Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொழிலில் அமோகமான லாபம் உண்டாகும். ஆனா, இந்த விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்..! | June Month Rasi Palan 2023 Viruchigam in Tamil

Gowthami Subramani Updated:
தொழிலில் அமோகமான லாபம் உண்டாகும். ஆனா, இந்த விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்..! | June Month Rasi Palan 2023 Viruchigam in TamilRepresentative Image.

ஜூன் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ஜூன் மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷப ராசியில் சூரியன், மிதுன ராசியில் சுக்கிரன், கடக ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் சந்திரன் மற்றும் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூன் 07 ஆம் தேதி புதன் பகவான் ரிஷப ராசிக்கும், ஜூன் 15 ஆம் தேதி சூரிய பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 24 ஆம் தேதி புதன் பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 30 ஆம் தேதி செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதேபோல், ஜூன் 17 ஆம் தேதி சனி பகவானின் வக்கிர நிலையானது ஆரம்பமாகிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் விருச்சிக ராசி மற்றும் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஜூன் மாத ராசிபலன் 2023 Viruchigam:

விருச்சிக ராசி மற்றும் விருச்சிக லக்னம் சார்ந்த நபர்களுக்கு, ஏழாம் இடத்தில் சூரியன், சுக்கிரன் சேர்ந்து இருப்பது, உங்களுக்குத் தொழிலில் நல்ல லாபத்தைத் தரும். நட்பு வட்டாரங்களால் ஏராளமான நன்மைகளைப் பெறுவீர்கள். பல்வேறு விதமான உதவிகளைப் பெறுவீர்கள். மற்றவர்களிடத்தில் உதவி கேட்டால், உடனே உங்களுக்குக் கிடைத்து விடும். வாழ்க்கைத் துணையின் வளம் சிறப்பாக உள்ளது. வாழ்க்கைத் துணையின் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். அந்த விசேஷங்களில் நீங்கள் முன்னின்று செயல்படுவீர்கள். முக்கியமான நபர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார சேர்க்கை அமோகமாக உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீடு, நிலத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி விடும். வெளிநாடு வாழ் நபர்களுக்கு நலமாக அமையும்.

சனி வக்ர பெயர்ச்சி அடையும் போது, வீடு, நிலம் சார்ந்தவற்றில் பிரச்சனைகள் வந்து மீண்டும் நல்ல நிலைமைக்கு வந்து சேரும். முக்கியமான கடன்கள் கொடுத்து வராமல் இருந்ததெல்லாம், தற்போது மீண்டும் உங்களை வந்தடையும். இது போல, நிறைய நன்மைகள் மற்றும் தீமைகள் உண்டு. இந்த காலகட்டத்தில் நன்மைகளே அதிகம் கிடைக்கும் காலமாக உள்ளது.

வழிபாடு செய்ய வேண்டிய தலம்: நாமக்கல் ஆஞ்சநேயர் வழிபாடு மிகப்பெரிய ஏற்றத்தைத் தரக்கூடியதாக அமைகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்