Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,872.29
66.14sensex(0.09%)
நிஃப்டி22,405.60
27.20sensex(0.12%)
USD
81.57
Exclusive

கடக ராசிக்காரங்க நிதானத்தோடு செயல்பட்டால் தான் இந்த பலன்களைப் பெற முடியும்..! | Kadagam Rahu Ketu Peyarchi Palan 2023 in Tamil

Gowthami Subramani Updated:
கடக ராசிக்காரங்க நிதானத்தோடு செயல்பட்டால் தான் இந்த பலன்களைப் பெற முடியும்..! | Kadagam Rahu Ketu Peyarchi Palan 2023 in TamilRepresentative Image.

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும். ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. இந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டின் அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள். அந்தவகையில், 2023 - 2025 க்கான ராகு-கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள் என்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி கடக ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.

கடக ராசிக்காரங்க நிதானத்தோடு செயல்பட்டால் தான் இந்த பலன்களைப் பெற முடியும்..! | Kadagam Rahu Ketu Peyarchi Palan 2023 in TamilRepresentative Image

கடகம் ராகு - கேது பெயர்ச்சி பலன் 2023-2025:

2023 – 2025 ஆம் ஆண்டு நடக்க உள்ள ராகு – கேது பெயர்ச்சியினால், கடக ராசிக்காரர்கள் எதிலும் எளிமையான வழிமுறைகளை அறிந்து கொள்வீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். சில தவறுகள் மூலம் புதிய பரிணாமத்தை உருவாக்குவீர்கள். எதிர்பாராத சில நிகழ்வுகளின் மூலம் மனதளவில் புதிய மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். மூலிகை தொடர்பான தொழில்களில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். கதை கட்டுரை போன்ற செயல்பாடுகளில் திறமைகள் வெளிப்படும். எதிர்பாலின மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். சிறு சிறு அவப்பெயர் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த சில பிரச்சனைகளுக்கு முடிவு உண்டாகும். மூத்த உறுப்பினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். மறைமுகமான சில எதிர்ப்புகள் உண்டாகும். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவி கிடைக்கும் தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.

பொருளாதாரத்தைப் பொறுத்த வரை, தனவரவில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். சொத்துக்கள் சார்ந்த செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும். தேவையற்ற ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். இழுபறியான சில தனவரவு கிடைக்கும். உடல் மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். அடிக்கடி பயணம் மேற்கொள்வதை குறைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

பெண்களுக்கு, திருமணமான தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொன் பொருட்களை வாங்கி மகிழ்கிறீர்கள். புத்திரர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வாகனம் மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் சாதகமான முடிவு உண்டாகும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் உதவி கிடைக்கும். அவ்வப்போதும் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். பணிகளில் பொறுப்புகள் மேம்படும் வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுக்களை பெறுவீர்கள். 

வியாபாரிகளுக்கு, செய்யும் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் மற்றும் லாபம் உண்டாகும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான மக்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய கூட்டாளிகள் இணைவின் மூலம் முதலீடுகள் மேம்படும். விவசாயிகளுக்கு, பயிர் விளைச்சலில் ஏற்ற இறக்கமான சூழல் காணப்படும். பாசன வசதிகளின் தன்மைகளை அறிந்து அதற்கேற்ப பயிர் விளைச்சலை மேற்கொள்ளவும். அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை உருவாக்கும். 

அரசியல்வாதிகளுக்கு, சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பாகையை சூடுவீர்கள். எதிலும் நேர்மையுடன் செயல்படவும். அதிகாரம் கொண்டவர்களின் தொடர்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் பதவிக்கான முயற்சிகள் கைகூடும். கலைஞர்களுக்கு, கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். எதிர்பாராத வெளியூர் தொடர்பான பயணம் மற்றும் வாய்ப்புகள் கைகூடும். கலைத்துறையை சார்ந்து புதிய கல்வி தொடர்பான தேடல்கள் அதிகரிக்கும். தமக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். 

மாணவர்களுக்கு கல்வியில் ஒரு விதமான மந்தத்தன்மையான சூழல் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர் கல்வி தொடர்பான சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் கல்விக்கு மீறிய அனுபவத்தை பெறுவீர்கள். ராகு கேது பெயர்ச்சியின் மூலம் மனதளவில் புதிய மாற்றம் உண்டாகும். மேலும் இலக்குகள் பிறக்கும். பயணம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் வாராஹி அம்மனை வழிபாடு செய்து வர சிந்தனை மற்றும் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்