Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,872.29
66.14sensex(0.09%)
நிஃப்டி22,405.60
27.20sensex(0.12%)
USD
81.57
Exclusive

சகல பாக்கியங்களும் தரும் பாக்கிய குரு.. இனி சிம்ம ராசிக்கு யோகம் தான்..| Simmam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
சகல பாக்கியங்களும் தரும் பாக்கிய குரு.. இனி சிம்ம ராசிக்கு யோகம் தான்..| Simmam Guru Peyarchi Palan 2023 to 2024 in TamilRepresentative Image.

வியாழன் கிரகம் தான் தேவர்களின் 'குரு' என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குரு பகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு குறைந்தது 12 மாதங்களாவது (1 வருடம்) எடுத்துக் கொள்வார். அந்தவகையில், இந்த ஆண்டு குரு பகவான் ஏப்ரல் 22, 2023 ஆம் தேதி மீனத்தை விட்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்குவதோடு, 12 ராசியிலும் பல மாற்றங்கள் மற்றும் திருப்பங்களை ஏற்படுத்தும். அந்தவகையில், மிதுன ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எந்த மாதிரியான பலன்களை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம். 

சகல பாக்கியங்களும் தரும் பாக்கிய குரு.. இனி சிம்ம ராசிக்கு யோகம் தான்..| Simmam Guru Peyarchi Palan 2023 to 2024 in TamilRepresentative Image

சிம்மம் ராசி குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024

மனதில் பட்டதையெல்லாம் மறைக்காமல் பேசும் சிம்ம ராசி அன்பர்களே! சூரிய பகவானை ராசி அதிபதியாக கொண்ட நீங்க இதுவரைக்கும் யாருக்கும் எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் உதவி செய்துவருவீர்கள். அப்படிபட்ட உங்களுக்கு இதுவரை உங்க ராசியின் மறைவு ஸ்தானமான 8வது வீட்டிலிருந்து தடுமாற்றத்தையும், கையில் காசு பணம் இல்லாமல் களங்கவும் செய்த குருபகவான், இனி உங்க ராசிக்கு பாக்கிய வீடான 9ஆம் வீட்டில் நுழையவுள்ளார். இந்த யோகத்தால் இனி உங்க வாழ்க்கையில் பல விதமான நன்மைகள் நடக்கப்போகிறது. தொட்டது துலங்கும். 

சகல பாக்கியங்களும் தரும் பாக்கிய குரு.. இனி சிம்ம ராசிக்கு யோகம் தான்..| Simmam Guru Peyarchi Palan 2023 to 2024 in TamilRepresentative Image

குடும்பத்தில் இத்தனை நாட்களாக இருந்த குழப்பங்கள், பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கப்போகிறது. கணவன்-மனைவிக்கு இடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் இருவருக்கும் இடையே இருந்த விரிசல், கருத்துவேறுபாடுகள் அனைத்தும் தீரும். தள்ளிப்போன சுப காரியங்கள் அனைத்தும் தானாகவே கூடிவரும் காலம். வீட்டில் மகிழ்ச்சி, நிம்மதி ஏற்படும். எவ்வளவு உழைத்தாலும் கையில் நாலு காசு பார்க்க முடியவில்லையே என்று வெறுத்துப்போன உங்களுக்கு யோகம் அடிக்கப் போகுது. எதிர்காலத்திற்கு சேர்த்து வைக்கும் அளவிற்கு தனவரவு உண்டாகும். 

சகல பாக்கியங்களும் தரும் பாக்கிய குரு.. இனி சிம்ம ராசிக்கு யோகம் தான்..| Simmam Guru Peyarchi Palan 2023 to 2024 in TamilRepresentative Image

குடும்ப விஷேசங்களில் ஒதுக்கப்பட்ட, மரியாதை தரைக்குறைவாக நடத்தப்பட்ட உங்களை இனி முழு மரியாதையுடன் உபசரிக்கப்படுவீர்கள். சமுதாயத்தில் மதிப்பு உயரும். வீடு, மனை வாங்குவது சம்பந்தமான எண்ணங்கள் நிறைவேறும். சிலருக்கு புதுவீடு கட்டி குடிப்பெயரவும் யோகம் உண்டு. குருபகவானின் பார்வை உங்க ராசி 3வது வீட்டில் விழுவதால், இதுவரை பாடாய் படுத்திய கடன் பிரச்சனையிலிருந்து விடுதலையாகப் போகிறீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். சிலருக்கு வாகன யோகமும் உண்டு. குரு உங்க ராசியின் 5வது வீட்டை பார்ப்பதால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சகல பாக்கியங்களும் தரும் பாக்கிய குரு.. இனி சிம்ம ராசிக்கு யோகம் தான்..| Simmam Guru Peyarchi Palan 2023 to 2024 in TamilRepresentative Image

மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிப்பதற்கான, வேலைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். திருமணத்தடை விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அனைவரிடமும் அன்பாகவும், பண்பாகவும் நடந்துக்கொள்வீர்கள். அரசியல் வாதிகளாக இருந்தால் தேவையில்லாத வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் ஏற்படும். சுற்றி இருப்பவர்களின் சுய ரூபத்தை உணர்த்தும் விதமாக இந்த காலக்கட்டம் அமையப்போகிறது. இழுபறியாக இருந்த வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதமாக இருக்கும். வியாபாரத்தில் எதிரிகள் குறைவார்கள், லாபம் அதிகரிக்கும். வேலைவாய்ப்பு சமந்தமாக அலைந்துக் கொண்டிருப்பவர்களுக்கு கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும். 

சகல பாக்கியங்களும் தரும் பாக்கிய குரு.. இனி சிம்ம ராசிக்கு யோகம் தான்..| Simmam Guru Peyarchi Palan 2023 to 2024 in TamilRepresentative Image

பரிகாரம்:

வியாழக்கிழமை தோறும் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லவிதமான பலன்களை கொடுக்கும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை வழிபடுவது சிறந்தது. உங்களால் முடிந்த அளவிற்கு ஏழை எளியோருக்கு தானம் தர்மங்கள் செய்ய முயற்சியுங்கள். இதன் மூலம் மனதில் நிம்மதி, சந்தோஷம் ஏற்படும். இந்த ஒருவருடத்தில் ஒருமுறையாவது ஆலங்குடி சென்று குருபகவானை வணங்கி வாருங்கள். அப்படி இல்லையென்றால் தஞ்சாவூர் அருகே உள்ள ராஜகுருவாக உள்ள குருபகவானை வழிபாடு செய்தால் மலையளவு உள்ள கஷ்டங்கள் அனைத்தும் கடுகளவுக்கு குறையும்.

இதையும் படிங்க:

◆ மேஷம் குருப்பெயர்ச்சி பலன்

◆ ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்

◆ மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்

◆ கடகம் குருப்பெயர்ச்சி பலன்

◆ சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்

◆ கன்னி குருப்பெயர்ச்சி பலன்

◆ துலாம் குருப்பெயர்ச்சி பலன்

◆ விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்

◆ தனுசு குருப்பெயர்ச்சி பலன்

◆ மகரம் குருப்பெயர்ச்சி பலன்

◆ கும்பம் குருப்பெயர்ச்சி பலன்

◆ மீனம் குருப்பெயர்ச்சி பலன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்