Sun ,Mar 03, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசியினர் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும், இல்லைனா சொத்து கையவிட்டு போய்டும்… ஜூலை 21, 2022 ராசிபலன்..!!

Nandhinipriya Ganeshan July 20, 2022 & 15:50 [IST]
Nalaya Rasi Palan: இந்த ராசியினர் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும், இல்லைனா சொத்து கையவிட்டு போய்டும்… ஜூலை 21, 2022 ராசிபலன்..!!Representative Image.

நல்ல நேரம்:

காலை: 10.45 – 11.45 வரை

மாலை: இல்லை

நாளைய ராசிபலன் (22.07.2022, வெள்ளிக்கிழமை)

Nalaya Rasi Palan: மங்களகரமான சுபகிருது வருடம் ஆடி மாதம் 5 ஆம் நாள் வியாழக்கிழமை (2022 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி) நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.


மேஷம் முதல் கன்னி வரை உள்ள முதல் 6 ராசியின் தினசரி ராசிபலன் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.


துலாம்

இன்று எந்த செயலையும் தைரியமாக மனஉறுதியோடு செய்து முடிப்பிங்க. சகோதர சகோதரிகள் யாரேனும் உங்களிடம் பணம் கேட்டு வீடு தேடி வருவார்கள். உங்களுக்கு சாதமாக ஒருகாரியம் நடக்க வேண்டுமென்றால் மிகுந்த அனுசரனையுடன் இருக்க வேண்டும். கடன் பிரச்சினைகள் குறையும். எக்காரணத்திற்காகவும் தன்னம்பிக்கையை மட்டும் இழந்துவிடாதீர்கள். வேலைசெய்யும் இடத்தில் வேலை பெண்டெடுக்கும், டென்ஷன் ஆகாமல் நிதானமாக செயல்படுவது புத்திசாலிதனம். இன்னைக்கு உடன் வேலைசெய்யும் பணியாளர்களுடன் ஜாக்கிரதையாகப் பழகுங்கள். வியாபாரத்தில் வருமானம் பெருகும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். ஜாக்கிரதை!

விருச்சிகம்

இன்று நம்பிக்கைக்கும் தன்னம்பிக்கைக்கும் சாதகமான நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நீங்க எதிர்பார்த்த விஷயத்திற்காக கடினமாக உழைக்க வேண்டும். சில பின்னடைவுகள் ஏற்படலாம். மனம் உடைந்துவிட வேண்டாம். இதுவும் கடந்து போகும். நெருக்கடி நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உதவி செய்வார்கள். அன்புக்குரியவரின் நடத்தையில் சந்தேகப் படாதீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நிகழ வாய்ப்புண்டு. புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம் எனவே தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது உத்தமம். சிலருக்கு பொன் பொருள் வாங்க யோகம் கிட்டும். அமைதி!

தனுசு

அமோகமான பலனை தரும் நாளாக இந்த நாள் இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் கிட்டும். வேலை செய்யும் இடத்தில் பணிசுமை அதிகமாக காணப்படும். இது உங்களை எரிச்சலடைய செய்யலாம். குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட வேண்டாம். தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புள்ளது. தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். அரசியல் பிரமுகர்களால் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். சிறப்பு!

மகரம்

இன்னைக்கு உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உங்க நண்பர்கள் யாராவது பெரிய தொகையை கடனாக கேட்டு வருவார்கள். இரத்த அழுத்த நோயாளிகள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். கடந்த காலத்திய மறந்து பிள்ளைகளுடன் பொழுதை மகிழ்ச்சியாக செலவிடுங்கள். எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை கொண்டு மகிழ்ச்சி அடைய முயற்சி செய்யுங்க, தேவையில்லாத மனகஷ்டத்தில் இருந்து விடுபட முடியும். பணத்தை கையாள்வதில் கவனம் தேவை. குறிப்பாக, தேவையில்லாமல் செலவு செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள். நற்செய்தி!

கும்பம்

நீங்க வெளியில் செல்லும்போது விலை மதிப்பு மிக்க பொருட்களில் கவனம் வேண்டும், அது திருட்டு போக வாய்ப்புள்ளது. இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். நண்பர்களின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் ரீதியாக சிலருக்கு வெளிநாடுகளிலிருந்து அழைப்புகள் வரலாம். இன்னைக்கு முக்கியமான விஷயங்களை நீங்க கையாளும் விதம் உங்ககூட வேலைசெய்யும் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால், அதை சொல்லமாட்டார்கள். எனவே, அது என்னவென்று கண்டுபிடித்து பிளான்களை மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனம். நினைத்த காரியம் நிறைவேறும். ஆகமொத்தத்தில் அதிர்ஷ்டகரமான நாள். அதிர்ஷ்டம்!

மீனம்

பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் மற்றவர்களுடைய நன்மதிப்பை பெறுவீர்கள். இன்று நம்பிக்கையோடு எதிர்ப்பார்த்து காத்திருந்த விஷயங்கள் நிறைவேறும். சொத்துக்களை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். இன்று உங்க துணையுடன் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. காமெடி, கிண்டலாக பேசுகிறோம் என்று எதையும் பேசிவிட வேண்டாம். கடைசியில் உங்களுக்கு தான் நஷ்டம். பார்த்து எச்சரிக்கையாக இருந்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். நம்பிக்கை!

Tags:

Tomorrow Rasipalan | Nalaya Sirappu Rasipalan | Nalaya Rasi Palan | Rasi Palan Today Tamil 2022 | Tomorrow Horoscope Tamil | Tamil Daily Rasi Palan | Inraiya raasi palan | INDRAYA RASI PALAN | Today Rasi Palan Astrology In Tamil | Today rasi palan in tamil 2022, Today rasi palan 2022 in tamil | Daily Rasi Palan in Tamil | Tomorrow Horoscope | 12 Signs of Tamil Horoscope | 12 signs of rasi palan in tamil 2022


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்