Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நெருக்கமானவர்களால் பிரச்சனையைச் சந்திக்க போறீங்க..! கவனமா இருந்தா தப்பிக்கலாம்.. | June Month Rasi Palan 2023 Thulam in Tamil

Gowthami Subramani Updated:
நெருக்கமானவர்களால் பிரச்சனையைச் சந்திக்க போறீங்க..! கவனமா இருந்தா தப்பிக்கலாம்.. | June Month Rasi Palan 2023 Thulam in TamilRepresentative Image.

ஜூன் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ஜூன் மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷப ராசியில் சூரியன், மிதுன ராசியில் சுக்கிரன், கடக ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் சந்திரன் மற்றும் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூன் 07 ஆம் தேதி புதன் பகவான் ரிஷப ராசிக்கும், ஜூன் 15 ஆம் தேதி சூரிய பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 24 ஆம் தேதி புதன் பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 30 ஆம் தேதி செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதேபோல், ஜூன் 17 ஆம் தேதி சனி பகவானின் வக்கிர நிலையானது ஆரம்பமாகிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் துலாம் ராசி மற்றும் துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஜூன் மாத ராசிபலன் 2023 துலாம்:

இந்த ஜூன் மாதத்தில் துலாம் ராசிக்காரர்கள் சுமார் 9 நாள்களுக்கு அதாவது, 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை புதன், சூரியன் இரண்டும் இணைந்து ரிஷப ராசி என்று சொல்லக் கூடிய சுக்கிரன் வீட்டில் இணைந்திருக்கிறது. இதன் காரணமாக, நியைய நல்ல விஷயங்கள் நடக்கும். சந்தோஷம் உண்டாகலாம். மேலும், மனதிற்கு திருப்தி அளிக்கும் வகையில் அமையும். சுக்கிரன் என்றாலே சுகம் என்றே கூறுவர். பெண்களுக்கு ஒரு சிறப்பான மாதமாக இந்த மாதம் அமைகிறது. இதன் மூலம் உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சி பெருகும். விஷயத்தைத் தீரப் புரிந்து செயல்படுவீர்கள். இதனால், முதலீடு செய்தல், இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றில் உங்களுக்கு நன்மை உண்டாகும்.

உடல் நலத்தில் இருந்த பிரச்சனைகள் விலகுவதுடன், ஆரோக்கியத்தைத் தரும். கடகத்தில் சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்து இருப்பது தொழிலில் வீரியத்துடன் செயல்படுவீர்கள். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். உணவு சார்ந்த தொழில்கள் சிறப்பாக இருக்கும். சிறிய வியாபாரங்கள் அனைத்தும் நல்லதாகவே அமையும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். அரசு சார்ந்த துறையில் இருப்பவர்கள் அதீத கவனத்துடன் செயல்படுவது நல்லது. நிறைய நபர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் மாற்றம் உண்டாக வாய்ப்பு அதிகம் உண்டு.

சனி வக்ரம் அடையும் போது, துலாம் ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகலாம். கடன் சார்ந்த பிரச்சனைகள் விரைவில் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்படலாம். நெருக்கமான உறவினர்கள் வழியில் உங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, நன்மை, தீமை என இரு பலன்களையும் பெறப்போகும் மாதமாக அமைகிறது. புதிய மாற்றங்கள் உண்டாகக் கூடிய மாதமாக அமைகிறது. நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் மதுரை மீனாட்சியம்மன் வழிபாடு ஆகும். இது உங்களுக்கு வெற்றியைத் தரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்