Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

எதிர்பாராத இன்ப செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும்.. | June Month Rasi Palan 2023 Kadagam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
எதிர்பாராத இன்ப செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும்.. | June Month Rasi Palan 2023 Kadagam in TamilRepresentative Image.

ஜூன் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: 

ஜூன் மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷப ராசியில் சூரியன், மிதுன ராசியில் சுக்கிரன், கடக ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் சந்திரன் மற்றும் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூன் 07 ஆம் தேதி புதன் பகவான் ரிஷப ராசிக்கும், ஜூன் 15 ஆம் தேதி சூரிய பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 24 ஆம் தேதி புதன் பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 30 ஆம் தேதி செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதேபோல், ஜூன் 17 ஆம் தேதி சனி பகவானின் வக்கிர நிலையானது ஆரம்பமாகிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் கடக ராசி மற்றும் கடக லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஜூன் மாத ராசிபலன் 2023 கடகம்:

லக்னத்திலேயே சுக்கர, செவ்வாய் சேர்க்கை இருப்பதால் வாழ்க்கையில் தள்ளிப்போன பல முக்கியமான விஷயங்கள் அனைத்தும் எதிர்பாராமல் நடந்து முடியும். வண்டி, வாகனம் வாங்கும், மாற்றும் யோகம் உண்டு. கடகம், மீனம், விருச்சிகம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். இருப்பினும், இந்த காலக்கட்டத்தில் கணவன் உடல்நிலையில் கவனம் தேவை. பணியிடத்தில் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

தந்தையிடம் இருந்து எதிர்பாராத பரிசுகள் கிடைக்கப்பெறுவீர்கள். மாணவர்களுக்கு விரும்பிய படிப்பை தேர்வு செய்வீர்கள். தோல் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். இருப்பினும், ஜூன் 18 தேதியில் இருந்து சனி வக்கிரம் பெறுவதால் நண்பர்களின் உடல்நிலையில் பிரச்சனை வரும். பிரச்சனைகளை பாதியாக குறைய இந்த மாதத்தில் முனீஸ்வரரை வழிபாடு செய்யுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்