Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நல்ல ஏற்றத்திற்கான காலம் இது...இருந்தாலும் வேலை செய்யும் இடத்தில் கவனாக இருங்கள்..!| June Month Rasi Palan 2023 Kumbam in Tamil

Priyanka Hochumin Updated:
நல்ல ஏற்றத்திற்கான காலம் இது...இருந்தாலும் வேலை செய்யும் இடத்தில் கவனாக இருங்கள்..!| June Month Rasi Palan 2023 Kumbam in TamilRepresentative Image.

ஜூன் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ஜூன் மாதத்தில் கும்பம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷப ராசியில் சூரியன், மிதுன ராசியில் சுக்கிரன், கடக ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் சந்திரன் மற்றும் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூன் 07 ஆம் தேதி புதன் பகவான் ரிஷப ராசிக்கும், ஜூன் 15 ஆம் தேதி சூரிய பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 24 ஆம் தேதி புதன் பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 30 ஆம் தேதி செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதேபோல், ஜூன் 17 ஆம் தேதி சனி பகவானின் வக்கிர நிலையானது ஆரம்பமாகிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஜூன் மாத ராசிபலன் 2023 கும்பம்:

தாய்மார்களுக்கு ஜூன் மாதம் அமோகமாக இருக்கும். சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அம்மாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் மேம்படும். நினைத்த இடத்தில் படிப்பதற்கான யோகம் உள்ளது. பிடித்த வேலை கிடைக்கும். வங்கி வேலைக்காக காத்திருந்தால் அது கூடிய விரைவில் உங்களுக்கு கிடைக்கும். கார் மற்றும் உணவு உற்பத்தி செய்யும் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல ஏற்றம் தரும் மாதமாக இருக்கும்.

புதிய முயற்சிகளில் நிறைய தடைகள் இருந்தால் அவை வெற்றிகரமாக நடைபெறும். கும்ப ராசியினருக்கு, 6-ம் இடத்தில் சுக்கிரனும், செவ்வாயும் இருப்பதால் தேவையில்லாத வம்புகளுக்கு போவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், வழக்கு தொடுத்தால் அது உங்களுக்கு தான் பதிப்பாக முடியும். உடல்நிலையில் அதிக கவனம் தேவை. தண்ணீரால் பல பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, ஜாக்கிரதையாக இருங்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய அங்கீகாரத்தை மற்றவர்கள் பிரித்துக்கொள்ள வாய்ப்புள்ளது. போட்டித் தெருவாக்களில் அவசர படாமல் கவனமாக செய்லபட வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்