Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,917.03
253.31sensex(0.34%)
நிஃப்டி22,466.10
62.25sensex(0.28%)
USD
81.57
Exclusive

கும்பம் ஜூலை மாத ராசிபலன் 2023 | July Month Rasi Palan 2023 Kumbam in Tamil

Priyanka Hochumin Updated:
கும்பம் ஜூலை மாத ராசிபலன் 2023 | July Month Rasi Palan 2023 Kumbam in TamilRepresentative Image.

ஜூலை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ஜூலை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, மிதுன ராசியில் சூரியன், கடக ராசியில் புதன், சிம்ம ராசியில் சுக்கிரன் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூலை 06 ஆம் தேதி சுக்கிர பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 16 ஆம் தேதி சூரிய பகவான் கடக ராசிக்கும், புதன் பகவான் ஜூலை 08 ஆம் தேதி கடக ராசிக்கும் மற்றும் 24 ஆம் தேதி சிம்ம ராசிக்கும்  பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூலை மாதத்தில் கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஜூலை மாத ராசிபலன் 2023 கும்பம்:

ஜூலை மாதம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த மாதமாக அமையும். எல்லாரிடமும் ஞாயமாக நடந்துக்

கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களின் பேச்சை கேட்டு உங்களின் உயர் அதிகாரி நடப்பார். புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அப்பாவின் பேச்சிற்கு மறுப்பேச்சு பேசாமல் நடந்துக் கொள்வீர்கள். தந்தை மகன் பந்தத்தின் அந்யோனியம் அதிகமாக இருக்கும். எந்த ஒரு முடிவையும் சரியாக எடுத்துச் செல்வீர்கள் என்று மற்றவர்களுக்கு நம்பிக்கை வரும்.

கணவன் - மனைவிக்கு இடையே காதல், சண்டை போன்ற அனைத்து உணர்ச்சிகளுக்கும் வரும். பலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் நடைபெறாதவர்களுக்கு கல்யாணம் நடக்கும். புதிய விஷயங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். மன நிம்மதி நிறைந்த மாதமாக இருக்கும். வேலை செய்யும் அனைவருக்கும் கௌரவம் கிடைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்