Tue ,Apr 30, 2024

சென்செக்ஸ் 74,964.55
293.27sensex(0.39%)
நிஃப்டி22,723.90
80.50sensex(0.36%)
USD
81.57
Exclusive

பட்ட கஷ்டங்களில் இருந்து விடிவு காலம் பிறக்கும் ராசியினர்..!| August Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
பட்ட கஷ்டங்களில் இருந்து விடிவு காலம் பிறக்கும் ராசியினர்..!| August Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

ஆகஸ்ட் 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ஆகஸ்ட் மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரன், சிம்மம் ராசியில் செவ்வாய் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சூரிய பகவான் ஆகஸ்ட் 17 ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஆகஸ்ட் 07 ஆம் தேதி மிதுன ராசியில் உள்ள சுக்கிர பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதுமட்டுமல்லாமல், ஆகஸ்ட் 18 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்த செவ்வாய் பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆகஸ்ட் மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

பட்ட கஷ்டங்களில் இருந்து விடிவு காலம் பிறக்கும் ராசியினர்..!| August Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2023 மேஷம்:

ஆகஸ்ட் மாதம் மேஷ ராசியினருக்கு பெரிதளவு பாதிப்பை அளிக்காது. வேலையை பொறுத்த வரையில் அலைச்சல்கள் வந்து போகும். இதுவரை பல காரணங்களால் திருமணம் தடையாகும் சூழல் ஏற்பட்டு இருக்கலாம். அந்த தடை தாமதங்கள் நீங்கி கூடிய விரைவில் திருமணம் நடைபெறும். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் தங்களின் சம்மதத்தை அளிப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். இல்லத்தரசிகளுக்கு பல நாட்களாக இருந்த நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். மாணவர்கள் தங்கள் சிந்தனையின் போக்கில் தெளிவுடன் செயல்படுவார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

பட்ட கஷ்டங்களில் இருந்து விடிவு காலம் பிறக்கும் ராசியினர்..!| August Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2023 ரிஷபம்:

சுபச் செலவுகளால் பண விரையம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், சற்று கால தாமதம் ஆகலாம். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு சாதகமாக அமையும். தேவையில்லாத விஷயங்களை யோசிப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தின் சூழ்நிலை எப்பையும் போல சிறப்பாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகளின் படிப்பிற்காக பெற்றோர்கள் அதிகம் செலவு மேற்கொள்ளும் சூழல் அமையும். பெண்களுக்கு அமைதி இல்லாத மனநிலை உண்டாகலாம். எனவே, தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து அமைதியாக இருந்தால் எல்லாம் நன்றாக நடக்கும்.

பட்ட கஷ்டங்களில் இருந்து விடிவு காலம் பிறக்கும் ராசியினர்..!| August Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2023 மிதுனம்:

மிதுன ராசியினருக்கு இந்த ஆகஸ்ட் மாதம் கஷ்டங்களில் இருந்து நிவர்த்தியடையும் மாதமாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் நினைத்தது நடக்கும். சிறு சிறு தடங்கல் வந்தாலும் நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள். அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்கும். நடந்து முடிந்ததை நினைத்து வருந்தாமல், அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்து செயல்படவும். திருமணத்திற்காக வரன் தேடும் முயற்சியை மேற்கொள்ளலாம். வார்த்தைகளில் கனிவு இருந்தால் நல்லது. மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். தங்களின் எதிர்காலத்தை பற்றிய சிந்தனையில் தெளிவாக இருப்பார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்