Sun ,May 26, 2024

சென்செக்ஸ் 75,410.39
-7.65sensex(-0.01%)
நிஃப்டி22,957.10
-10.55sensex(-0.05%)
USD
81.57
Exclusive

தேவையற்ற சகவாசத்தை தவிர்ப்பது நல்லது...பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் |Kumbam Rahu Ketu Peyarchi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
தேவையற்ற சகவாசத்தை தவிர்ப்பது நல்லது...பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் |Kumbam Rahu Ketu Peyarchi Palan 2023 in TamilRepresentative Image.

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும்  ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. இந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டின் அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள். அந்தவகையில், 2023 - 2025 க்கான ராகு-கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள் என்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி கும்ப ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.

தேவையற்ற சகவாசத்தை தவிர்ப்பது நல்லது...பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் |Kumbam Rahu Ketu Peyarchi Palan 2023 in TamilRepresentative Image

கும்பம் ராகு - கேது பெயர்ச்சி பலன் 2023-2025:

கும்ப ராசி சிறப்பான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் யாவும் நினைத்தபடி நிறைவேறும். கடந்த கால அலைச்சல் மன அழுத்தம் எல்லாம் விலகி நிம்மதியான நிலை ஏற்படும். சிலருக்கு வெளியூர் பயணங்களால் மேன்மைகள் ஏற்படும். அன்றாட செயல்களில் திறம்பட செயல்படுவீர்கள். கடந்த கால வீண் செலவுகள் குறையும். மனைவி மற்றும் குழந்தைகள் சுபிட்சமாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலை இருக்கும். உறவினர்களின் வருகையால் நற்பலன்கள் ஏற்படும். பிரிந்த சொந்தங்களும் தேடிப்பந்து நட்பு பாராட்டும். சொந்த பூமி மனை வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆவதுடன் கடன்கள் நிவர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்றாலும் ராகுவின் சாதகமான சஞ்சாரத்தால் எதையும் சமாளித்து முன்னேற்றங்களை அடைப்பீர்கள்.

உடல்நிலை

உடல் நிலையில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூல பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனக்கவலை ஏற்படலாம் என்பதால் அவர்களிடம் கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேரும், நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்தியோகஸ்த்தர்களுக்கு

கடந்த கால தடைகள் விலகி பணியில் பதவி உயர்வுகள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். இருக்கும் இடத்தில் கௌரவமும் பேரும் புகழும் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். அலச்சல்கள் குறைந்து எதிலும் நிம்மதியாக இருக்க முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடம் மாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்வார்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவீர்கள். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும் என்பதால் வேலைப்பளுவு சற்று அதிகரிக்கும். உங்கள் வங்கி கடன்கள் சற்று குறையும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று கவனம் தேவை.

அரசியல்

மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மனமகிழ்ச்சி ஏற்படும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் வர வேண்டிய பண வரவுகள் வந்து சேரும்.

விவசாயம்

விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளைப்பொருட்களுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைப்பதால் லாபங்கள் பெருகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு கிடைக்க மாட்டார்கள் என்பதால் எதிலும் நீங்கள் நேரடியாக செயல்பட வேண்டி இருக்கும்.

கலை

கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவை பெறுவீர்கள். இதுவரை நிலுவையில் இருந்த பணத்தொகைகள் கைக்கு கிடைக்கும்.

பெண்கள்

பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இயற்கை உணவுகளை எடுத்துக் கொண்டால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

மாணவர்கள்

கல்வியில் முன்னேற்றமான நிலை இருக்கும். தேவையற்ற நட்புகளையும் பொழுதுபோக்குகளையும் தவிர்ப்பது நல்லது. திறனை வெளிப்படுத்தும் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். அரசு பள்ளியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் - 5, 6, 8

அதிர்ஷ்ட திசை - மேற்கு

அதிஷ்ட கல் - நீலக்கல்

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நீளம்

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவது நற்பலன்களை அளிக்கும். சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது நல்லது. திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலாஜி வெங்கடாஜலபதியை வழிபடுவது, சனிபகவானுக்கு கருப்பு நிற பஸ்திரம் சாற்றி நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்