Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 73,830.54
-175.40sensex(-0.24%)
நிஃப்டி22,478.70
-23.30sensex(-0.10%)
USD
81.57
Exclusive

பதவி உயர்வை தரும் அற்புதமான மாதம்.. இருப்பினும் இவற்றை தவிர்க்க வேண்டும்.. | Aavani Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
பதவி உயர்வை தரும் அற்புதமான மாதம்.. இருப்பினும் இவற்றை தவிர்க்க வேண்டும்.. | Aavani Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

ஆவணி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: 

ஆவணி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் சூரியன் மற்றும் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஆவணி 18 ஆம் தேதி குருபகவான் வக்கிரமடைகிறார். அதேபோல், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் வக்கிரமடைந்து, வக்கிர நிவர்த்தியடைகிறார்கள். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆவணி மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

பதவி உயர்வை தரும் அற்புதமான மாதம்.. இருப்பினும் இவற்றை தவிர்க்க வேண்டும்.. | Aavani Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆவணி மாத ராசிபலன் 2023 துலாம்:

முக்கிய காரியங்கள் கவனம் தேவை. சிலருக்கு பழைய பிரச்சனை மீண்டும் தலைதூக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மாமியாரின் உடல்நிலைகளில் பாதிப்புகள் வரலாம். வியாபாரத்தில் வியாபாரம் செய்யவிடாமல் சிலர் பிரச்சனை செய்வார்கள். மாதத்தின் முதல் மோசமாக இருந்தாலும், அடுத்த சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. தம்பதிகளுக்கு அற்புதமான மாதம். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர் தேடி வந்து சப்ரைஸ் கொடுப்பார். புதிய வேலை தேடுபவர்களுக்கு இன்பசெய்தி காத்திருக்கிறது. 

பதவி உயர்வை தரும் அற்புதமான மாதம்.. இருப்பினும் இவற்றை தவிர்க்க வேண்டும்.. | Aavani Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆவணி மாத ராசிபலன் 2023 விருச்சிகம்:

நிறைய பேருக்கு முக்கியமான பதவி வாய்ப்புகள் தேடி வரும். அரசு பணிக்காக காத்திருந்தவர்களுக்கு அனுகூலப் பலன் உண்டு. எப்போதும் கடுகடுவென நடந்துக்கொண்ட மேலதிகாரிகள் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் பங்குக்கொள்வீர்கள். ஆனால், மாதத்தின் அடுத்தப் பகுதியில் எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதம் ஏற்படும். அனைவரிடமும் காரணமின்றி வெறுப்பை காட்டுவீர்கள். பயணத்தின் போது விலையுயர்ந்த பொருட்களின் மீது மிகுந்த கவனம் தேவை. வண்டி, வாகனங்களால் செலவு ஏற்படும். 

பதவி உயர்வை தரும் அற்புதமான மாதம்.. இருப்பினும் இவற்றை தவிர்க்க வேண்டும்.. | Aavani Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆவணி மாத ராசிபலன் 2023 தனுசு:

தந்தைவழியில் எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக நடக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம். சிலருக்கு இந்த காலக்கட்டத்தில் பெண்குழந்தைகள் பிறக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாதத்தின் நடுப்பகுதிக்கு பிறகு பண விஷயத்தில் ஏமாற்றத்தை சந்திக்க வாய்ப்புள்ளதால், எதில் முதலீடு செய்வதாக அறிந்து ஆராய்ந்து ஈடுபடுவது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் கவனம் தேவை. வண்டி, வாகனத்தால் திடீர் செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தத்தன்மை ஏற்படும். நம்பிக்கையில் தடை. வீட்டில் பெரியவர்களின் உடல்நிலைகளில் பாதிப்புகள் ஏற்படும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்குவீர்கள். தேவையில்லாத மனசஞ்சலங்கள் உண்டாகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்