Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வக்கிர சனியால் அடுத்தடுத்த பிரச்சனை வரிசைக்கட்டி அடிக்கும்.. | Kanni Sani Vakra Peyarchi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
வக்கிர சனியால் அடுத்தடுத்த பிரச்சனை வரிசைக்கட்டி அடிக்கும்.. | Kanni Sani Vakra Peyarchi Palan 2023 in TamilRepresentative Image.

ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அதேபோல், சில கிரகம் உதயமாகும், அஸ்தமனமாகும் மற்றும் பின்நோக்கி நகரும். அதன்படி, ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆபத்தான கிரகமாக கருதப்படும் சனி கிரகம் அனைத்து கிரகங்களை காட்டிலும் மெதுவாக நகரக்கூடியது. சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளுவார். 

அந்தவகையில், சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் ஜனவரி 17 ஆம் தேதி அவிட்டம் 3 ஆம் பாதத்தில் மாலை 06.30 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு, மார்ச் 14 ஆம் தேதி சதய நட்சத்திற்கு மாறினார். இந்த நிலையில், வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் பின்நோக்கி நகரப் போகிறார். இதை தான் 'சனி வக்ரம்' என்று சொல்வார்கள். பொதுவாக, சனி 133 நாட்களுக்கு வக்ர நிலையில் நகரும். அதன்படி, ஜூன் 17 தேதியில் இருந்து வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை வக்ர நிலையிலேயே இருப்பார். இந்த காலக்கட்டத்தில் கன்னி ராசியினர் எம்மாதிரியான பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

வக்கிர சனியால் அடுத்தடுத்த பிரச்சனை வரிசைக்கட்டி அடிக்கும்.. | Kanni Sani Vakra Peyarchi Palan 2023 in TamilRepresentative Image

சனி வக்ர பெயர்ச்சி 2023 கன்னி: 

சனி பகவான் உங்க ராசிக்கு ருனரோக சத்திர ஸ்தானமான 6வது வீட்டில் வக்கிர நிலை அடையப் போகிறார். இதனால், இளைய சகோதர்களால் பணம் சார்ந்த வகையில் சொந்தரவு வரலாம், அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. முக்கிய விஷயங்களில் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் தடை, தாமதம் வரும். எனவே எந்த விஷயத்திலும் நிதானம் தேவை. தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் வார்த்தைகளால் அடிக்கடி பிரச்சனை வரும். பொருளாதார நெருக்கடிகள் வரும். குடும்பத்தில் அடிக்கடி மருத்துவ செலவும் நேரிடலாம். கடன் வாங்கி குடும்பத்தை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். 

தொழில் வியாபாரத்தில் மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. வாகனத்தில் செல்லும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முடிந்த வரை இரவு பயணங்களை தவிர்த்து விடுங்கள். அதேபோல், ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் ரொம்ப கவனம் தேவை. வெளி உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ராகு பகவான் 8வது வீட்டில் இருப்பதால் விஷ ஜந்துக்களால் ஆபத்து வரலாம். கணவன் - மனைவி விட்டுக்கொடுத்து செல்லவும். தாய்மாமன் வழி பந்தங்களால் விரயங்கள் வரும். குடும்ப சார்ந்த விஷயங்களில் முடிவு எடுக்கும்போது ஒருமுறைக்கு மூன்று முறை யோசித்து செயல்படுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்