Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தண்ணீரால் பிரச்சனை வரலாம் கவனமா இருங்க | June Month Rasi Palan 2023 Danush in Tamil

Priyanka Hochumin Updated:
தண்ணீரால் பிரச்சனை வரலாம் கவனமா இருங்க | June Month Rasi Palan 2023 Danush in TamilRepresentative Image.

ஜூன் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ஜூன் மாதத்தில் தனுஷ் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷப ராசியில் சூரியன், மிதுன ராசியில் சுக்கிரன், கடக ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் சந்திரன் மற்றும் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூன் 07 ஆம் தேதி புதன் பகவான் ரிஷப ராசிக்கும், ஜூன் 15 ஆம் தேதி சூரிய பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 24 ஆம் தேதி புதன் பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 30 ஆம் தேதி செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதேபோல், ஜூன் 17 ஆம் தேதி சனி பகவானின் வக்கிர நிலையானது ஆரம்பமாகிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் தனுஷ் ராசி மற்றும் தனுஷ் லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஜூன் மாத ராசிபலன் 2023 தனுஷ்:

வீடு, மனை, சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். கடன் சுமைகள் குறையும். உடலில் இருந்து வந்த நோய்கள் குறைய தொடங்கும். பல நாட்களாக இழுபறியாக இருக்கும் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மருத்துவம் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி மேம்படும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரியின் அனுகூலம் கிடைக்கும்.

தனுஷ் ராசியினருக்கு 8-ம் இடத்தில் சுக்கிரன், செவ்வாய் சேர்ந்து இருப்பதால் உடல்நிலை, வண்டி வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். நீர் இருக்கும் இடங்களில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். பல நட்பு வட்டாரங்களால் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு ஏற்படும். மூக்கு, வாய், தொண்டை சம்மந்தமான உபாதைகள் மீண்டும் வரலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்