Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

Tomorrow Rasi Palan in Tamil: இவ்வளவு நாளா எதுக்கு காத்துட்டு இருந்திங்களோ, அது நிறைவேறும் நாள்.. இந்த இராசிக்கு யோகம் தான்.. ஜூலை 21, 2022 ராசிபலன்..!!

Nandhinipriya Ganeshan July 20, 2022 & 15:30 [IST]
Tomorrow Rasi Palan in Tamil: இவ்வளவு நாளா எதுக்கு காத்துட்டு இருந்திங்களோ, அது நிறைவேறும் நாள்.. இந்த இராசிக்கு யோகம் தான்.. ஜூலை 21, 2022 ராசிபலன்..!!Representative Image.

நல்ல நேரம்:

காலை: 10.45 – 11.45 வரை

மாலை: இல்லை

நாளைய ராசிபலன் (22.07.2022, வெள்ளிக்கிழமை)

Tomorrow Rasi Palan in Tamil: மங்களகரமான சுபகிருது வருடம் ஆடி மாதம் 5 ஆம் நாள் வியாழக்கிழமை (2022 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி) நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்

எதை பேசுவதாக இருந்தாலும் ஒருதடவைக்கு ரெண்டு தடவ யோசித்து பேசவேண்டும். நீங்க தெரியாம பேசும் ஒரு வார்த்தைக்கூட மற்றவர்களின் மனதை காயப்படுத்தும். பிள்ளைகள் மூலமாக மகிழ்ச்சிகரமான செய்தி காத்திருக்கு. ஆஃபிஸில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உங்களுடைய லட்சியத்தை அடைய சிலவற்றை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். திருமண சுப காரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தியாகம்!

ரிஷபம்

நீங்க எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். திருமண பற்றிய பேச்சுவார்த்தைகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். உங்க மனைவியை சமாளிக்க கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருக்கும். தொழில் சம்பந்தமாக வெளியிடங்களுக்கு செல்வீர்கள், அலைச்சலாக இருந்தாலும் நல்ல பலன்கள் உண்டு. நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். பண விவகாரத்தில் பெற்றோர் உதவி கிடைக்கும். கிரியேட்டி துறையில் வேலை செய்பவர்களுக்கு பேரும் புகழும் கிடைக்கும். ஆக மொத்தம் கஷ்டத்தில் சுகம் என்றே சொல்லலாம். புகழ்!

மிதுனம்

இன்று உங்க லட்சியத்தை அடைந்த சந்தோசத்தில் இருப்பிங்க. எதிர்கால வாழ்க்கை சம்பந்தமாக பயனுள்ள முடிவுகளை எடுப்பிங்க. சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். உங்க வளர்ச்சிக்கு உறவினர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகமாகும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரியின் பாராட்டு காத்திருக்கு. இது இப்படி தான் என்று எதிர்மறையாகவே பேசிய காலம்போய் என்னால் முடியும், நான் பண்ணுவேன் என்று நேர்மறையாக பேச தொடங்குவீர்கள். இதை உங்க குடும்பமே ஆச்சர்யப்படும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். யோகம்!

கடகம்

மற்றவர்களை நம்பியது போதும் என்று, சுயமாக முயன்று வெற்றி பெறுவீர்கள். இன்று நாள் முழுவதும் பாசிட்டிவ்வாகவே சிந்திப்பீர்கள். இதுவும் உங்களுக்கு இலக்கை அடைய உதவும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். இதுவரை மண்டைய போட்டு பிச்சிக்கொண்டு இருந்த பிரச்சனைகளில் இருந்து இன்று விடிவுகாலம் பிறக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். நீண்டநாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரிடம் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். அது அவர்களை சந்தோசப்படுத்தும். இந்த சமயத்தில் உங்க காதலை பற்றி பேசிவிடுங்கள். இன்று அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை!

சிம்மம்

அதிர்ஷ்டத்தை நம்புவதைவிட உங்க முயற்சியில் நம்பிக்கை வையுங்க, வெற்றி உங்களை தேடி வரும். இந்த உண்மையை நீங்க இன்னைக்கு உணர்ந்துக்கொள்வீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நிலையை பொறுத்த வரையில் தெம்புடனும் புது பொலிவுடனும் காணப்படும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணங்கள் செய்வீர்கள், இதனால் நல்ல பலன் கிடைக்கும். உணர்வுப்பூர்வமான முடிவு எடுக்கும்போது நிதானத்தை இழந்துவிடக் கூடாது. சந்திரன் நிலையால் பணம் தண்ணியாக செலவாகும். கணவன்-மனைவி இடையே சூடான விவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. வெற்றி!

கன்னி

இன்று குடும்பத்தில் சந்தோசமான சம்பவங்கள் நடைபெறும். தாயாகப் போகும் கர்ப்பிணி பெண்கள் தரையில் நடக்கும் போது கவனம் தேவை. துணிச்சலான ஸ்டெப்களும் முடிவுகளும் சாதகமான ரிவார்டுகளை கொண்டு வரும். வேலை அழுத்தத்தால் திருமண வாழ்க்கையில் இதுவரை இருந்த மனக்கசப்புகள் தீர்ந்து, கணவன்-மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் விஷயமாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். உறவினர்கள் வழியில் நல்ல செய்தி வரும். அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று சம்பாதியத்தை விட செலவு அதிகமாக காணப்படும். கவனம்!


துலாம் முதல் மீனம் வரை உள்ள அடுத்த 6 ராசியினருடைய தினசரி ராசிபலன் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.


Tags:

Nalaya Rasi Palan | Rasi Palan Today Tamil 2022 | Today Horoscope | Tomorrow Horoscope Tamil | Tamil Daily Rasi Palan | inraiya raasi palan | Today Rasi Palan Astrology In Tamil | Today rasi palan in tamil 2022 | Today rasi palan 2022 in tamil | Daily Rasi Palan in Tamil | Tomorrow Horoscope | Tomorrow Rasi Palan in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்