓய்வு எடுப்பது ஆரோக்கியத்துக்கு நன்மையாகும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். வரவு!   

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Virgo 2022 Horoscope)

கனிவான பேச்சால் பிறரை வசீகரிக்கும் கன்னி ராசிக்காரரே இன்று தொழிலில் அமோகமான வெற்றி கிடைக்கும், உங்கள் புகழ் உயரும். உத்தியோகத்தில் இருப்பவருக்கு நிம்மதியான சூழல் உருவாகும், சக பணியாளருடன் இன்பமாக இருப்பீர்கள். பண வரவு ஓரளவு நன்றாக உள்ளது. நிதி நிலையில் அதிகமான செலவுகள் இருக்கும், கையிருப்பு குறையும். ஆரோக்கியத்தில் பிரச்சனையில்லை, உணவு கட்டுப்பாடு அவசியமாகும். மாணவர்களுக்கு இன்று திடீர் பாராட்டு கிடைக்கும், கல்வியில் ஆர்வம் கூடும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 5


இதையும் படிக்க: June Month Rasi Palan 2022: துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ஜூன் மாத ராசிபலன் பற்றி முழுமையாக அறிய இங்கு க்ளிக்  செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

பிறருக்கு உதவு குணம் அதிகம் கொண்ட உங்களுக்கு  தொழில் மெதுவாக வளர்ச்சி அடையும், தொழில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இயல்பு நிலை திரும்பும். இன்று உங்கள் செல்வ நிலையில் கட்டுப்படுத்த முடியாத செலவுகள் வரும். கல்வியில் எந்த பிரச்சனையும் இருக்காது. . இன்று உங்கள் ஆரோக்கியம் நன்றாக உள்ளது, இருப்பினும் சிறிய கவனம் அவசியமாகும். திருமண வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். காதல் செய்யும் துலாம் ராசியினரின் உறவில் நல்ல புரிதல் இருக்கும். செலவு!  

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

அன்பான குணத்தின் அதிபதியான விருச்சிக ராசிக்காரரே இன்று உங்கள் ராசிக்கு மிகவும் அருமையான நாளாக இருக்கும், உத்தியோகத்தில் சக பணியாளரிடம் நல்ல உறவு இருக்கும், இதுவரை இருந்த கடினமான சூழல் மறையும். இன்று தொழில் ஸ்தானம் நன்றாக உள்ளது. திருமண வாழ்க்கையில் உங்கள் நகைச்சுவையான பேச்சு  அன்யோன்யத்தைக் கூட்டும். செல்வ நிலை திருப்திகரமாக உள்ளது. செல்வ நிலையில் இன்று அதிகமான செலவுகள் இருக்கும், பணம் விரைவாக கரையும். கல்வி ஸ்தானம் சிறப்பாக உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு (Sagittarius 2022 Horoscope)

மற்றவரின் கருத்தில் கவனம் கொள்ளாமல் கடினமான உழைக்கும் உங்களுக்கு இன்று  சில எதிர்மறையான நிகழ்வுகள் நடக்கும் நாளாக இருக்கும், இருப்பினும் பெரியதாகப் பாதிப்பு எதுவுமில்லை. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும், பணியாளர்கள் முழுமூச்சுடன் வேலை செய்வர். உத்தியோகத்தில் இன்று மகிழ்ச்சியான சூழல் நிறைந்திருக்கும். நிதி நிலையில் வளர்ச்சி இருக்கும், மனம் போதும் என்று நினைக்கும் அளவு செல்வம்  உங்கள் கையில் இருக்கும். எதிர்கால சேமிப்பில் முதலீடு செய்வீர்கள், வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அதிகமாக போராடுவீர்கள். வீட்டில் இன்பமான சூழல் நிறைந்திருக்கும், காதல் வாழ்க்கையில் உங்கள் இனிமையான பேச்சு இன்று சிலருக்கு மன வருத்தத்தை அளிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. சுகம்!  

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

மகரம் (Capricorn 2022 Horoscope)

பிறரைச் சந்தோஷமாக வைக்க அயராது போராடும் மகர ராசிக்காரரே இன்று மனம் அதிகமான வருத்தம் கொள்ளும், அதிகமான மன உளைச்சல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். இறை நம்பிக்கை மனதை வலுவூட்டும். உங்கள் செல்வ நிலை திருப்திகரமாக உள்ளது. குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கிறது, உங்கள் பேச்சால் சிறு ஊடல்கள் வரும்.  குடும்ப நபருடன் பேசும்போது இன்று அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். தொழில் ஸ்தானம் இயல்பு நிலையில் உள்ளது, எதிர்பார்க்காத நற்பலன் கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை அமோகமாக உள்ளது. மதிப்பு கூடும்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 8


மேலும் படிக்க: மகரம், கும்பம், மீன ராசியின் ஜூன் மாத ராசிபலன்..! பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


கும்பம் (Aquarius 2022 Horoscope)

திடமான மனதுக்கு சொந்தக்காரரான கும்ப ராசிக்காரரே இன்று  தொழிலில் புதிய முயற்சிகளை அதிகமாக எடுப்பீர்கள், சரியான திட்டமிடுதல் உங்களுக்கு சரியான பலன் அளிக்கும். இன்று செல்வ நிலையில் கூடுதல் கவனம் தேவைப்படும். வெளியில் செல்லும்போது பணத்தைச் சிந்தித்து கையாள வேண்டும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் தோன்றும், ஆனால் குடும்பத்தினர் பெரியதாக எடுத்து கொள்ள மாட்டார்கள் அதனால் குடும்பத்தின் ஒற்றுமை அடிபடாது. இன்று பொறுமையாக இருப்பது உங்களுக்கு அன்பான சூழலை அமைக்கும். உடல்நலத்தில் சிறிய கோளாறு ஏற்படும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்:  அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

மீனம்(Pisces 2022 Horoscope)

தெளிவான மனம் இருந்தால் நிச்சயம் வெற்றி கொள்ளலாம் என்பதை உணர்ந்து அயராது போராடும் மீன ராசிக்காரரே இன்று உங்கள் ராசியில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். எந்த விசயத்தையும் சீரியஸ்ஸாக எடுக்காமல் சகஜமாக எடுத்துக்கொள்வது உங்கள் மன நிலைக்கு நல்லதாகும். இன்று அலுவலகப் பணிகள் அதிகமாக இருக்கும். வீட்டில் இன்று நட்பு உறவோடு பழகுவீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், சேமிப்பு அதிகரிக்காது செலவு தான் அதிகமாக இருக்கும். திடீர் பணவரவு இருக்கும். சமூகத்தில் இன்று உங்கள் மீது மதிப்பு கூடும். நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 5

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்... 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்