Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

மாறி மாறி நல்ல விஷயங்கள் நடக்கும் மகிழ்ச்சிக்கான மாதம் இது..! | June Month Rasi Palan 2023 Magaram in Tamil

Priyanka Hochumin Updated:
மாறி மாறி நல்ல விஷயங்கள் நடக்கும் மகிழ்ச்சிக்கான மாதம் இது..! | June Month Rasi Palan 2023 Magaram in TamilRepresentative Image.

ஜூன் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ஜூன் மாதத்தில் மகரம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷப ராசியில் சூரியன், மிதுன ராசியில் சுக்கிரன், கடக ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் சந்திரன் மற்றும் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூன் 07 ஆம் தேதி புதன் பகவான் ரிஷப ராசிக்கும், ஜூன் 15 ஆம் தேதி சூரிய பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 24 ஆம் தேதி புதன் பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 30 ஆம் தேதி செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதேபோல், ஜூன் 17 ஆம் தேதி சனி பகவானின் வக்கிர நிலையானது ஆரம்பமாகிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் மகர ராசி மற்றும் மகர லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஜூன் மாத ராசிபலன் 2023 மகரம்:

பூர்வபுனிய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் புதன் சேர்ந்து இருப்பதால் மகர ராசியினருக்கு பெரும் யோகமான மாதமாக அமையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கூடிய விரைவில் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களால் பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அடுத்தடுத்து சுப காரியங்களால் வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், ரத்தம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

புதிய நபர்களை சந்திப்பதால் மனதில் தன்னம்பிக்கை குறையும் வாய்ப்புகள் உள்ளது. மகர ராசியில் சனி வக்கிரம் பெற்றிருப்பதால் தேவையில்லாத இடத்தில் பேசுவதை குறைப்பது நல்லது. வீண் விவாதங்களை அறவே தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக மகர ராசியினர் உங்களின் குடும்பங்களை பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு பற்கள் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். சில முக்கிய முடிவுகளை எடுக்கும் விஷயங்கள் தள்ளிப் போகலாம். பண வரவிற்கு ஏற்ப செலவுகள் இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்