Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. கவனமா இருக்க வேண்டிய ராசியினர்.. | Aadi Matha Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. கவனமா இருக்க வேண்டிய ராசியினர்.. | Aadi Matha Rasi Palan 2023 in TamilRepresentative Image.

ஆடி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: 

ஆடி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சூரியன் மற்றும் புதன், சிம்மம் ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஆடி மாதம் 08 ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஆடி 22 ஆம் தேதி சிம்ம ராசியில் உள்ள சுக்கிர பகவான் வக்கிரமடைந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆடி மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. கவனமா இருக்க வேண்டிய ராசியினர்.. | Aadi Matha Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆடி மாத ராசிபலன் 2023 மேஷம்:

உங்க ராசிக்கு 5ஆம் இடமான பூர்வம புண்ணிய ஸ்தானத்தில் புதன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் சஞ்சாரம் அமோகமான பலன்களை கொடுக்க இருக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் நீண்ட நாட்களாக சேருமா சேராதா என்று நிலையே இல்லாமல் இருந்த காதல் கைகூடி வரும். வண்டி, வாகனம் வாங்கக் கூடிய பிராப்தம் உண்டாகும். குறிப்பாக, கல்வி சம்பந்தபட்ட விஷயங்களில் இருந்துவந்த தடைகள் அகலும். பிடித்த படிப்பை படிக்க வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வெளிநாடுகளில் கல்வி பயலும் வாய்ப்பும் உருவாகும். மேலும், வீடு, நிலம் சார்ந்த விஷயங்களில் இருந்துவந்த வில்லங்கம் விலகும். 

நீண்ட நாட்களாக நல்ல வேலை கிடைக்காமல் இருந்த மேஷ ராசியினருக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்க வேண்டும் நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு அற்புதமான காலக்கட்டம்.  இருப்பினும், இந்த மாதத்தில் சுக்கிரன் வக்கிரம் பெருவதால் வீட்டில் இருக்கும் பெண்களின் உடல்நிலையில் கவனம் தேவை. அதேபோல், விலையுயர்ந்த பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கடன் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. கவனமா இருக்க வேண்டிய ராசியினர்.. | Aadi Matha Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆடி மாத ராசிபலன் 2023 ரிஷபம்:

உண்மையாகவே இந்த ஆடி மாதம் அருமையான பொற்காலம் என்றே சொல்லலாம். ஏனென்றால், வக்கிரமடைந்த சுக்கிரன் உங்க ராசிக்கு 3 ஆம் இடத்தில் சூரியனுடன் இணைவதால், புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குறிப்பாக அப்பா, மாமனார், மூத்த மகன் சம்பந்தபட்ட தடைகள் அனைத்தும் விலகும். மொபைல், லேப்டாப், வண்டி போன்றவை செலவு வைக்கும். 

அதேபோல், ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனை செய்யும்போது எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். சுப விரைய செலவுகள் அதிகரித்து காணப்படும். தாய்வழி உறவுகளால் சின்ன சின்ன பாதிப்புகள் ஏற்பட்டு நிவர்த்தியாகும். சிலர் இந்த காலக்கட்டத்தில் பணம் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் அளவிற்கு சூழ்நிலைகள் வரும். அதேபோல், உடல் நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தொட்டதுகெல்லாம் செலவு வரும்.. கவனமா இருக்க வேண்டிய ராசியினர்.. | Aadi Matha Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆடி மாத ராசிபலன் 2023 மிதுனம்:

உங்க ராசிக்கு 2 ஆம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சூரியனும், சுக்கிரனும் வக்கிரம் பெற்றிருக்கின்றன. அதனால், செலவுகள் கட்டுகடங்காமல் இருக்கும். எதிர்பாராத செலவுகள் வரிசையாக வரும். இருப்பினும், சிலருக்கு பாக்கிகள் வசூலாகவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகளுக்காக முன்பணம் கொடுக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. யாரிடமாவது வாக்கு கொடுக்கும்போது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். 

உயர் பதிவில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலம். படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியம் நல்லமுறையில் நிறைவேறும். வண்டி, வாகனத்தில் செல்லும்போது நிதானம் தேவை. கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையோடு இருக்கவும். ஒரு சிலருக்கு மூக்கு, தொண்டு, வாய் சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றபடி, வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்