Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது? | Kan Thudippu Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
ஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது? | Kan Thudippu Palan in TamilRepresentative Image.

பொதுவாகவே அனைவருக்கும் சில சமயம் கண்கள் துடிக்கும். இப்படி துடிக்கும் போது அது இடது கண்ணாக இருந்தால் நல்லது நடக்கும், வலது கண்ணாக இருந்தால் கெட்டது நடக்கப்போகிறது என்று நம்மில் பலரும் நினைத்துக் கொள்வது வழக்கம். மன அழுத்தம், தூக்கமின்மை, உடலில் சத்து குறைப்பாடு, போதை பழக்கம், மூளை தொடர்பான பிரச்சனை, கண்களுக்கு தொடர்ச்சியாக வேலை கொடுப்பது போன்று கண்கள் துடிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இவையெல்லாம் மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது. இருப்பினும், ஒருவருக்கு கண் துடிப்பதால் சில பலன்களை கொடுக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது. சரி, வாங்க உங்களுக்கு எந்த கண் துடித்தால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம். 

ஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது? | Kan Thudippu Palan in TamilRepresentative Image

கண் துடிப்பு பலன்:

  • வலது கண் புருவம் துடித்தால், குடும்பத்தில் பண பற்றாக்குறை நீங்கி பணவரவு அதிகரிக்கும்.
  • இடது கண் புருவம் துடித்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்று அர்த்தம். 
  • புருவ மத்தி துடித்தால் நமக்கு பிடித்தவர்களுடன் இருப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.
  • கண் நடுப்பாகம் துடித்தால், மனைவியை பிரிந்து இருக்கும் நிலை ஏற்படும்.
  • வலது கண் துடித்தால் நினைத்த காரியம் வெற்றியில் முடியும். 
  • இடது கண் துடித்தால் மனைவியை பிரிந்து இருக்க வேண்டிய சூழல் உருவாகும். சில துக்க நிகழ்வுகள் நடைபெறும். 
  • வலது கண் இமை துடித்தால், மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி வரப்போகிறது என்று அர்த்தம்.
  • இடது கண் இமை துடித்தால், வருத்தமளிக்கக்கூடிய காரியம் ஏதேனும் நடக்கப்போகிறது என்று அர்த்தம்.
  • வலது கண் கீழ் இமை துடித்தால் அடுத்தவர் செய்த தவறுகளை தாம் சுமக்க நேரிடும்.
  • இடது கண் கீழ் இமை துடித்தால் செலவு அதிகளவில் வரும் என்பதை குறிக்கும். 
  • பெண்களுக்கு வலதுபக்க கண் துடித்தால் தீமை - ஆண்களுக்கு வலதுபக்க கண் துடித்தால் நன்மை.
  • பெண்களுக்கு இடதுபக்க கண் துடித்தா நன்மை - ஆண்களுக்கு இடதுபக்க கண் துடித்தால் தீமை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்