Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,616.44
-327.24sensex(-0.45%)
நிஃப்டி22,022.45
-125.45sensex(-0.57%)
USD
81.57
Exclusive

தற்பெருமை சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.04.2023

Nandhinipriya Ganeshan Updated:
தற்பெருமை சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.04.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 16 ஆம் நாளுக்கான [29 ஏப்ரல் 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

தற்பெருமை சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.04.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

பிரபலமானவர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் திடீர் மந்தத்தன்மை ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் கனிவான பேச்சு அவசியம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். தந்தை வழி உறவுகளால் வீண் செலவுகள் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு பணிபுரியும் இடத்தில் இத்தன நாட்களாக யாருகிட்ட பேச வேண்டும் என்று நினைத்தீர்களோ அவர்களிடம் பேச வாய்ப்பு கிடைக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2

தற்பெருமை சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.04.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

தேவையில்லா சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உண்டு. ஆதாயமும் உண்டு. பெண்கள் உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்துக் கொள்ளவும். விலங்குகளிடம் எச்சரிக்கையோடு இருக்கவும். நண்பர்கள் வழியில் நற்செய்தி வரும். எதிரிகள் பகையை மறந்து பேசுவார்கள். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை அவசியம். வருமானம் எதிர்பாராத சந்தோசத்தை அள்ளி கொடுக்கும். துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 1

தற்பெருமை சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.04.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எதிலும் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு புதிய கூட்டாலி கிடைப்பார்கள். பணிபுரிவோருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்ப்புகள் விலகும் நாள். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. நிதிநிலையைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமான நாள். கையில் பணம் விளையாடும். அதை நல்ல விதமாக பயன்படுத்தினால், நன்மை. சிலர் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொறாமை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 9

தற்பெருமை சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.04.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

தள்ளிப்போன கரியாங்கள் திடீரென நடந்து முடியும். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கலை பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். முதலீடுகள் செய்வது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உடன் பணிபுரிபவர்களின் உதவி கிட்டும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. துணை உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தில் உதவி புரிவார். கவலைகள் விலகும் நாள். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

தற்பெருமை சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.04.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

தற்பெருமை சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. சிலருக்கு ஆடம்பரமான விஷயங்களால் விரயங்கள் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற போராடுவீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரலாம். கணவன் - மனைவி விட்டுக்கொடுத்து செல்லவும். வாகன பயணத்தின் போது நிதானம் தேவை. எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு வருமானம் அமோகமாக இருக்கும். அலுவலகத்தில் இருந்து பிரச்சனைகள் தீரும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

தற்பெருமை சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.04.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் எல்லாம் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள். ஒரு புதிய நபர்களால் வியாபாரத்தில் சின்ன தடுமாற்றம் ஏற்படும் ஜாக்கிரதையாக இருந்துக் கொள்ளவும். மனைவி இடையே சலசலப்பு இருக்கும். ஆனால், சமாளித்துவிடுவீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்த வரை சூப்பரோ சூப்பர். நெருங்கிய பந்தங்களிடம் இருந்து இனிமையான செய்து வந்து சேரும். பணிகளை விரைவாகவும் திறமையாகவும் செய்து முடிப்பீர்கள். மனைவி அல்லது காதலியுடன் வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்பு உண்டு. வரவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

தற்பெருமை சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.04.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

நினைத்தது நடக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மற்றவர்களுக்கு உதவியை வாரி வழங்குவீர்கள். இதனால், உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். காதலர்களிடையே அன்பு பெருகும். நீண்ட நாளாக உங்களை தொந்தரவு செய்து வந்த எதிர்ப்புகள் விலகும். செலவு செய்யும்போது மட்டும் கொஞ்சம் சிக்கனம் தேவை. வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். இணையம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 8

தற்பெருமை சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.04.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

உறவினர்கள் ஆதரவு உண்டு. எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கையை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் மீதான மதிப்பு மேம்படும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண வாழ்க்கையை பொறுத்த வரையில் ஆஹா. உங்களுடைய ஆசை அனைத்து நிறைவேறும் நாள். எதிர்பாராத பண வரவுகள் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கிறது. வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனம் தேவை. நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 5

தற்பெருமை சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.04.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

சில சிக்கலான சூழல் ஏற்படும். பொறுமை மற்றும் மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். உணர்வுப்பூர்வமான முடிவு எடுக்கும்போது நிதானத்தை இழந்துவிடக் கூடாது. வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். கொடுத்த கடன் திரும்பவரும். பணிச்சுமை மிகுந்து காணப்படும், மற்றவர்களின் உதவியும் கிடைக்காது. அது உங்களை டென்ஷன் ஆக்கலாம். ஒரு புதிய நபரால் தம்பதிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும். கவனமாக இருங்கள். நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசும்போது சற்று கவனத்தோடு பேசுங்கள். ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

தற்பெருமை சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.04.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

புதிய நபர்களிடம் கவனத்துடன் இருக்கவும். விளையாட்டான பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகருக்கும். சக ஊழியர்களால் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கு இடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். சிலருக்கு பிடித்த இடங்களுக்கு செல்வதில் தடை ஏற்படும்.  பயணம் செய்யும்போது விலையுயர்ந்த பொருட்களின் கவனமாக இருக்க வேண்டும். கண் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம், கவனமாக இருக்கணும். பிரீதி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

தற்பெருமை சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.04.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

மறைமுகமான திறமைகள் வெளிபடும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். தந்தைவழி தொழிலில் லாபகரமான சூழல் அமையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். கடினமான வேலையை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். புதிய வீடு, மனை அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. திடீர் விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 6

தற்பெருமை சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.04.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். போட்டி தேர்வுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் ரகசியங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உங்களால் முடியும் என்றால் மட்டும் வாக்குறுதி கொடுங்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை கூறும்போது எச்சரிக்கையாக இருங்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் 

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்