Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,014.23
8.29sensex(0.01%)
நிஃப்டி22,534.20
32.20sensex(0.14%)
USD
81.57
Exclusive

கன்னி ஜூலை மாத ராசிபலன் 2023 | July Month Rasi Palan 2023 Kanni in Tamil

Priyanka Hochumin Updated:
கன்னி ஜூலை மாத ராசிபலன் 2023 | July Month Rasi Palan 2023 Kanni in TamilRepresentative Image.

ஜூலை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ஜூலை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, மிதுன ராசியில் சூரியன், கடக ராசியில் புதன், சிம்ம ராசியில் சுக்கிரன் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூலை 06 ஆம் தேதி சுக்கிர பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 16 ஆம் தேதி சூரிய பகவான் கடக ராசிக்கும், புதன் பகவான் ஜூலை 08 ஆம் தேதி கடக ராசிக்கும் மற்றும் 24 ஆம் தேதி சிம்ம ராசிக்கும்  பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூலை மாதத்தில் கன்னி ராசி மற்றும் கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஜூலை மாத ராசிபலன் 2023 கன்னி:

இந்த ஜூலை மாதம் கன்னி ராசியினருக்கு, ஜாக்பாட் அடிக்கும் மாதமாக அமையும். தொழில், வியாபரம் போன்ற அனைத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் நினைத்தது நிறைவேறும். பலருக்கு முனைவர் பட்டம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எந்த தடங்கலும் இன்றி புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தெரிந்தவர்களின் சிபாரிசு மூலம் நல்லது நடக்கும்.

உங்கள் மீது மற்றவர்களுக்கு அளவற்ற நம்பிக்கை உருவாகும். நண்பர்களின் உதவி கேட்காமலையே கிடைக்கும். பல முன்னேற்றங்களை நீங்கள் கட்டாயம் சந்திப்பீர்கள். சொந்த ஊர் அல்லது குழந்தையை விட்டு வெளியூர் செல்லும் சூழல் அமையும். குழந்தைகளின் உடல்நிலையில் அதிக கவனம் வேண்டும். பீபி, சுகர், கொலஸ்ட்ரால் போன்ற நோய்களால் பாதிப்பு ஏற்படலாம். உற்றார் உறவினர்களை கவனித்துக் கொள்வீர்கள். உணவில் காரத்தை குறைப்பது நல்லது. சிலருக்கு காய்ச்சல் வரும் வாய்ப்புள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்