Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நண்பர்களால் பிரச்சனை ஏற்படலாம்...யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்..!| June Month Rasi Palan 2023 Meenam in Tamil

Priyanka Hochumin Updated:
நண்பர்களால் பிரச்சனை ஏற்படலாம்...யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்..!| June Month Rasi Palan 2023 Meenam in TamilRepresentative Image.

ஜூன் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ஜூன் மாதத்தில் மீனம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷப ராசியில் சூரியன், மிதுன ராசியில் சுக்கிரன், கடக ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் சந்திரன் மற்றும் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூன் 07 ஆம் தேதி புதன் பகவான் ரிஷப ராசிக்கும், ஜூன் 15 ஆம் தேதி சூரிய பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 24 ஆம் தேதி புதன் பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 30 ஆம் தேதி செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதேபோல், ஜூன் 17 ஆம் தேதி சனி பகவானின் வக்கிர நிலையானது ஆரம்பமாகிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் மீன ராசி மற்றும் மீன லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஜூன் மாத ராசிபலன் 2023 மீனம்:

ஜூன் மாதம் மீன ராசியினருக்கு, நல்ல ஏற்றமான மாதமாக அமையும். ஆடம்பரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். பொருளாதார பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் நன்மைகள் நடக்கும். சில முக்கிய விஷயங்களுக்காக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். இடமாற்றம் மற்றும் தொழில் மாற்றத்திற்கான சிறந்த நேரம். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து மேம்படும். பெண்கள் விரும்பியது நடக்கும், எனவே மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மீடியா துறையில் இருப்பவர்களுக்கு பிரபலமாகும் யோகம் கிடைக்கும். குழந்தைகளின் உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும். வீடு, மனை வாங்கும் பிராப்தம் உள்ளது. எனவே, சொத்து சேர்க்கைக்கான காலம் இது. முட்டி மற்றும் கால் பாதத்தில் காயம் ஏற்படும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் நண்பர்கள் மூலமாக பிரச்சனைகள் வரலாம். அதனால் யார் சொல்வதையும் முற்றிலுமாக நம்ப வேண்டாம். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவசர படாமல், நிதானமாக செய்வது மட்டுமே உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்