Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Horoscope in Tamil: இந்த ராசியினருக்கு இன்று எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.. ஜூலை 14.2022 ராசிபலன்..!!

Nandhinipriya Ganeshan July 13, 2022 & 14:40 [IST]
Tomorrow Horoscope in Tamil: இந்த ராசியினருக்கு இன்று எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.. ஜூலை 14.2022 ராசிபலன்..!!Representative Image.

Tomorrow Horoscope in Tamil | Indraya Rasi Palan Tamil | Tomorrow Rasi Palan in Tamil | Nalaya Rasi Palan | Rasi Palan Today Tamil

நல்ல நேரம்:

காலை: 10.45 – 11.45 வரை

மாலை: இல்லை

Tomorrow Rasi Palan in Tamil: மங்களகரமான சுபகிருது வருடம் ஆனி மாதம் 30 ஆம் நாள் வியாழக்கிழமை (2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி) நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.


மேஷம் முதல் கன்னி வரை உள்ள முதல் 6 ராசியின் தினசரி ராசிபலன் பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும்.


துலாம்

துலாம் ராசிக்காரர்களே! பல தடைகளை சந்தித்த பின் திருப்தி காண்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதிக சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, புத்திசாலிதனமாக செயல்பட்டு திறமையாய் வெளிப்படுத்துங்கள். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இவ்வளவு நாட்களாக இழுத்தடிச்ச சுபகாரியங்கள் கைக்கூடும். குடும்பத்தில் சந்தோசம் நிலவும். அனுகூலம்!

விருச்சிகம்

பணியிடத்தில் நீங்க தனி முன்னேற்றம் காண்பீர்கள். உங்களுடைய திறமையை கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள். ஆக மொத்தத்தில் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். எந்த செயலையும் துணிந்து செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனையால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எனவே, யார் எதுப்பேசினாலும் பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் புதிய திருப்பம். இருவர்களுக்கும் இடையில் அன்பு, பாசம், காதல் அதிகரிக்கும். அன்பு!

தனுசு

மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சவாலான சூழ்நிலையிலும் உங்களுடைய நேர்மறையான எண்ணங்கள் வெற்றியை கொண்டு வரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் வருமானம் பெருகும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டும். இவ்வளவு நாட்களாக மனதை போட்டு வதைத்துக் கொண்டிருந்த சில பிரச்சனைகளை உங்க மனைவியிடம் ஷேர் செய்துக் கொள்வீர்கள். இதனால், மனதில் இருந்த பாரம் குறையும். நெருங்கிய உறவுகளுக்காக பணம் செலவு செய்வீர்கள். இன்பம்!

மகரம்

ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. சொந்தக்காரங்க உங்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று யதார்த்தமாகவும் தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். வேலையில் பணிச்சுமை குறையும். உங்க துணையுடன் கோபத்தை காட்டவேண்டாம். தன்மையாக பேச பழகிக்கொள்ளுங்கள். இல்லையென்றால் நஷ்டம் உங்களுக்கு தான். வீண் செலவுகள் தேடிவரும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். செலவு!

கும்பம்

பணவரவு அமோகமாக இருக்கும். இதுவரை நண்பர்களுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி, பழையப்படி பேசிக் கொள்வீர்கள். எதையும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். எடுத்தோம் கவுத்தோம் என்று இருக்க வேண்டும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். இல்லையெனில் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். லாபம்!

மீனம்

வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன் பொருள் வாங்குவதற்கான யோகம் கிட்டும். உங்களுடைய திறமைகளை வெளிபடுத்தி பலரது பாராட்டையும் பெறுவீர்கள். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்துடன் சந்தோசமாக நேரத்தை செலவிடுவீர்கள். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி சூழல் நிலவும். பாராட்டு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்