Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Rasi Palan in Tamil: கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்… ஜூலை 14.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan July 13, 2022 & 13:30 [IST]
Tomorrow Rasi Palan in Tamil: கவலையே கெதி என்று இருந்த இந்த ராசிக்காரருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்… ஜூலை 14.2022 ராசிபலன்!Representative Image.

Tomorrow Rasi Palan in Tamil | Today Rasi Palan in Tamil | Nalaya Rasi Palan | Tomorrow Horoscope in Tamil | Indraya Rasi Palan Tamil | Rasi Palan Today Tamil

நல்ல நேரம்:

காலை: 10.45 – 11.45 வரை

மாலை: இல்லை

Tomorrow Rasi Palan in Tamil: மங்களகரமான சுபகிருது வருடம் ஆனி மாதம் 30 ஆம் நாள் வியாழக்கிழமை (2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி) நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிமையான சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் கிட்டும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்ச்சியடைவார்கள். வியாபாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை; கொடுக்கல் வாங்கல் சரளமாகவே இருக்கும். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு அமோகமாக இருக்கும்.  கடின உழைப்பு இருந்தால் மட்டுமே வெற்றிக் காண முடியும். கண், பற்களுக்கான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மகிழ்ச்சி!

ரிஷபம்

இன்றைய நாள் உங்களுக்கு சாதமாக இருக்காது. எனவே, அமைதியாக இருப்பது உத்தமம். எந்த பிரச்சனையிலும் கொஞ்சம் விட்டு கொடுத்து போவது, குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைக்கச் செய்யும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது, வீண் சிரமங்களை தவிர்க்க கவனத்தோடு பணியாற்ற வேண்டும். புதிய செயல்களை தொடங்க அனுகூலமான நாளாகும். நிதிநிலைமை சிறப்பாக இருக்காது, இருந்தாலும் செலவுகள் வீடி தேடி வரும். இதனால், சிறிது பதட்டத்துடன் காணப்படுவீர்கள். கவனம்!

மிதுனம்

கவலையே கெதி என்று இருந்த மிதுன ராசிக்காரர்களின் மனதில் இன்று நல்ல மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு அமையும். திருமண முயற்சிகள் தொடங்க நல்ல அனுகூலமான நாளாகும். தூரத்து உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். இன்று உங்களை வேண்டுமென்றே வம்பிற்கு இழுப்பார்கள், அதை புரிந்திக் கொண்டு சாதுர்யமாக செயல்படுங்கள். கணவன்-மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். பணிவான பேச்சால் சமாளிக்க முயற்சி செய்யுங்கள்.  பணிவு!

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, ஆனந்தம் பொங்கும். நண்பர்கள் உதவி தேடி வரும். எந்த முயற்சியிலும் வெற்றி காண்பீர்கள். உன்னதமான திறமையால் வேலைகளை குறித்த நேரத்தில் முடித்து காட்டுவீர்கள். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சொந்தக்காரங்க மூலம் சுபச் செய்திகள் வரும். செலவுகள் குறையும். பணவரவு!

சிம்மம்

உங்களின் அறிவுத் திறமையால் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பிள்ளைகள் வழியாக நல்ல செய்தி காத்திருக்கிறது. நண்பர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சூழல் மகிழ்ச்சியை தரும். உங்களுடைய உழைப்பிற்கான பரிசு கிடைக்கும். இன்று உங்களது வாழ்வில் புது அத்தியாயம் தொடங்கியது போல உணர்வீர்கள். உற்றார் உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சனை குறையும். பணவரவு அமோகமாக உள்ளது. இதனால் உற்சாகமாக இருப்பீர்கள். உற்சாகம்!

கன்னி

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். இன்று மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உடன் பணிபுரிவோர்களிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்க மனைவியிடம் பேசுவதில் எந்த ஒளிவ மறைவும் இருக்க கூடாது. இதனால், வீண் பிரச்சனை ஏற்படாது. புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைக் கொடுக்கும். சேமித்து வைத்துக் கொள்ளும் அளவிற்கு வருமானம் உண்டு. புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆக மொத்தத்தில் மகிச்சிகரமான நாளாக இருக்கும். ஆனந்தம்!


துலாம் முதல் மீனம் வரை உள்ள அடுத்த 6 ராசியினருடைய தினசரி ராசிபலன் பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும்


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்