ஜூன் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: ஜூன் மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷப ராசியில் சூரியன், மிதுன ராசியில் சுக்கிரன், கடக ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் சந்திரன் மற்றும் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூன் 07 ஆம் தேதி புதன் பகவான் ரிஷப ராசிக்கும், ஜூன் 15 ஆம் தேதி சூரிய பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 24 ஆம் தேதி புதன் பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 30 ஆம் தேதி செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதேபோல், ஜூன் 17 ஆம் தேதி சனி பகவானின் வக்கிர நிலையானது ஆரம்பமாகிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் சிம்ம ராசி மற்றும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
ஜூன் மாத ராசிபலன் 2023 சிம்மம்:
இந்த ஜூன் மாதத்தில் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் ஒன்பது நாள்களுக்கு இருக்கப் போவதால் தொழிலில் லாபம் உண்டாகும். பெரிய நபர்களின் ஆதரவால், தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய தொழில் செய்வதற்கான காலமாகவும் இந்த நேரம் அமைகிறது. பதவி உயர்வு, மதிப்பு கூடுதல் போன்றவையும் உங்கள் தொழிலுக்கு மேன்மை தரும். மிகப்பெரிய யோகம் மற்றும் அனுகூலம் நிறைந்த மாதமாக அமைய உள்ளது.
செவ்வாய் மற்றும் சுக்கிரன் கடக ராசியில் அமைய உள்ளது. அதாவது சிம்ம ராசிக்கு 12 ஆம் இடத்தில் உள்ளது. விரய ஸ்தானத்தில் இருப்பதால், இரவு நேரத்தில் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி இடையே வீண் விவாதங்கள் ஏற்படலாம். எனவே, நிதானமாக செயல்படுவது நல்லது. இந்த கால கட்டங்களில், பயணத்தில் தடங்கள் ஏற்படலாம். இதற்கு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஆண்மகனின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, அதிக கவனத்தில் இருப்பது நல்லது.
சனி வக்ரம் பெறும் சமயத்தில் அதாவது ஏழாவது இடத்தில் இருக்கும் போது அதன் பாதிப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும். தேவையில்லாத சில சலசலப்புகள் உருவாகலாம். எனவே, மிகக் கவனத்துடன் செயல்பட்டால், பெரிய பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். இந்த கால கட்டத்தில் முனீஸ்வரன் வழிபாடு மிகப்பெரிய ஏற்றத்தைத் தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…