Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
0.00sensex(0.00%)
நிஃப்டி22,402.40
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

மன உலைச்சல் எல்லாம் முடிவுக்கு வரும்.. அதே சமயம் இதுல கவனம் இல்லன்னா பெரிய பிரச்சனை வரலாம்.. | Kumbam Sani Vakra Peyarchi Palan 2023 in Tamil

Gowthami Subramani Updated:
மன உலைச்சல் எல்லாம் முடிவுக்கு வரும்.. அதே சமயம் இதுல கவனம் இல்லன்னா பெரிய பிரச்சனை வரலாம்.. | Kumbam Sani Vakra Peyarchi Palan 2023 in TamilRepresentative Image.

ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அதேபோல், சில கிரகம் உதயமாகும், அஸ்தமனமாகும் மற்றும் பின்நோக்கி நகரும். அதன்படி, ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆபத்தான கிரகமாக கருதப்படும் சனி கிரகம் அனைத்து கிரகங்களை காட்டிலும் மெதுவாக நகரக்கூடியது. சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளுவார்.

அந்தவகையில், சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் ஜனவரி 17 ஆம் தேதி அவிட்டம் 3 ஆம் பாதத்தில் மாலை 06.30 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு, மார்ச் 14 ஆம் தேதி சதய நட்சத்திற்கு மாறினார். இந்த நிலையில், வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் பின்நோக்கி நகரப் போகிறார். இதை தான் 'சனி வக்ரம்' என்று சொல்வார்கள். பொதுவாக, சனி 133 நாட்களுக்கு வக்ர நிலையில் நகரும். அதன்படி, ஜூன் 17 தேதியில் இருந்து வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை வக்ர நிலையிலேயே இருப்பார். இந்த காலக்கட்டத்தில் கும்ப ராசியினர் எம்மாதிரியான பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

மன உலைச்சல் எல்லாம் முடிவுக்கு வரும்.. அதே சமயம் இதுல கவனம் இல்லன்னா பெரிய பிரச்சனை வரலாம்.. | Kumbam Sani Vakra Peyarchi Palan 2023 in TamilRepresentative Image

சனி வக்ர பெயர்ச்சி 2023 கும்பம்:

கும்ப ராசி மற்றும் கும்ப லக்னம் சார்ந்த நபர்களுக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சி, நல்ல பலன்களைத் தரவல்லதாக அமைகிறது. ஜென்ம சனி காலகட்டத்தில், நிம்மதி இல்லாத நிலை, வாழ்க்கையில் எதிலும் பிடிப்பு இல்லாத நிலை, வாழ்க்கை தலைகீழாக மாறும் நிலை ஏற்படும். அதே போல, திடீர் விபத்துகள், பணிச்சுமை, மாணவர்களுக்கு மந்தத் தன்மை உள்ளிட்டவை மன உளைச்சல்களைத் தரும். இந்த ஜென்ம சனி பலம் இழக்கும் நேரம், அதாவது சனி பகவான் வக்ரம் அடையும் நேரம் கும்ப ராசிக்கு நன்மை தருபவையாக அமையும்.

இந்த நேரத்தில், அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும். மன நிம்மதி கிடைக்கும். குழப்பங்கள் தெளிந்து, தெளிவான புரிதல் உண்டாகும். வாழ்க்கைக்கு எது முக்கியம் என்பதை நீங்கள் உணர்ந்து செயல்படுவீர்கள். குழப்பங்கள் அனைத்தும் விலகி, தெளிவான முடிவுகளை எடுக்கக் கூடிய மாற்றம் உண்டாகும். இந்த நேரம், சுயபுத்தி தெளிவு கிடைக்கும். சனி வக்ரம் அடையும் இந்த நேரத்தில், உங்களுக்குப் பக்குவநிலை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடக்கூடிய நாள்களாக அமைய உள்ளது. உங்களது மகிழ்ச்சி மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரவல்லதாக அமைகிறது.

இந்த நேரத்தில் குரு பகவான், குழப்பத்தைத் தரக் கூடியதாகவும் அமைவார். அதே சமயம், வெற்றியைப் பெறுவதற்கான நல்ல சூழலாக அமையும். இந்த நேரத்தில், குழப்பம் அடையாமல், தெளிவான முடிவு எடுப்பதுடன், அதிலிருந்து பின்வராமல் இருப்பது உச்சிதம். யாருக்காகவும் உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளாதீர்கள். தைரியம் உண்டாகும். அதே சமயம், பயம், பதற்றம் போன்றவையும் உண்டாகலாம். இந்த இரட்டைத் தன்மை நேரத்தில், மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது.

இளைய சகோதரர், சகோதரி வகையில் சிறிது நன்மைகளும் இருக்கும் எதிர்ப்புகளும் இருக்கும். சகோதர, சகோதரி வகையில் உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். இதனால், விரயச் செலவு ஏற்பட வாய்ப்புண்டு. இருப்பினும், உங்களுக்கு மிகுந்த உதவியாக இருப்பார். இதுவரை இருந்த பிரச்சனைகள் கட்டுக்குள் வந்து முடிவுக்கு வரும். நீங்கள் நல்லது கூறுவதாக இருந்தாலும், மற்றவர்களுக்குப் பிரச்சனை வருவது போலத் தோன்றலாம். எனவே, பேசும் விதத்தில் தெளிவாக இருப்பது நல்லது.

வாழ்க்கைத் துணையால் பிரச்சனை ஏற்படலாம். இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதே நேரத்தில், புதிதாக திருமணம் செய்தவர்களுக்கு இடையே இருந்த பிரச்சனைகள், இந்த சனி வக்ர பெயர்ச்சியில் பிரச்சனைகள் முடிந்து விடும். நீங்கள் ஆசைப்பட்ட அனைத்தும் நன்றாக நடக்கும். தெளிவுடனும், புரிதலுடன் காணப்படுவீர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்